Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெண்ணிராசி | peṇ-ṇ-irāci n. <>id.+. Female or even signs of the zodiac; ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் என்னும் ஆறு இரட்டையிராசிகள். (மங்களே. 2, 15, உரை.) |
| பெண்ணீர்மை | peṇṇīrmai n. <>id.+நீர்மை. Womanliness; பெண்மைக் குணம். பெண்ணீர்மை கற்பழியா வாற்றால் (நல்வழி, 16). |
| பெண்ணீலி | peṇṇīli n. <>id.+நீலி. (W.) 1. Termagant, shrew; கொடியவள். 2. Demoness; |
| பெண்ணுடம்பு | peṇ-ṇ-uṭampu n. <>id.+. Pudendum muliebre; பெண்குறி. (W.) |
| பெண்ணுடை | peṇ-ṇ-uṭai n. <>id.+. Female attire; பெண்டிர்க்குரிய ஆடை. Loc. |
| பெண்ணுலகு | peṇ-ṇ-ulaku n. <>id.+. An island said to be solely inhabited by women; பெண்கள் மாத்திரமே வாழுவதாகக் கருதப்படும் தீவு. பெண்ணுலகேய்ப்ப (பெருங். உஞ்சைக். 42, 181). |
| பெண்ணுறுப்பு | peṇ-ṇ-uṟuppu n. <>id.+. 1. Limb or part of a body, peculiar to women; பெண்ணுக்குரிய அங்கங்கள். 2. See பெண்ணுடம்பு. (யாழ். அக.) |
| பெண்ணெடு - த்தல் | peṇ-ṇ-eṭu- v. tr. <>id.+. To marry, choose as a bride; கல்யாணம் செய்தல். நீ எங்கே பெண்ணெடுத்தாய்? |
| பெண்ணெழுத்து | peṇ-ṇ-eḻuttu n. <>id.+. (Gram.) 1. Compound letter or vowel consonant in Tamil orthography; உயிர்மெய். (பிங்.) 2. Long vowel; |
| பெண்ணை | peṇṇai n. perh. பௌ¢-. 1. Palmyra-palm; பனை. மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பை (நற். 303). 2. The 17th nakṣatra; 3. See பெண்மரம். (மூ. அ.) 4. Water-thorn. See நீர்முள்ளி. (மலை.) 5. Rivers, North Pennaiyar, South Pennaiyar; |
| பெண்ணைவாயன் | peṇṇai-vāyaṉ n. <>பெண்+. 1. See பெண்வாயன். . 2. Hermaphrodite; |
| பெண்தண்டு | peṇ-tanṭu n. <>id.+. Small gristly protuberance of the left ear, dist. fr. āṇ-taṇṭu; இடக்காதுத் தண்டு. (W.) |
| பெண்தானையான் | peṇ-tāṉaiyān n. <>id.+. Kāma, as having women for His army; [பெண்சேனையான்] காமன். (நாமதீப. 58.) |
| பெண்பருவம் | peṇ-paruvam n. <>id.+. Stages in the life of a woman. See மகளிர்பருவம். (பிங்.) . |
| பெண்பழி | peṇ-paḻi n. <>id.+. 1. Crime of killing a woman; பெண்கொலை புரிதலால் உண்டாம் பழி. இனையதோர்பெண்பழியை யாரேற்றார் (திருவிளை. பழியஞ். 12). 2. Guilt of harassing; or forcing a woman; |
| பெண்பனை | peṇ-paṉai n. <>id.+. Female palmyra, as bearing fruit; காய்க்கும் பனை. (தொல். பொ. 588, உரை.) |
| பெண்பாடு | peṇ-pāṭu n. <>id.+. Efforts or industry of the female members of a family; பெண்பிள்ளையினுழைப்பு. ஆண்பாடு பெண்பாடுபட்டு அக்காரியம் முடிந்தது |
| பெண்பாத்தி | peṇ-pātti n. <>id.+. Condenser in salt-pans, dist. fr. āṇ-pātti; உப்பளத்தில் உப்புநீரைச்சுண்டவிடும் பாத்திவகை. Loc. |
| பெண்பார் - த்தல் | peṇ-pār- v. intr. <>id.+. To choose a bride; கல்யாணத்திற்கு மணமகளைத் தெரிந்தெடுத்தல். Colloq. |
| பெண்பால் | peṇ-pāl n. <>id.+. 1. (Gram.) Feminine gender, one of ai-m-pāl, q.v.; ஐம்பால்களுள் ஒன்று. (நன். 262.) 2. Female sex; |
| பெண்பாலெழுத்து | peṇ-pāl-eḻuttu n. <>பெண்பால்+. See பெண்ணெழுத்து, 2. (இலக். வி. 773, உரை.) . |
| பெண்பாவம் | peṇ-pāvam n. <>பெண்+. See பெண்பழி. (W.) . |
| பெண்பாற்பருவம் | peṇ-pāṟ-paruvam n. <>பெண்பால்+. Stages in the life of a woman. See மகளிர்பருவம். . |
| பெண்பாற்பிள்ளைக்கவி | peṇ-pāṟ-piḷḷai-k-kavi n. <>id.+. See பெண்பாற்பிள்ளைத்தமிழ். (இலக். வி. 807, உரை.) . |
| பெண்பாற்பிள்ளைத்தமிழ் | peṇ-pāṟ-piḷḷai-t-tamiḷ n. <>id.+. A poem describing the different stages in the childhood of a goddess or heroine and consisting of seven sections common to āṇpāṟ-piḷḷai-t-tamiḻ and peṇpāṟ-piḷḷai-t-tamiḻ and three ஆண்பால் பெண் பால்கட்குப் பொதுவாயுள்ள பருவங்களோடு, பெண்பாற்கே சிறப்பாகவுரிய கழங்குப்பருவம், ஊசற்பருவங்களைச் சேர்த்துப் பெண்தெய்வத்தை அல்லது சிறப்புடைப் பெண்பாலைப் புனைந்துபாடும் பிள்ளைத்தமிழ் வகை. |
