Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெண்கலை | peṇ-kalai n. <>id.+. Latter half of a vaṇṇam verse; வண்ணப்பாவின் பிற்பகுதி. (W.) |
| பெண்கிரகம் | peṇ-kirakam n. <>id. (Astrol.) Female planet, as Moon and Venus; சந்திர சுக்கிரர்களாகிய பெண்பாற் கிரகங்கள். (மங்களே. 3, 6.) |
| பெண்குணம் | peṇ-kuṇam n. <>id.+. Womanhood; மகடூஉக்குணம். (பிங்.) |
| பெண்குமைஞ்சான் | peṇ-kumaicāṉ n. Benzoin; சாம்பிராணி. (சங்.அக.) |
| பெண்குறி | peṇ-kuṟi n. <>பெண்+. Pudendum muliebre; அல்குல். |
| பெண்கேள் - தல் [பெண்கேட்டல்] | peṇ-kēḷ- v. tr. <>id.+. To ask the parents of a girl to give her in marriage; விவாகஞ்செய்துகொடுக்கும்படி பெற்றோரிடம் மகட்கேட்டல். |
| பெண்கை | peṇ-kai n. <>id.+. (Nāṭya.) Gesture of hands representing the actions of women; பெண்பாற்செயல் குறிக்கும் அபிநயக்கை (சிலப். 3, 18, உரை.) |
| பெண்கொடி | peṇ-koṭi n. <>id.+. Woman, tender as a vine; மெல்லியலான பெண். ஓர் பெண்கொடியை வதைசெய்தான் (திவ். நாய்ச். 8, 9). |
| பெண்கொடு - த்தல் | peṇ-koṭu- v. intr. <>id.+. To give a girl in marriage; பெண்ணைக் கலியாணம் செய்துகொடுத்தல். |
| பெண்கொடுத்தமாமன் | peṇ-koṭutta-māmaṉ n. <>id.+. A man's father-in-law, dist. fr. tāy-māmaṉ; ஒருவனுடைய மனைவியின் தகப்பன். |
| பெண்கொலை | peṇ-kolai n. <>id.+. Murder of a woman; ஸ்திரீஹத்தி. பெண்கொலை புரிந்த நன்னன் போல (குறுந். 292). |
| பெண்கொள்(ளு) - தல் | peṇ-koḷ- v. intr. <>id.+. To marry or take a wife; பெண்ணைக்கல்யாணம் செய்தல். பேய்கொண்டாலுங் கொளலாம் பெண்கொள்ள லாகாதே (சிவப். பிர. வரலாறு. பக்.19). |
| பெண்கோலம் | peṇ-kōlam n. <>id.+. 1. Female attire or costume; மகளிர் பூணுங் கோலம். 2. Female part or disguise; |
| பெண்கோள் | peṇ-kōḷ n. <>id.+. 1. Entering into alliance with another family by marrying a girl; பெண்ணை மணம்புரிந்து சம்பந்தஞ் செய்துகொள்கை. பெண்கோ ளொழுக்கத்தி னொத்து மறுத்தல் பற்றி (தொல். பொ. 79, உரை). 2. See பெண்கிரகம். (நாமதீப. 101.) |
| பெண்சக்கரவர்த்தி | peṇ-cakkaravartti n. <>id.+. 1. Empress; பேரரசி. பெண்சக்கரவர்த்தியுட னெய்திய பள்ளி யினிதெழுந்து (விக்கிரம. உலா, 80). 2. See பெண்ணாயகம். |
| பெண்சகோதரம் | peṇ-cakōtaram n. <>id.+. Sister; உடன்பிறந்தாள். Loc. |
| பெண்சந்ததி | peṇ-cantati n. <>id.+. 1. Female issue; பெண்குழந்தை. Loc. 2. Female heir; |
| பெண்சரக்கு | peṇ-carakku n. <>id.+. Any acid which readily combines with an alkali or base, as paṭikkāram, paḻa-p-puḷi, kāṭi, dist. fr. āṇ-carakku; படிக்காரம், பழப்புளி, காடி முதலிய புளிப்புள்ள சரக்குக்கள். (மூ. அ.) |
| பெண்சனம் | peṇ-caṉam n. <>id.+. Womenfolk; மகளிர் கூட்டம். தண்கோசம்பிப் பெண்சன நோக்கி (பெருங். நரவாண. 9, 34). |
| பெண்சாதி | peṇ-cāti n. <>id.+. 1. Womankind; பெண்பாலார். குணச்சிறப்பால் உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற . . . மகளிர் (மதுரைக். 555, உரை). 2. Wife; |
| பெண்சாவி | peṇ-cāvi n. <>id.+. Tubular key, bored key; துளையுள்ள சாவி. Mod. |
| பெண்சிரட்டை | peṇ-ciraṭṭai n. <>id.+. The outer shell of that half of a broken coconut containing its eye; கண்ணுள்ள கொட்டாங்கச்சி. Tinn. |
| பெண்சீக்கு | peṇ-cīkku n. <>id.+ E. sick. Venereal disease; தகாப்புணர்ச்சியால் வரும் கெட்டநோய். (M. L.) |
| பெண்சோடினை | peṇ-cōṭiṉai n. <>id.+. 1. Female attire for the stage; நாடகத்திற் கொள்ளும் பெண்ணுடை. (W.) 2. Decoration of a woman, as a bride; |
| பெண்டகம் | peṇṭakam n. <>பெண்டு. See பெண்டகன். (உரி. நி.) . |
| பெண்டகன் | peṇṭakaṉ n. <>id. cf. ṣaṇdaka. [K. heṇṇuga.] Hermaphrodite; eunuch; அலி. (பிங்.) |
| பெண்டகை | peṇṭakai n. <>பெண்+தகை. See பெண்டகைமை. பெண்டகையாற் பேரமர்க்கட்டு (குறள்,1083). . |
| பெண்டகைமை | peṇṭakaimai n. <>id.+. Womanliness; பெண்மைக்குணம். |
| பெண்டன் | peṇṭaṉ n. <>பெண்டு. cf. ṣaṇda. See பெண்டகன். (திவா.) . |
