Word |
English & Tamil Meaning |
|---|---|
| மட்டை 3 | maṭṭai n. <>மட்டம்1. 1. Worthless person or thing; பயனற்றவ-ன்-ள்-து. இந்த மட்டைக் கிறுத்த தெல்லாம் போதும் (விறலிவிடு. 889). 2. A variety of paddy, as inferior; 3. Coarse grain of paddy; |
| மட்டைக்கங்கு | maṭṭai-k-kaṅku n. <>மட்டை1+. Leaves on either side of the lower part of palmyra stem; பனை முதலியவற்றின் மட்டையடியிலுள்ள ஓலை. (J.) |
| மட்டைக்கட்டுவடலி | maṭṭai-k-kaṭṭu-vaṭali n. <>id.+. Young palmyra tree thick with leaves; மட்டை நிரம்பிய இளம்பனை. (J.) |
| மட்டைக்குதிரை | maṭṭai-k-kutirai n. <>id.+. Trestle for preparing the warp in weaving; நெசவுக் கருவியின் ஒருறுப்பு. (W.) |
| மட்டைக்கொம்பு | maṭṭai-k-kompu n. <>id.+. Horns of an animal extending sideways; விலங்கின் விரிகொம்பு (W.) |
| மட்டைக்கோரை | maṭṭai-k-kōrai n. <>id.+. Smooth sedge, Cyperus procerulus; கோரை வகை. |
| மட்டைகட்டு - தல் | maṭṭai-kaṭṭu- v. <>id.+. tr. See மட்டைவைத்துக்கட்டு-. (W.) -intr. . See மட்டைவைத்துக்கட்டு-. (W.) |
| மட்டைகடி - த்தல் | maṭṭai-kaṭi- v. intr. <>id.+. To bite the lower lip, as a child; பிள்ளைகள் உதடு கடித்தல். (J.) |
| மட்டைச்சொண்டு | maṭṭai-c-coṇṭu n. <>id.+. Large lip; பெரிய உதடு. (யாழ். அக.) |
| மட்டைத்தும்பு | maṭṭai-t-tumpu n. <>id.+. Fibre of the palmyra stem; பனைநார். (W.) |
| மட்டைத்தேள் | maṭṭai-t-tēḷ n. <>id.+. 1. A kind of scorpion; தேள்வகை. 2. A kind of centipede; |
| மட்டைதட்டு - தல் | maṭṭai-taṭṭu- v. intr. <>id.+. 1. To beat the integument of the coconut to form coir; தென்னைமட்டையை நசுக்கி நாரெடுத்தல். 2. To become poor; |
| மட்டைப்படல் | maṭṭai--paṭal n. <>id.+. Fence of palmyra stems; பனைமட்டையாலாகிய வேலி. (W.) |
| மட்டைப்பூச்சி | maṭṭai-p-pūcci n. <>id.+. Tape-worm; புழுவகை. (M.L.) |
| மட்டைப்பூசை | maṭṭai-p-pūcai n. <>id.+. See மட்டையடி, 2. Loc. . |
| மட்டையடி 1 - த்தல் | maṭṭai-y-aṭi- v. <>id.+. intr. 1.To suffer from destitution; வறுமையால் வருந்துதல். 2. To worry oneself in another's cause; To ridicule; |
| மட்டையடி 2 | maṭṭai-y-aṭi- n. <>id.+. 1. A temple festival in which dancing girls and temple servants take sides representing the Goddess and the God respectively and enact their love-quarrel; சுவாமிக்கும் அம்பாளுக்கும் உள்ள பிரணயகலகத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோயிற்சிப்பந்திகளும் அவ்விருவர்க்கும் முறையே பிரதிநிதிகளாக நின்று நடத்தும் கோயிற்றிருவிழா. 2. Beating with the coconut husk, in contempt; 3. Ridicule; |
| மட்டையடியடி - த்தல் | maṭṭai-y-aṭi-y-aṭi v. tr. <>மட்டையடி+. 1. To beat with plantain stems in sport; வாழை மட்டையால் அடித்து விளையாடுதல். 2. To receive impolitely; 3. To use obscene language; |
| மட்டையர் | maṭṭaiyar n. <>மட்டை2. Jains, as bald-headed; சமணர். துவரியாடையர் மட்டையர் சமண்தொண்டர்கள் (திவ். பெரியரி. 2,1,6). |
| மட்டைவைத்துக்கட்டு - தல் | maṭṭai-vaittu-k-kaṭṭu- v. <>மட்டை1+. tr. 1. To fasten the top of a basket with fibres of palmyra stem; கூடையின் மேற்பகுதியைப் பனைமட்டையின் பிளந்த சிம்பு வைத்துப் பின்னுதல். 2.To fasten splints on a broken limb; To support another in his fault; |
| மட்பகை | maṭ-pakai n. <>மண்+. 1. Potter's instrument for paring clay; மட்கலத்தை அறுக்குங் கருவி.உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் (குறள், 883). 2. See மட்பகைவன். (சங். அக.) |
| மட்பகைஞன் | maṭ-pakaiaṉ n. See மட்பகைவன். (திவா.) . |
| மட்பகைவன் | maṭ-pakaivaṉ n. <>மட்பகை. Potter; குயவன் (சூடா.) |
| மட்பலகை | maṭ-palakai n. <>மண்+. Unburnt brick; சுடாத செங்கல். திருப்பணிக்கும் பயிலுஞ் சுடுமட்பலகை பலகொணர் வித்து (பெரிய.ஏயர்கோ. 49). |
| மட்பனை | maṭ-paṉai n. <>id.+. Moosly root. See நிலப்பனை. |
