Word |
English & Tamil Meaning |
|---|---|
| மடிசஞ்சி | maṭi-caci n. <>மடி+. T. madisaci.] Bag made of reed or wool for keeping clothes ceremonially pure; மடிவேஷ்டி வைத்தற்குரியதும் புல் அல்லது கம்பளியாலானதுமான பை. |
| மடிசல் | maṭical n. <>மடி1 -. 1. Damage caused by lapse of time or by dampness; putrescence, rot; நாட்படுவதாலும் நீர்ச்சம்பந்ததாலும் பண்டங்களில் உண்டாம் கெடுதி. 2. Grain injured by time; |
| மடிசாறு | maṭicāṟu n. [T. madicēru.] See மடிதாறு. Loc. . |
| மடிசாறுபாய் - தல் | maṭicāṟu-pāy- v.intr.perh. மடி+சார்+-. To be spilled in pouring a liquid, as from carelessness; திரவப்பொருள் ஒழுங்காய் நேரே விழாது பக்கம் விலகிச் சிந்துதல் . Loc. |
| மடிசீலை | maṭi-cīlai n. <>id.+. 1. See மடிச்சீலை, 1. . 2. Forelap ; |
| மடிசெவி | maṭi-cevi n. <>மடி1-+. See மடிகாது. (W.) . |
| மடிதடவு - தல் | maṭi-taṭavu- v. tr. <>மடி+. 1. To pickpocket, stealthily remove purse, jewels, etc., from a person; பிறன்பொருளை அபகரித்தல். தன்னை விசுவசித்து உடன்கிடந்தவனை மடி தடவினவனைப் போலே (ஈடு, 10, 8, 2, அரும்.). 2. To examine one's clothes and see if anything is kept hidden; |
| மடிதாறு | maṭi-tāṟu n. <>id.+. Fold of one's clothes carried between the legs and tucked in behind, in some castes ; உடையின் பின்கச்சம். யஜ்ஞபத்னிகள்பக்கலிலே நோக்கான வாறே மடிதாறுடுப்பது மாயிற்று (திவ். திருநெடுந். 19, 146). |
| மடிப்பங்கால் | maṭippaṅ-kāl n. <>மடிப்பு+. See மடிகால். (W.) . |
| மடிப்பணம் | maṭi-p-paṇam n. <>மடி+. Cash on hand ; கைப்பணம். (யாழ். அக.) |
| மடிப்பாளி | maṭippāḷi n. <>மடிப்பு+. Cheat, defrauder, impostor; மோசக்காரன். (W.) |
| மடிப்பிச்சை | maṭi-p-piccai n. <>மடி+. 1. Alms received in one's loin-cloth; இடுப்புத் துணியிலேற்கும் பிச்சை. 2. Alms begged for in a mean manner; |
| மடிப்பிளை | maṭippiḷai n. See மடிப்பினை. (சங். அக.) . |
| மடிப்பினை | maṭippiṉai n. Lead ore; வுங்கமணல். (யாழ். அக.) |
| மடிப்பு | maṭippu n. <>மடி2-. 1. Fold, doubling, plait; ஒன்றைப் பல பகுதிகளாக மடித்திருப்பது. 2. See மடிப்புத்தையல். (W.) 3. Crease, mark of a fold; 4. Trick, fraud; imposture; entanglement; 5. Fold, crease in the abdomen, as from obesity; 6. Double crop; |
| மடிப்புக்கதவு | maṭippu-k-katavu n. <>மடிப்பு+. Folding door; மடக்கக்கூடிய கதவு. (W.) |
| மடிப்புக்காரன் | maṭippu-k-kāraṉ n. <>id.+. See மடிப்பாளி. (W.) . |
| மடிப்புக்கால் | maṭippu-k-kāl n. <> id.+. See மடிகால். (W.) . |
| மடிப்புக்கீல் | maṭippu-k-kīl n. <>id.+. Folding hinge; மடிக்கக்கூடிய கதவு ஆடும் இரும்புக் கருவி. |
| மடிப்புடைவை | maṭi-p-puṭaivai n. <>மடி+. 1. Folded cloth; மடித்தலுடைய ஆடை. சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளை (மதுரைக் 520, உரை). 2. Saree which is ceremonially pure; |
| மடிப்புத்தையல் | maṭippu-t-taiyal n. <>மடிப்பு+. Hemming; மடித்துத்தைக்குந் தையல். |
| மடிப்புப்பேச்சு | maṭippu-p-pēccu n. <>id.+. Equivocal speech; கவர்பொருள்படுஞ் சொல். (W.) |
| மடிப்புப்பேசு - தல் | maṭippu-p-pēcu- v. intr. <>id.+. To use words in a double sense with intent to deceive; கவர்பொருள்படக் கூறுதல். (W.) |
| மடிப்பெட்டி | maṭi-p-peṭṭi n. <>மடி+. 1. Ola basket for keeping cloths ceremonially pure; ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை. 2. Betel pouch carried in the waist-fold; |
| மடிப்பெழுத்தாணி | maṭippeḻuttāṇi n. <>மடிப்பு+. Foldable iron style; பைப்பிடியுள் மடங்கும் எழுத்தாணிவகை. (W.) |
| மடிப்பை | maṭi-p-pai n. <>மடி+. (W.) 1. Purse kept in the girdle; அரைமடியிற்கட்டிய பை. 2. Bag for keeping betel; 3. See மடிசஞ்சி. |
