Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெயர்ப்பகுதி | peyar-p-pakuti n. <>id.+. (Gram.) Nominal base of a derivative word; பகுபதத்திற் பெயராகிய பகுதி. |
| பெயர்ப்படு - த்தல் | peyar-p-paṭu- v. tr. <>id.+. To name after; பேரிடுதல் மூதூர் நின்பெயர்ப்படுத்தேன் (மணி. பதி. 31). |
| பெயர்ப்பிரஸ்தாபம் | peyar-p-pirastāpam n. <>id.+. Fame, renown; கீர்த்தி. (W.) |
| பெயர்ப்பு | peyarppu n. <>பெயர்3-. 1. Removal, shifting, eradication; பெயரச்செய்கை. 2.Translation; |
| பெயர்படை - த்தல் | peyar-paṭai- v. intr. <>பெயர்+. To become famous; பேர்படைத்தல். |
| பெயர்பாதி | peyar-pāti n. perh. பெயர்+. Exact half; சரிபாதி. Colloq. |
| பெயர்புறம் | peyar-puṟam n. <>பெயர்2-+. Retreating; புறங்கொடுக்கை. பெயர்புறத் தார்த்து (புறநா. 35). |
| பெயர்பொறி - த்தல் | peyar-poṟi- v. tr. <>பெயர்+. 1. Lit., to get one's name inscribed. [தன்பெயரையெழுதுதல்] 2. To be distinguished; |
| பெயர்போ - தல் | peyar-pō- v. intr. <>id.+. To be renowned, celebrated, famous; பிரபலமாதல். |
| பெயர்வழி | peyar-vaḻi n. <>id.+. 1. Individual; ஆள். 2. Genealogy; 3. See பெயர்டாப்பு. (W.) |
| பெயர்வேற்றுமை | peyar-vēṟṟumai n. <>id.+. (Gram.) Nominative case; முதல் வேற்றுமை. அவ்வாறும் பெயர்வேற்றுமைப் பயனிலை யாம் (தொல். சொல். 66, சேனா.). |
| பெயரகராதி | peyar-akarāti n. <>id.+. First section of Beschi's Catur-akarāti, containing homonyms; சதுரகராதியில் சொற்பொருளை விளக்கும் பகுதி. |
| பெயரடி1 - த்தல் | peyar-aṭi- v. intr. <>id.+. To score out a name, as from a roll or register; ஒருவன் பெயரைப் பதிவுப்புத்தகத்தினின்று நீக்குதல். Mod. |
| பெயரடி2 | peyar-aṭi n. <>id.+. See பெயர்ப்பகுதி. . |
| பெயரப்பெயர | peyar-p-peyara adv. <>பெயர்2-+ Again and again; மீண்டும் மீண்டும். பெயரப் பெயரப் பார்த்தான். (J.) |
| பெயரன் | peyaraṉ n. <>பெயர். 1. One who bears a name; பெயரையுடையவன்.. எந்தை பெயரனை (கலித். 81). 2. Grandson, as bearing the grandfather's name; 3. Grandfather; |
| பெயராயிரு - த்தல் | peyarāy-iru- v. intr. <>id.+. 1. To be famous, celebrated; புகழுண்டாதல். 2. To be rumoured; to be noised abroad; |
| பெயராளி | peyar-āḷi n. <>id.+. Person of great celebrity; கீர்த்திமான். (யாழ். அக.) |
| பெயரிடு - தல் | peyar-iṭu- v. intr. <>id.+. To give a name; to perform the rite of naming a child; நாமகரணஞ் செய்தல். |
| பெயரிடைநிலை | peyar-iṭai-nilai n. <>id.+. (Gram.) Medial letter between the root and suffix of a noun, as in aṟiaṉ; பெயரின் பகுதிவிகுதிகட்கு இடைநிற்கும் எழுத்து. (நன்.141, உரை.) |
| பெயரிய | peyariya adj. <>id. 1. Having a name; பெயர்பெற்ற. இருபாற் பெயரிய . . . மூதூர் (புறநா. 202). 2. Of calling by name |
| பெயரியல் | peyar-iyal n. <>id.+. (Gram.) Chapter on nouns; சொல்லதிகாரத்திற் பெயர்ச் சொல்லிலக்கணங் கூறும் பகுதி. (தொல்.) |
| பெயரியற்சொல் | peyar-iyaṟ-col n. <>id.+. (Gram.) Noun that naturally suggests its meaning; தன் பொருளை இயல்பில் விளக்கும் பெயர்ச்சொல். (நன். 269, மயிலை.) |
| பெயரிரவல் | peyar-iraval n. <>id.+. Benami transaction; உடைமைக்கு உரியவர் பெயரை மறைத்து உரியரல்லாதார் பேரால் நடத்தும் நடவடிக்கை. Loc. |
| பெயரின்மை | peyar-iṉmai n. <>id.+. Namelessness, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q, v,; இறைவனெண்குணத் தொன்றன சொல்லமுடியாத தன்மை. (பிங்.) |
| பெயரின்னிசை | peyar-iṉṉicai n. <>id.+. A poem of 50, 70 or 90 stanzas of iṉṉicai-veṇpṉ each mentioning the name of a patron or hero, one of 96 pirapanicam, q. v.; பிரபந்தம் தொண்ணூற்றுறனுள் பாட்டுடைத் தலைவன் பெயர் சார்ந்துவர 50, 70, அல்லது.90 இனிச்சைவெண்பாக்களால் இயற்றப்படும் பிராபந்த வகை. (இலக். வி. 825.) (சது.) |
