Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலைப்பாம்பு | malai-p-pāmpu n. <>id.+. Rock-snake, Python molurus; பாம்புவகை. மலைப்பாம்பாக நகுடன்போய் வீழ்ந்த கதை (குற்றா. தல. மந்தமா. 38). |
| மலைப்பாலை | malai-p-pālai n. <>id.+. A tree, Minusops; பாலைவகை. (பதார்த்த. 234.) |
| மலைப்பாழி | malai-p-pāḻi n. <>id.+. See மலைக்குகை. (W.) . |
| மலைப்பிஞ்சு | malai-p-picu n. <>id.+. Small piece of stone; சிறு கல். Loc. |
| மலைப்பிளப்பு | malai-p-piḷappu n. <>id.+. Cleft in hills; மலையில் உள்ள விடர். (திவா.) |
| மலைப்பிறங்கம் | malai-p-piṟaṅkam n. <>id.+ பிறங்கு-. Iron-sand; உலோகமணல். (சங். அக.) |
| மலைப்பு | malaippu n. <>மலை2-. 1. Confusion of mind; அறிவுமயக்கம். மலைப்போ வொருவர் செய்த வஞ்சனையோ (இராமநா. அயோத். 8). 2. Astonishment; amazement; wonder; 3. Fighting, war; 4. Enmity, opposition; 5. A kind of dance; 6. Sumptuousness, as of meal; splendour, pomp; |
| மலைப்புளி | malai-p-puḷi n. <>மலை4+. Mysore gamboge. See பச்சிலை, 2. (M. M. 274.) |
| மலைப்புளிச்சை | malai-p-puḷiccai n. <>id.+. Hill hemp bendy, m. sh., Hibiscus furcatus; வெண்டைவகை. (M. M. 83.) |
| மலைப்புறம் | malai-p-puṟam n. <>id.+. See மலைச்சார்வு. (C. G.) . |
| மலைப்புறா | malai-p-puṟā n. <>id.+. Blue rock pigeon; மாடாப்புறா. (சங். அக.) |
| மலைப்புன்கு | malai-p-puṉku n. <>id.+. Wight's Indian nettle, 1. tr., Celtis wightii; நீண்ட மரவகை. (Nels.) |
| மலைப்புனம் | malai-p-puṉam n. <>id.+. Rocky soil in tiṉai fields on the mountains; தினைவிளைநிலம். (R. T.) |
| மலைப்பூடு | malai-p-pūṭu n. <>id.+. A plant; பூடுவகை. (சங். அக.) |
| மலைப்பேரீச்சு | malai-p-pēr-īccu n. <>id.+. Cuddapah fern palm, s. tr., Cycas beddomei; ஈச்சமரவகை. |
| மலைபடுகடாம் | malai-paṭu-kaṭām n. <>id.+படு-+. A poem, otherwise known as Kūttarāṟṟ-p-paṭai, one of Pattu-p-pāṭṭu, by Peruṅkuṉṟūr-p-peruṅ-kaucikaṉār, with the chief Naṉṉaṉ as hero; நன்னன்சேய்நன்னனைப்பற்றிப் பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகனார் பாடியதும் கூத்தராற்றுப்படை என்ற மறுபெயருடையதும் பத்துப் பாட்டில் ஒன்றுமான ஆற்றுப்படை நுல். |
| மலைபடுதிரவியம் | malai-paṭu-tiraviyam n. <>id.+id.+. Products of the hills, of five kinds, viz., akil, miḷaku, kōṭṭam, takkōlam, kuṅkumam; மலையிலுண்டாகும் அகில், மிளகு, கோட்டம், தக்கோலம். குங்குமம் என்ற ஐவகை வாசனைப் பண்டம். (பிங்.) |
| மலைபோரகை | malai-pōrakai n. <>id. See மலைபோரவை. Loc. . |
| மலைபோரவை | malai-pōravai n. <>id. Black vulture, Otogyps calvus; கழுகுவகை. Loc. |
| மலைமகள் | malai-makaḷ n. <>id.+. Parvatī, as the daughter of the Himalayas; பார்வதி. மலைமகளை யொருபாகம் வைத்தலுமே (திருவாச, 12, 7). (பிங்.) |
| மலைமஞ்சி | malai-maci n. prob. id.+. Bowstring hemp. See பெருங்குரும்பை. (M. M. 477.) |
| மலைமடந்தை | malai-maṭantai n. <>id.+. See மலைமகள். (சூடா.) . |
| மலைமண்டலம் | malai-maṇṭalam n. <>id.+. See மலைநாடு, 2. மலைமண்டலத்து . . . சிறைராமன் கேரளன் (S. I. I. i, 89). . |
| மலைமதம் | malai-matam n. <>id.+. Rock alum; கன்மதம். (சங். அக.) |
| மலைமல்லிகை | malai-mallikai n. <>id.+. Indian cork. See காட்டுமல்லி. கூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை (புறநா. 168, உரை). |
| மலைமா | malai-mā n. <>id.+. Hill balsam tree, m. tr., Balasamodendron candalum; மரவகை. (L.) |
| மலைமாதம் | malai-mātam n. Corr. of மலமாதம். Loc. . |
| மலைமாது | malai-mātu n. <>மலை4+. See மலைமகள். மலைமாதொரு பாகா (திருவாச. 23, 10). . |
| மலைமான் | malai-māṉ n. <>id.+. See மலை மகள். (நாமதீப. 19.) . |
| மலைமுருங்கை | malai-muruṅkai n. <>id.+. Prickly sesban, m. sh., Sesbania aculeata; செடிவகை. (மலை.) |
