Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலையாத்தி | malai-y-ātti n. <>id.+. (L.) 1. Malabar mountain ebony, m. tr., Bauhinia malabarica; மரவகை. 2. Variegated mountain ebony, m. tr., Bauhinia variegata; |
| மலையாமணக்கு | malai-y-āmaṇakku n. <>id.+. Coral-plant, l. sh., Jatropha multifida; செடிவகை. (M. M.) |
| மலையாமி | malaiyāmi n. <>M. malaiyāyma. The Malayalam language; மலையாள பாஷை. (W.) |
| மலையாமை 1 | malai-y-āmai n. <>மலை4+. Mountain-tortoise; மலையிற் காணப்படும் ஆமைவகை. Nā. |
| மலையாமை 2 | malaiyāmai n. See மலையாழ்மை. . |
| மலையாரம் | malai-y-āram n. <>மலை4+. Sandalwood. See சந்தனம். கோவா மலையாரம் (சிலப், 17, உள்வரிவாழ்த்து, 1). |
| மலையாவிரை | malai-y-āvirai n. <>id.+. 1. Small-stipuled downy rachis glandular senna. See காட்டாவிரை. 2. Purple-flowered chinese Pagoda-tree, m. sh., Sophora glauca; |
| மலையாழ்மை | malai-y-āḻmai n. <>id.+prob. ஆள்-. An old script, a variety of vaṭṭeḻuttu; வட்டெழுத்துவகை. Nā. |
| மலையாழம் | malaiyāḻam n. See மலையாளம். (W.) . |
| மலையாள் | malaiyāḷ n. <>மலை4. Pārvatī, as daughter of the Himalayas; பார்வதி. மலையாண் மணவாளா (திருவாச. 6, 40). |
| மலையாளபகவதி | malaiyāḷa-pakavati n. <>மலையாளம்+. 1. Durgā, as the patron deity of sorcery and magic; மந்திரங்களுக்கு அதிதேவதையாகக் கருதப்படும் துர்க்காதேவி. (W.) 2. One who deceives by his ostentations; |
| மலையாளம் | malai-y-āḷam n. <>மலை4+ஆள்-. Malabar, one of 56 tēcam, q.v.; தேசம் ஐம்பத்தாறனு ளொன்று. |
| மலையாளர் | malaiyāḷar n. <>மலையாளம். Inhabitants of mountainous tracts, as Travancore, Cochin, etc.; மலைநாட்டார். அந்தணர்களான மலையாளர் (தேவா. 325, 11). |
| மலையாளர்வளைப்பு | malaiyāḷar-vaḷaippu <>மலையாளர்+. Stubborn entreaty in order to gain one's end, as characteristic of the ancient Malayāḷis; மலையாளிகளைப்போல ஒருவன் பக்கலில் ஒன்றை வாங்க நினைத்தால் வாங்கி யல்லது போகாத்தன்மை. நாழிகை முப்பது சென்றாலும் மலையாளர் வளைப்புப் போலே ஒரடி பேராதாய்த்து (ஈடு, 10, 3, 3). |
| மலையாளரூட்டு | malaiyāḷar-ūṭṭu n. <>id.+. Habit of feasting or fasting for days at a time, as characteristic of ancient Malayāḷis; மலையாளிகளைப்போலப் பலநாளுண்ணவும் பலநாள் பட்டினிகிடக்கவும் வல்லராந் தன்மை மலையாள ரூட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லர்களாய் (திவ். திருநெடுந்.1, 5). |
| மலையாளி | malai-y-āḷi n. <>மலையாளம். 1. Native of the mountainous regions; மலையில் வாழ்பவன். 2. Native of malabar; 3. A Tamil-speaking caste on the Shevaroy hills, said to have been originally Vēḷāḷa cultivators who emigrated from Conjeevaram when Muhammadans first invaded south India; 4. Black pepper; |
| மலையான் | malaiyāṉ n. <>மலை4. See மலையாளி, 1. (W.) . |
| மலையானிலம் | malaiyāṉilam n. <>malayānila. Balmy southern breeze, as from the Malayam hills; தென்றல். நிலவும் விரையார் மலையா னிலமு மெரியாய் வருமால் (பெரியபு. தடுத்தாள். 175). |
| மலையானை | malai-yāṉai n. <>மலை4+. Mountain elephant. See கிரிசரம். (திவா.) |
| மலையிச்சி | malai-y-icci n. <>id.+. Ovalleaved fig, l. tr., Ficus retusa; மரவகை. (L.) |
| மலையிஞ்சி | malai-y-ici n. <>id.+. A kind of ginger; இஞ்சிவகை. Nā. |
| மலையிடறு | malai-y-iṭaṟu n. <>id.+. Great obstacle; பெருந்தடை. (பி. வி.19, உரை.) |
| மலையிரும்பு | malai-y-irumpu n. <>id.+. Iron-sand; உலோகமணல். (யாழ். அக.) |
| மலையிருவேலி | malai-y-iruvēli n. <>id.+. A mountain grass; ஒருவகை மலைப்புல். (W.) |
| மலையிலக்கு | malai-y-ilakku n. <>id.+. That which is conspicuous, as a mountain; வெளிப்படையானது. வார்த்தையினை மலையிலக்கென நம்பினேன் (தாயு. மௌன.10). |
