Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெண்டாட்டி | peṇṭāṭṭi n. <>id.+ஆள்-. 1. Woman; பெண். செல்வப் பெண்டாட்டி நீ (திவ். திருப்பா. 11). 2. Wife; 3. Woman servant; |
| பெண்டாரி | peṇṭāri n. <>Mhr. peṇdhārī. Plunderer. See பிண்டாரி. Loc. . |
| பெண்டாளு - தல் | peṇṭāḷu- v. tr. <>பெண்டு+ஆள்-. [T. peṇdlādu.] To have as wife; மனைவியாக அனுபவித்தல். |
| பெண்டிழந்தான்சுழி | peṇṭiḻantāṉ-cuḻi n. <>id.+இழ-+. Unlucky mark in cattle in the form of a line across the back, indicating that the owner will lose his wife; தன்னை உடையவனது மனைவியை இழக்கச் செய்வதாகக் கருதப்படும் மாட்டுச்சுழிவகை. (மாட்டுவா. 22.) |
| பெண்டு | peṇṭu n. <>பெண். [T. peṇṭi K. peṇda M. peṇdi.] 1. Woman; பெண். ஒரு பெண்டா லிதய முருகினை யாயின் (வெங்கைக்கோ. 47). 2. Wife; |
| பெண்டுக்குமேய்க்கி | peṇṭukku-mēykki n. <>பெண்டு+. 1. A division of Iṭaiyar who tend the sheep of their wives and observe matriarchal customs; பெண்கொண்ட வீட்டைச் சேர்ந்து தன் மனைவியின் ஆடுகளை மேய்க்கும் இடையர் வகுப்பினன். (E. T. ii, 361.) 2. Henpecked husband; |
| பெண்டுகட்டு - தல் | peṇṭu-kaṭṭu- v. tr.<> id.+. To attribute criminal intimacy with a person of opposite sex; தகாத சேர்க்கை யுள்ளதாக ஸ்திரீபுருஷர்கள்மேற் பழிகூறுதல். (W.) |
| பெண்டுகம் | peṇṭukam n. Molucca-bean. See சுழற்சி. (மலை.) . |
| பெண்டுகள்சட்டி | peṇṭukaḷ-caṭṭi n. <>பெண்டு+. See பெண்டுக்குமேய்க்கி, 2. Loc. . |
| பெண்டுபிள்ளை | peṇṭu-piḷḷai n. <>id.+. Family, as consisting of wife and children; மனைவி குழந்தைகள் அடங்கிய குடும்பம். |
| பெண்டுருவன் | peṇṭuruvaṉ n. <>id.+. Viṣṇu, as having assumed the form of Mōkiṉi; [மோகினி யுருக்கொண்டவன்] திருமால். (நாமதீப. 50.) |
| பெண்டைக்காய் | peṇṭai-k-kāy n. <>T. beṇdakāya. Lady's finger. See வெண்டைக்காய். . |
| பெண்டைமரக்கால் | peṇṭai-marakkāl n. A grain measure containing two and a half paṭi; இரண்டரைப்படி கொள்ளும் தானியவளவை. (R. T.) |
| பெண்ணடி | peṇ-ṇ-aṭi n. <>பெண்+. Female child or heir; பெண்வாரிசு. ஒரு பெண்ணடிதன் காணிக்குத் தேடக் கருத்தாகி (விறலிவிடு. 152). |
| பெண்ணரசி | peṇ-ṇ-araci n. <>id.+. 1. Queen regnant; queen consort; இராணி. தன்னரசளித்த பெண்ணரசி (திருவிளை. பாயி. 11). 2. Queenly woman; |
| பெண்ணரசு | peṇ-ṇ-aracu n. <>id.+. 1. See பெண்ணரசி. . 2. Petticoat government; |
| பெண்ணருங்கலம் | peṇ-ṇ-aruṅkalam n. <>id.+. A gem among women, as an ornament; பெண்களிற் சிறந்தவள். பெண்ணருங் கலத்தொடு பிணைந்த பேரருள். (சீவக.198). |
| பெண்ணலம் | peṇṇalam n. <>id.+ நலம். 1. Womanliness; பெண்மைக்குணம். 2. Womanly grace; 3. Enjoyment with a woman; |
| பெண்ணலி | peṇ-ṇ-ali n. <>id.+. Hermaphrodite with feminine characteristics predominating; பெண்தன்மை மிக்க அலி. (தொல். பொ. 605, உரை.) |
| பெண்ணழைத்தல் | peṇ-ṇ-aḻaittal n. <>id.+. 1. Welcoming a bride at the bridegroom's house just before wedding; விவாகத்துக்குமுன் மணமகளை மணமகன் வீட்டுக்கு அழைக்கை. Loc. 2. Marriage; |
| பெண்ணன் | peṇṇaṉ n. <>id. Effeminate man; வீரமற்றவன். (W.) |
| பெண்ணாசை | peṇ-ṇ-ācai n. <>id.+. Love of woman; பெண்மீது பற்று. |
| பெண்ணாண் | peṇ-ṇ-āṇ n. <>id.+. Husband and wife; தம்பதி. (நாமதீப. 176.) |
| பெண்ணாய்ப்பிறந்தவள் | peṇ-ṇ-āy-p-piṟantavaḷ n. <>id.+. Woman; ஸ்தீரீ. Tinn. |
| பெண்ணாயகம் | peṇ-ṇāyakam n. <>id.+. Queen among women; பெண்களுக்குள் அரசி. |
| பெண்ணாள் 1 | peṇ-ṇ-āḷ n. <>id.+. Female farm-labourer; நடவு முதலிய பயிர் வேலை செய்யும் உழத்தி. |
| பெண்ணாள் 2 | peṇṇāḷ n. <>id.+நாள். (Astrol.) Female nakṣatra, as kārttikai, tiruvā-tirai, etc.; பெண் நட்சத்திரம். (W.) |
| பெண்ணாறு | peṇ-ṇ-āṟu n. <>id.+. Eastward flowing river, opp. to āṇ-āṟu; கிழக்கு நோக்கியோடும் நதி. ஆணாறு பெண்ணாறு ஒன்றி ன்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர.). |
