Word |
English & Tamil Meaning |
|---|---|
| மடிபிசை - தல் | maṭi-picai- v. tr. <>id.+. To chafe the udder of a cow in milking; பால் சுரக்கும்படியாகப் பசுவின் மடியைத் தடவுதல் . |
| மடிபிடி - த்தல் | maṭi-piṭi- v. tr. <>id.+. 1. To compel, as seizing by the waist cloth; நிர்ப்பந்தித்தல். மடிபிடித்துக் காற்கட்டி விலக்க வொண்ணாதபடி யாயிருக்கை (ஈடு, 5, 3, 5) 2. To pick a quarrel; 3. To dispute; |
| மடிபிடி | maṭi-piṭi n. <>மடிபிடி-. 1. Compulsion, as caused by seizing by the waist cloth; நிர்ப்பந்தம். தூதரென்று மடிபிடியதாக நின்று (திருப்பு. 1204). 2. Altercation, dispute; 3. Commencement of the observance of ceremonial purity by Mādhva women; |
| மடிபிடிவழக்கு | maṭi-piṭi-vaḻakku n. <>மடி பிடி+. Mutual compalint, application for redress by both parties to a dispute; பகைவரிருவர் ஒருவர்மேலொருவர் தொடுக்கும் வழக்கு. (W.) |
| மடிமாங்காய்போடு - தல் | maṭi-māṅkāy-pōṭu- v. intr. <>மடி+. 1. To charge falsely, as putting a mango in another's possession in order to accuse him of theft; செய்யாததைச் செய்ததாக ஏறிட்டுக் குற்றங்கூறுதல். (W.) 2. To bribe; |
| மடிமாங்காயிடு - தல் | maṭi-nāṅkāy-iṭu- v. intr. <>id.+. See மடிமாங்காய்போடு-. மடி மாங்காயிட்டு விஷயீகரிக்க வந்திருக்கிறவன் (திவ். திருநெடுந். 9, பக். 73). . |
| மடிமாறி | maṭi-māṟi n. <>id.+. Pickpocket; முடிச்சுமாறி. Loc. |
| மடிமூத்தார்தாழி | maṭi-mūttār-tāḻi n. <>மடி1-+. Large urn found in ancient burialplaces. See முதுமக்கட்டாழி. (M. M) . |
| மடிமை | maṭimai n. <>id. Idleness, sloth; inactivity; சோம்பு. (தொல். பொ. 260.) |
| மடியல் | maṭiyal n. See மடிசல் . |
| மடியில் | maṭi-y-il n. <>மடி+. Tent ; கூடகாரம். மடியில்விட்டு (சேதுபு. அகத். 33). |
| மடியிறக்கு - தல் | maṭi-y-iṟakku- v. intr. <>id.+. To have the udder distended, as a cow before calving; ஈனுதற்குமுன் பசுவின் மடிபருத்தல். (W.) |
| மடியுறை | maṭi-y-uṟai n. prob. மடி2-+. உறு-. Astonishment, bewilderment; விம்மிதம். மருளெனக் கருதிய மடியுறை கேண்மதி (பெருங். உஞ்சைக். 48, 111) . |
| மடியேந்து - தல் | maṭi-y-ēntu- v. tr. & intr. <>மடி+. See மடியேல்-. . |
| மடியேல் - தல் [மடியேற்றல்] | maṭi-y-ēl- v. tr. & intr. <>id.+. To beg, as receiving alms in one's cloth; யாசித்தல். பிரயோசனத்துக்கு மடியேற்கை யன்றிக்கே (ஈடு, 3, 7, 1). |
| மடிவி - த்தல் | maṭivi- v. tr. Caus. of மடி1-. 1. To blunt, as the edge of an instrument ; முனை மழுங்கச் செய்தல். 2. To kill; |
| மடிவிடு - தல் | maṭi-viṭu- v. intr. <>மடி+. See மடியிறக்கு-. (W.) . |
| மடிவு | maṭivu n. <>மடி1-. 1. Inactivity, indolence; சோம்பல். ஒடியா முறையின் மடிவிலையாகி (புறநா. 29). 2. Discouragement; 3. Ruin, loss, destruction; 4. Death; |
| மடிவை | maṭivai; n. prob. id. Fonage; தழை மடிவைக் குறுந்தொடி மகளிர். . .முனையின் (அகநா. 226). |
| மடு - த்தல் | maṭu- 11 v. tr. [K. madu.] 1. To take food or drink; உண்ணுதல். மடுத்தவனஞ்சமுதா (தேவா. 238, 3). 2. To fill, penetrate, suffuse, as odour; 3. To unite, join; 4. To hold, contain; 5. To cause to eat or drink; to feed; 6. To kindle; 7. To immerse, cause to sink; 8. To gore, pierce, thrust; 9. To inveigle; to entrap; to act treacherously; 10. To devour; 11. To charm; 12. To cause to go or enter; |
| மடு | maṭu n. <>மடு-. [T. madugu K. M. madu.] 1. Pond, pool; நீர்நிலை. (பிங்.) கங்கை வருநீர் மடுவுள் (திருவாச. 6, 26). 2. Deep place in a river or channel; |
| மடுத்தடி - த்தல் | maṭuttaṭi- v. tr. <>மடி2-+அடி To frustrate an object; மடங்கடித்தல். (J.) |
