Word |
English & Tamil Meaning |
|---|---|
| மடக்குக்குடர் | maṭakku-k-kuṭar n. <>id.+. Large intestines; குடற்பகுதி. (யாழ்.அக.) |
| மடக்குத்தூரம் | maṭakku-t-tūram n. <>id.+. Distance through which the furrow is turned. See அணைப்புத்தூரம். Loc. |
| மடக்குநாற்காலி | maṭakku-nāṟkāli n. <>id.+. Folding chair; மடக்கக்கூடிய குரிச்சி. Mod. |
| மடக்குநீட்டு | maṭakku-nīṭṭu n. <>id.+. Royal writ. See நீட்டு2,3. |
| மடக்குப்பிடிக்கத்தி | maṭakku-p-piṭi-k-katti n. <>id.+. See மடக்குக்கத்தி. (யாழ். அக.) . |
| மடக்குமடக்கெனல் | maṭakku-maṭakkueṉal n. Onom. expr., signifying gurgling of water in drinking; நீர் குடிப்பதிலுண்டாகும் ஒரு ஒலிக்குறிப்பு. |
| மடக்குமேசை | maṭakku-mēcai n. <>மடக்கு+. Folding table; கால்களை மடக்கி வைத்தற்குரிய மேசை. Mod. |
| மடக்குயில் | maṭa-k-kuyil n. <>மட-மை+. Woman having a sweet voice like the koel; குயில்போன்ற குரலினையுடைய பெண். (W.) |
| மடக்குவரி | maṭakku-vari n. <>மடக்கு+. 1. Additional tax, as for a second crop; இரண்டாம்போகத்தின்மேல் விதிக்கும் வரி. (W.) 2. Additional cess; |
| மடக்கெழுத்தாணி | maṭakkeḻuttāṇi n.<>id.+. Folding style with knife; கத்தியுடன் பிடிக்குள் அடங்கும் எழுத்தாணிவகை. |
| மடக்கெனல் | maṭakkeṉal n. See மடக்கு மடக்கெனல். . |
| மடக்கொடி | maṭa-k-koṭi n. <>மட-மை+. Young woman, as tender; பெண். ஒரு மடக்கொடியாகி வந்து (கம்பரா. அகலி. 51). |
| மடங்கக்கூறு - தல் | maṭaṅka-k-kūṟu- v. tr. <>மடங்கு-+. To repeat; திரும்பக் கூறுதல். அவை . . . மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல். பொ. 255) |
| மடங்கடி - த்தல் | maṭaṅkaṭi- v. tr. <>id.+. 1. To subdue, suppress, restrain, repulse; to check, as in war or in argument; to put to rout; to chase; தோற்கச்செய்தல். 2. To compel, as a person, to re-do a thing; |
| மடங்கல் | maṭaṅkal n. <>id 1. Bending, being bent; வளைகை. (திவா.) 2. Crook, angle, corner; 3. Returning; 4. Curving or blunting of the edge; 5. Suppression; control; 6. Absorption; 7. End; 8. Thunderbolt; 9. Submarine fire; 10. Termination of a Yuga; 11. Yama, as subduer of all things; 12. Servant of Yama; 13. Lion; 14. Man-lion incarnation of Viṣṇu. 15. Fabulous griffin; 16. A disease; 17. Ripened sheaf of grain, prostrate in the field; 18. Summer catch-crop sown after campa has been reaped; 19. Fragrant screw-pine. |
| மடங்கலர் | maṭaṅkalar n. <>id.+அல் neg.+. Enemies, foes; பகைவர். (W.) |
| மடங்கலூர்தி | maṭaṅkal-ūrti n. <>மடங்கல்+. Durgā, as riding a lion; [சிங்கவாகனமுடையாள்] துர்க்கை. |
| மடங்கற்கணக்கு | maṭaṅkar-kaṇakku n. <>id.+. Accounts of the actual produce of a field; சாகுபடியான பயிரின் பலனைக் குறிக்கும் கணக்கு. Rd. |
| மடங்கற்கொடியோன் | maṭaṅkaṟ-koṭiyōṉ n. <>id.+. Bhīma, as having a lion banner; [சிங்கக்கொடியுடையோன்] வீமன். (சூடா). |
| மடங்காநீர் | maṭaṅkā-nīr n. <>மடங்கு +ஆ neg.+. Unfailing supply of water, as from a spring; வற்றாத நீருற்று. (சினேந். 362, தலைப்பு.) |
| மடங்கு 1 - தல் | maṭaṅku- 5 v. intr. 1. To become bent, as the arm or leg; வளைதல். (பிங்.) படைபோன் முடங்கி மடங்கி (கலித். 94, 9). 2. To be shut, closed, folded, as a knife or table; 3. To be inflected, deflected, refracted, bent out of place; 4. To bend, turn, as a road, or river; 5. To turn about; 6. To be repeated; 7. To be twisted, distorted, as a limb; 8. To be diminished; 9. To shrink; 10. To be absorbed; 11. To be battered; 12. To submit, yield, surrender; 13. To be humbled, tamed, reduced, as pride; to be broken down, as the constitution; 14. To be indolent, inactive; 15. To be decreased in force, as the wind or heat; to yield, as a disease or poison to medicines or mantras; 16. To be stopped, hindered; to be quashed, as proceedings; 17. To be turned off, diverted, thrown back, as weapons; 18. To be silenced by argument, by sophistry, by authority; to be checked, confuted, refuted; 19. To be lodged with one, as property on the death of the owner; |
