Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிரபாதம் 2 | pirapātam n. <> pra-bhāta. Break of day; விடியற்காலை. (யாழ். அக.) |
| பிரபாதம் 3 | pirapātam n. <> pra-pātha. Street; தெரு. (யாழ். அக.) |
| பிரபாதிகம் | pirapātikam n. <> prapādika. Peacock; மயில். (யாழ். அக.) |
| பிரபாலன் | pirapālaṉ n. <> pra-bāla. Disciple, pupil; மாணாக்கன் (யாழ். அக.) |
| பிரபாவம் | pirapāvam n. <> pra-bhāva. (யாழ். அக.) 1. Dignity, majesty, pre-eminence, grandeur; மேன்மை. 2. Glory, renown; 3. Light, splendour, lustre; 4. Strength, valour; |
| பிரபாவனம் | pirapāvaṉam n. <> prapā-vana. Cool grove; குளிர்சோலை. (யாழ். அக.) |
| பிரபிதாமகன் | pirapitāmakaṉ n. <> pra-pitāmaha. Great-grandfather; கொட்பாட்டன். பிதாபிதாமகர் . . . பிரபிதாமகரா மருவு மூவர் (சேதுபு. துராசா. 55). |
| பிரபிதாமகி | pirapitāmaki n. <> pra-pitā-mahī. Great-grandmother; கொட்பாட்டி. |
| பிரபு | pirapu n. <> pra-bhu. 1. Lord, noble; பெருமையிற் சிறந்தோன். 2. A man of wealth; 3. A man in power; 4. Benefactor; 5. Quick-silver; |
| பிரபுசத்தி | pirapu-catti n. <> id.+ šakti. The power of a king derived from his resources in men and money, one of mu-c-catti, q.v.; முச்சத்திகளுள் பொருள் படைகளால் அரசர்க்கு அமையும் ஆற்றல். (இரகு. திக்கு. 25.) |
| பிரபுத்தன் | piraputtaṉ n. <> pra-buddha. 1. Wakeful person; விழிப்புள்ளவன். 2. One who has attained majority; |
| பிரபுத்துவம் | piraputtuvam n. <> pra-bhu-tva. 1. Rank or status of a nobleman; பிரபுவின் தன்மை. பிரபுத்துவகுமார (திருப்பு. 870). 2. Power, sovereignty; |
| பிரபுமோடி | pirapu-mōṭi n. <> pra-bhu+. Lordly style; பெருமிதம். |
| பிரபுலிங்கல¦லை | pirapu-liṅka-līlai n. <> id.+ லிங்கம்+. A poem on the exploits of Alla-mā-p-pirapu, a manifestation of šiva, by Civa-p-pirakācar, composed in A. D. 1652; சிவப்பிரகாசரால் கி.பி.1652-இல் இயற்றப்பட்ட சிவசொரூபியான அல்லமாப்பிரபுவின் சரித்திரம். |
| பிரபூதபலி | pirapūtapali n. <> prabhūta-bali. Boiled rice and cakes offered to the spirit of the deceased on the tenth day of his death; இறந்தவர்பொருட்டுப் பத்தாநாளில் அடைமுதலியவற்றோடு இடும் அன்னபலி. |
| பிரபேதம் | pirapētam n. <> pra-bhēda. Kind, variety; வகை. |
| பிரபை 1 | pirapai n. <> pra-bhā. 1. Light, radiance, brightness, lustre; ஒளி. தமனியப்பிரபை (திருப்பு. 319). 2. Nimbus, halo, aureole over the head of a deity; 3. Durgā; |
| பிரபை 2 | pirapai n. <> pra-pā. See பிரபம். (யாழ். அக.) . |
| பிரபோதசந்திரோதயம் | pirapōta-canti-rōtayam n. <> prabōdha-candrōdaya. A metaphysical poem adapted by Mātai-t-tiruvēṅkaṭa-nātar from a Sanskrit drama of the same name; பிரபோதசந்தரோதயமென்ற வடமொழிநாடகத்தைப் பின்பற்றித் தமிழ்மொழியில் மாதைத்திருவேங்கடநாதர் இயற்றிய வேதாந்த சம்பந்தமான காவியம். |
| பிரபோதம் | pirapōtam n. <> pra-bōdha. Wisdom, knowledge; பேரறிவு. |
| பிரபோதனம் | pirapōtaṉam n. <> pra-bōdhana. (யாழ். அக.) 1. Waking; எழுப்புகை. 2. Teaching; |
| பிரபோதிகை | pirapōtikai n. <> pra-bōdhikā. That which instructs or illuminates; கற்பிப்பது. விதிநிஷேதப் பிரபோதிகையா யிருக்கின்ற (சி. சி. 2, 1, ஞானப்.). |
| பிரம்படி | pirampaṭi n. <> பிரம்பு+. Beating with a cane, a mode of punishment; பிரம்பினால் அடிக்கும் தண்டனைவகை. |
| பிரம்படிக்காரர் | pirampaṭi-k-kārar n. <> பிரம்படி+. Men entrusted by a king with the duty of caning offenders; பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனேவலாளர். வெய்ய சொல்லுடைப் பிரம்படிக்காரரை விடுத்தான் (திருவாலவா. 28, 3). |
| பிரம்பம் | pirampam n. <> bimba. Common creeper of the hedges; கொவ்வை. (அக. நி.) |
| பிரம்பு | pirampu n. perh. பரம்பு [T. prēmu M. perambu.] 1. Rattan, m.cl., Cala-mus rotang; கொடிவகை. 2. Switchy rattan, 1. sh., Calamus vimanalis; 3. Bamboo; 4. See பிரப்பு, 2. (பிங்.) 5. See பிரப்பரிசி. (அக. நி.) 6. Sea; 7. Ghee; 8. Raised platform with steps, giving access to a temple-car; 9. Ridge in the field; |
