Word |
English & Tamil Meaning |
|---|---|
| போர்முகம் | pōr-mukam n. <>போர்+. 1. Front, foremost line of battle; யுத்தமுகப்பு. போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன் (தனிப்பா- i, 275. 16). (W.) 2. The place where battle rages the most; |
| போர்முரசு | pōr-muracu n. <>id.+. See போர்ப்பறை. போர்முரசெழ வெழப்பொங்கி (பாரத. நான்காம். 3). |
| போர்முள் | pōr-muḷ n. <>id.+ Cock's claw; சேவலின் முன்னங்கால் முள். (யாழ். அக.) |
| போர்முனை | pōr-muṉai n. <>id.+. See போர்முகம். (யாழ். அக.) . |
| போர்மூட்டு - தல் | pōr-mūṭṭu- v. tr. <>id.+. 1. To spur on to quarrel; சண்டைசெய்யத் தூண்டுதல். (யாழ். அக.) 2. To create misunderstandind between; |
| போர்மை | pōrmai n. perh. போர்-. Mercy, pity; கருணை. (நாமதீப. 608.) |
| போர்வாங்கிவிடு - தல் | pōr-vāṅki-viṭu- v. tr. <>போர்+. To begin threshing of the grain; சூடடிக்கத் துவக்குதல். Loc. |
| போர்வு | pōrvu n. <>போர்-. See போர்பு. கயலார் நாரை போற்விற் சேக்கும் (ஐங்குறு. 9). |
| போர்வை | pōrvai n. <>id. [ T. pōrva.] 1. Covering, wrapping, enveloping; மூடுகை. (பிங்.) 2. Upper garment, cloak; blanket, rug; mantle; 3. Skin; 4. Coat-of-mail, corslet; 5. Sheath, as of sword; 6. Wooden cover of a temple-car; |
| போர்வைச்சீலை | pōrvai-c-cīlai n. <>போர்வை+. See போர்வை, 2. Loc. . |
| போரா | pōra. adv. <>போரு-. Entirely; exceedingly; மிகவும். (ஈடு, 4, 7, ப்ர.) |
| போரடி 1 - த்தல் | pōr-aṭi v. tr. <>போர்+. To threshing or beat out grain from straw; தலையடிக்கதிர்ப்போரினின்றும் தானியத்தை அடிதெடுத்தல். |
| போரடி 2 - த்தல் | pōr-aṭi- v. intr. <> போர்+. To wrangle over; வாதாடுதல். (W.) |
| போரடி | pōr-aṭi n. <>போரடி-. 1. Treshing; தலைரயடிக்கதிர்ப்போரைக் கடாவிட்டு அடித்து நெல்லைப்பிரிக்கை. 2. Threshing-floor; 3. Playing with cocoanuts; |
| போரப்பொலிய | pōra-p-poliya. adv. <>போர+. Fully completely; சம்பூரணமாக. இவன் இவனைப் போரப்பொலியச் சொல்லுங்காட்டில் (ஈடு, 4, 7, ப்ர.). |
| போரன் | pōraṉ n. <>போர் 2 . Paddy stalk; வைக்கோல் தட்டை. (J.) |
| போரா | pōrā n. <>U. bōhrāh. A sect of Indian Shiah Muslims in Bombay Presidency; பம்பாய் மாகாணத்து ஷியா முகம்மதிய வகையார். Loc. |
| போராக்காலம் | pōrā-k-kālam n.<>போரு-+ஆ neg.+. See போதாக்காலம். . |
| போராட்டம் | pōrāṭṭam n. <>போராடு-+. [T. pōrāṭamu, M. pōrāṭṭam.] 1. Fighting; சண்டையிடுகை. மடந்தையர் சிற்றின்பமோ.. . பொன்னாட்டும் வந்ததென்றாற் போராட்ட மல்லவோ (தாயு. எங்குநிறை. 10). 2. Combat, struggle; 3. Competition, rivalry; 4. Contention; striving earnestly; |
| போராடு - தல் | pōr-āṭu- v. intr. <>போர்+. [T. pōrādu M. pōrāduga.] 1. To fight, carry on war; பொருதல். பூமியைப்போராடி யிரந்தோருந் தம்மதென்பார் (தாயு. பராபர. 228). 2. To struggle, contend, wrestle; 3. To haggle, bargain; |
| போரான் | pōraṉ n. A kind of horse; குதிரைவகை. உயர்கனவட்டம் போரான் (திருவாலவா. 28, 69). |
| போரி 1 | pōri n. <>பொரு-. Equal, rival, competitor; பொருவோன். (W.) |
| போரி 2 | pōri n. <>போரூர். Tiru-p-pōrūr, sacred to God Subrahmaṇya; முருகக் கடவுளின் தலங்களுளொன்றான திருப்போரூர். போரிவா ழாறுமா முகனே (திருப்போ. சந். 9,1). |
| போரிக்கட்டை | pōri-k-kaṭṭai n. See போதிகைக்கட்டை. (கட்டட. நாமா.) . |
| போரிகை | pōrikai n. of. See போதிகைக்கட்டை. (கட்டட. நாமா.) . |
| போரிலேபோடு - தல் | pōril-ē-pōṭu- v. tr. <>போர் 2+. To render useless; பயனற்றதாக்குதல். Loc. |
| போரு 1 - தல் | pōru- 13 v. intr. prob. போது 2 -. 1. To go on, proceed; to continue; செல்லுதல். நீர் ஆதரித்துக்கொண்டு போரும் (குருபரம். 170). 2. To return; 3. To reach; 4. To be understood, as a meaning; |
