Word |
English & Tamil Meaning |
|---|---|
| மடவள் | maṭaval n. Fem. of மடவன். Stupid woman; அறிலாள். மடவ லம்ம நீ யினிக் கொண் டோனே (ஐங்குறு. 67). |
| மடவளாகம் | maṭa-vaḷākam n. <>மடம்2+. Streets around a temple; கோயிலைச் சூழ்ந்துள்ள விதி. இம்மடவளாகத்து இருக்கிற குடிகளுக்கு (S. I. I. iii, 48) குன்றத்ரின் மடவ்ளாகந் தானாக்கி (சேக்கிழார்.பு.19). |
| மடவன் | maṭavaṉ n. <>மட-மை. Stupid person; அறிவிலான். மடவர் மெல்லியர் செல்லினும் (புறநா.106). |
| மடவா - தல் | maṭavā- v. intr. <>மடம்1+. To be charming, as a girl; மடப்பம்வருதல். கொல்லிக் குடவரைப்பவையின் மடவந்தனளே (குறுந்.100). |
| மடவாமீன் | maṭavā-mīṉ n. See மடவை, 4. (யாழ். அக.) . |
| மடவாயம் | maṭa-v-āyam n. <>மடம்1+ஆயம்1. Company of girl-playmates of maiden; மகளிர் விளையாட்டுக் கூட்டம். மடவாயமாகி மிடையும் பதினெண்கணத்து மடவாரும் (தக்கயாகப்.307). |
| மடவார் | maṭavār n. <>id.+. 1. Women; மகளிர். வலம்வந்த மடவார்க ணடமாட (தேவா. 278,1). 2. Fools; |
| மடவாழை | maṭa-vāḻai n. Prob. மடல்+. A kind of banana; பேயன்வாழை. (G. Sm.D.I, i, 215.) |
| மடவாள் | maṭavāl n. <>மடம்1. Woman; பெண்.(திவா). குழன்மடவாள் கூறுடையா ளொரு பாகம் (திருவாச, 5, 17). |
| மடவியர் | maṭaviyar n. <>id. 1. See மடவார், 1. மடவியரைச் சிந்தைவிருப்பஞ் செய்வித்தல் (கொக்கோ. பாயி. 12). . 2. See மடவார், 2. வரையகவாணர் மடவியரே (இறை. 18, உரை, மேற்.). |
| மடவிளாகம் | maṭa-viḷākam n. See மடவளாகம். (I. M. P. Rd. 179 b.) . |
| மடவை | maṭavai n. 1. Post; கவைக்கால். (பிங்) மடலியிடைக்கழல் வைப்பார்போல் (சேதுபு. தேவிபுர.64). 2. Oar, paddle; 3. Whirling-nut; 4. Grey mullet, silvery, mugil oligolepe; |
| மடவைக்கெண்டை | maṭavai-k-keṇṭai n. <>மடவை+. A species of carp; மீன்வகை. (யாழ்.அக.) |
| மடவோர் | maṭavōr n. <>மடம்1. 1. See மடவார், 1. பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு (மணி, 19, 73). . 2. See மடவார், 2. மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ (மணி. 6, 104). |
| மடற்சீதம் | maṭaṟ-cīṭam n. A prepared arsenic ; கவுரிபாஷாணம். (சங்.அக). |
| மடற்பரி | maṭaṟ-pari n. <>மடல்+. See மடல், 3. . |
| மடற்பனை | maṭaṟ-paṉai n. <>id.+. Male palmyra, as having leaf-stalks adhering to the stem ; கருக்குமட்டைவிழாத ஆண்பனை. (நன். 31.) |
| மடற்பாளை | maṭaṟ-pāḷai n. <>id.+. Tender spathe; பூம்பாளை. (யாழ். அக.) |
| மடற்றுத்தம் | maṭaṟṟuttam n. <>id.+. துத்தம் Native hydrous silicate of zinc, calamine; துத்தவகை. (W.) |
| மடன் 1 | maṭaṉ n. <>மடம்1 . 1. Ignorance; அறியாமை. இன்சொலார் தம் மடனொக்கு மடானுமுண்டோ (கம்பரா.உண்டாட்டு.10). 2. Credulity; proneness to accept another's opinion and holding fast to it; |
| மடன் 2 | maṭaṉ n. <>id.+ அன் sutf. [K. madda.] Ignorant person; அறிவிலான். (சூடா) |
| மடன்மா | maṭaṉ-mā n. <>மடல்+. See மடல், 3. மடன்மா கூறு மிடனுமா ருண்டே (தொல். பொ. 99). . |
| மடா | maṭā n. <>மடு-. Large earthen vessel; பாண்டவகை. அடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் (பதிற்றுப். 24, 20). |
| மடாதிபத்தியம் | maṭātipattiyam n. <>maṭha+ādhipatya. Management of affairs of a temple or mutt ; கோயில் அல்லது மடத்தின் நிர்வாகம். (யாழ்.அக.) |
| மடாதிபதி | maṭātipati n. <>id.+adhipati. Head of a monastery; மடத்துத் தலைவன். |
| மடாபத்தியம் | maṭāpattiyam n. See மடாதிபத்தியம். (I. M. P. Sm. 26.) . |
| மடாரெனல் | maṭār-eṉal n. Onom. expr. signifying crashing noise; ஒர் ஒலிக்குறிப்பு. மரம் மடாரென்று முரிந்தது. |
| மடாலயம் | maṭālayam n. <>maṭha+ā-laya. See மடம்2, 1, 2. . |
| மடி 1 - தல் | maṭi- 4 v. intr. 1. [K. madi.] To be bent, folded, turned down, lapped in; மடங்குதல். வள்ளுகிர் மடிய (கம்பரா.கும்ப.182). 2. To be turned, as an edge or a point; 3. To droop, as the head of one asleep or as sheafs of grain in a field; 4. To fall on; 5. To wither, as leaves; 6. To roll, as waves; 7. [M. maṭi] To be indolent, inactive; 8. To sleep; 9. To shrink, contract; 10. To be dispirited; 11. [K. madi.] to perish; to be destroyed; 12. To die; 13. To become mouldy, as rice; 14. To rush in together, as a crowd; 15. To break; to be broken, as a blister; To forget; |
