Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெண்வசம்பு | peṇ-vacampu n. <>id.+. Sweet flag without bristles; பிசிறில்லாத வசம்பு. (தைலவ. தைல.) |
| பெண்வலை | peṇ-valai n. <>id.+. Toils of a woman; பெண்டிர் செய்யும் வசீகரம். பெண்வலைப் படாதவர் (வீவக. 78). |
| பெண்வழி | peṇ-vaḻi n. <>id.+. [M. peṇ-vaḻi.] 1. Female line, as in inheritance; பெண்வர்க்கமாக உரிமை யிறங்குதற்குரிய வமிசவரிசை. See பெண்வழிச்சுற்றம் (யாழ்.அக.) |
| பெண்வழிச்சுற்றம் | peṇ-vaḻi-c-cuṟṟam n. <>பெண்வழி+. Relation in the female line; பெண்வர்க்கமாகவரும் உறவு. (யாழ். அக.) |
| பெண்வழிச்சேறல் | peṇ-vaḻi-c-cēṟal n. <>id.+. Being led by wife, being under wife's influence; மனைவி விருப்பப்படியே ஒழுகுகை. (குறள், அதி. 91. ) |
| பெண்வாயன் | peṇ-vāyaṉ n. <>பெண்+. Man who talks like a woman; பெண்டிரைப்போற் பேசுவோன். Loc. |
| பெண்வியாதி | peṇ-viyāri n. <>id.+. See பெண்சீக்கு. (M. L.) . |
| பெண்விளக்கு | peṇ-viḷakku n. <>id.+. 1. Woman conspicuous for virtue and other excellences; பெண்களிற் சிறந்தவள். பெண்விளக்காகிய பெறலரும் பேதாய் (பெருங். இலாவாண. 18, 79). 2. Damsel-shaped standard of a lamp; |
| பெண்வீட்டார் | peṇ-vīṭṭār n. <>id.+. Parents and other relatives of a bride; bride's party; மணமகளைச் சேர்ந்த சம்பந்திகள். |
| பெண்வை - த்தல் | peṇ-vai- v. tr. <>id.+. To keep as concubine; வைப்பாட்டியாகக் கொள்ளுதல். Tinn. |
| பெத்தகாலம் | petta-kālam n. <>baddha+. Period during which a sould is in bondage of mummalam; ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட காலம். மலத்தின் மறைப்புண்டு கிடக்கும் அப்பெத்த காலத்து (சி. போ. பா. 2, 2, பக். 63, சுவாமிநா.). |
| பெத்ததசை | petta-tacai n. <>id.+. Condition of the soul subject to the bondage of mummalam; ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட நிலை. (யாழ். அக.) |
| பெத்தம் | pettam n. <>baddha. 1. Bond, tie, ligature; கட்டு. 2. Bondage of the soul, connection of the soul with mummalam; 3. Thing added; |
| பெத்தமுத்தி | petta-mutti n. <>id.+. 1. Bondage and liberation of souls; பந்தமும் வீடும். 2. Salvation by absorption into God-head; |
| பெத்தமூலம் | petta-mūlam n. Indian nightshade. See சிறுவழுதுணை, 1. (சங். அக.) . |
| பெத்தர் | pettar n. <>baddha. Souls in bondage; பாசபந்தமுள்ள ஆன்மாக்கள். |
| பெத்தரிக்கம் | pettarikkam n. <>T. pedda-rikamu. 1. Greatness; பெருமை. பெத்தரிக்க மிகுந்ததிருக் குற்றால நாதலிங்கர் (குற்றா. குற. 44, 5). 2. Pride, haughtiness; 3. Tumult; |
| பெத்தல் | pettal n. Bow-string hemp. See பெருங்குரும்பை. (மலை.) . |
| பெத்தான்மா | pettāṉmā n. <>baddha + ஆன்மா. Soul in bondage; பாசபந்தமுள்ள ஆன்மா. முத்தியின்கட் பெத்தான்மாலை (சி. சி. 11, 6). |
| பெத்தி | petti n. cf. பெத்தமூலம். Indian nightshade. See சிறுவழுதுணை, 1. (மலை.) . |
| பெத்து | pettu n. <>baddha. See பெத்தம், 2. பெத்தின்றியைந்து தொழிலானும் (வியாகபு. 82, 47). . |
| பெதரிக்களம் | petarikkaḷam n. Strychnine tree. See எட்டி. (சங். அக.) . |
| பெதரிகாளம் | petarikāḷam n. Strychnine tree. See எட்டி. (மலை.) . |
| பெதிகாரம் | petikāram n. Alum. See படிக்காரம். (சங். அக.) . |
| பெதும்பை | petumpai n. perh. பேது 1. Girl between the ages of 8 and 11; எட்டு முதல் பதினொரு வயதுவரையுள்ள பெண். (இலக். வி. 860.) 2. Woman; |
| பெந்தகபோக்கியம் | pentaka-pōkkiyam n. <>bandhaka+. (Legal.) Usufructuary mortgage; சுவாதீன அடைமானவகை. |
| பெந்தகம் | pentakam n. <>bandhaka. 1. Bondage, tie; கட்டு. 2. Simple mortgage; |
| பெந்தம் | pentam n. <>bandha. 1. Bondage; கட்டு. (W.) 2. Relation, connection; |
| பெந்தர் | pentar n. See பெத்தர். (யாழ். அக.) . |
| பெந்தனம் | pentaṉam n. <>bandhana. See பெந்தம். (யாழ். அக.) . |
