Word |
English & Tamil Meaning |
---|---|
மனை | maṉi n. prob. மன்னு-. 1. House, dwelling, mansion; வீடு, சீர்கெழு வன்மனை திளைத்து (சீவக. 828). 2. House-site; 3. Ground, a land-measure = 40' x 60' = 2400 sq. ft. = 1/24 kāṇi; 4. Wife; 5. Family, household; 6. Domestic life; 7. Square, as of a chess-board; 8. Mother; |
மனைக்கட்டு | maṉai-k-kaṭṭu n. <>மனை+. House-site, building site; வீடுகட்டற்குரிய இடம். |
மனைக்கட்டுநிவேசனம் | maṉai-k-kaṭṭu-nivēcaṉam n. <>மனைக்கட்டு+. Ground on which a house stands; வீடுகட்டப்பட்ட இடம் (W.) |
மனைக்கிழத்தி | maṉai-k-kiḻatti n. Fem. of மனைக்கிழவன். Wife, as mistress of the house; (வீட்டுக்குரியவள்) மனைவி தொல்குடியின் மக்கட்பெறலின் மனைக்கிழத்தி (திரிகடு. 64). |
மனைக்கிழவன் | maṉai-k-kiḻavaṉ n. <>மனை+. Husband, as master of the house; [வீட்டுக்குரியவன்] கணவன். |
மனைக்கோள் | maṉai-k-kōḷ n. <>id.+ Lizard ; பல்லி. (W.) |
மனைகட்டு - தல் | maṉai-kaṭṭu- v. intr. <>id.+. To win a game, as in dice-play; சொக்கட்டானில் ஒர் ஆட்டம் செயித்தல். முற்பட இடுகின்ற தாயம் முன்னே மனைகட்டலாம்படி (கலித்.136, உரை). |
மனைகோலு - தல் | maṉai-kōlu- v. intr. <>id.+. To build a house; வீடு கட்டுதல் |
மனைச்சீட்டு | maṉai-c-ciṭṭu n. <>id.+. Title-deed of a house-site; மனைக்கிரயபத்திரம். (W.) |
மனைத்தாயம் | maṉai-t-tāyam n. <>id.+. Domestic life; இல்லறவொழுக்கம். (J.) |
மனைப்படப்பு | maṉai-p-paṭappu n. <>id.+. See மனைப்படப்பை. வழிபாடு செய்வார்க்க மனையும் மனைப்படப்பும் நீக்கி (S. I. I. i, 151). |
மனைப்படப்பை | maṉai-p-paṭappai n. <>id.+. House garden; வீட்டுக்கொல்லை. (S. I. I.i, 86.) |
மனைப்பலி | maṉai-p-pali n. <>id.+. Sacrifice to household gods; மனையுறை தெய்வங்கட்கிடும் பலி. மனைப்பலியூட்டினமை கண்டுண்க வூண் (ஆசாரக். 40). |
மனைப்பாம்பு | maṉai-p-pāmpu n. <>id.+. 1. Common brown snake, Lycodon aulicus; பாம்புவகை; 2. Cobra which has grown short with age and lives in houses; |
மனைமரம் | maṉai-maram n. <>id.+. Clearing-nut tree. See தேற்றா. (பரிபா. 11, 19, உரை.) |
மனைமுதல் | maṉai-mutal n. <>id.+. See மனைக்கிழத்தி. நாளு மனைமுதல் வினையொடு முவப்ப (அகநா. 51). . |
மனைமுறி | maṉai-mūri n. <>id.+. See மனைச்சீட்டு. (W.) . |
மனையடிசாஸ்திரம் | maṉai-y-aṭi-cāstiram n. <>id.+ அடி3+. Treatise on house building; வீடுகட்டுமுறைகளை யுணர்த்தும் நூல். |
மனையறம் | maṉai-y-aṟam n. <>id.+. Domestic or married life; இல்லறம் வான்றரு கற்பின் மனையறம் பட்டேன் (மணி. 22, 53, ) |
மனையாட்டி | maṉai-y-āṭṭi n. <>id.+ ஆள்- See மனையாள். (சூடா.) . |
மனையாள் | maṉaiyāl n. <>id. [K. manegavaḷu] Wife; மனைவி மனையாளை யஞ்சு மறுமையில் லாளன் (குறள், 904). |
மனையிறை | maṉai-y-iṟai n. <>id.+. House-tax; வீட்டு வரி. மனையிறை காலே யரைக்கால் பழங்காசு (Pd. Insc. 288). |
மனையுறைமகள் | maṉai-y-uṟai-makal n. <>id.+உறை-+. Married woman; விவாகமான பெண் வான்றரு கற்பின் மனையுறை மகளிரில் (மணி. 15, 77). |
மனையோள் | maṉaiyōl n. <>id. See மனையாள்: னையோன் விரும்பி (புறநா. 333). . |
மனைவரி | maṉai-vari n. <>id.+. Housetax, quit-rent; வீட்டுவரி. (W.) |
மனைவழி | maṉai-vaḻi n. <>id.+. Housesite; வீட்டுக்குரிய இடம் மனை வழி கூறிடாது நகரப்பொதுவாய்க்கிடந்த (S.I.I. iii, 25): |
மனைவாழ்க்கை | maṉai-vāḻkkai n. <>id.+. [K. manevālte.] Householder's life; இல்வாழ்க்கை ஊரன்றன் மனைவாழ்க்கை பொலிக (ஐங்குறு.3). |
மனைவி | maṉaivi n. <>id. 1. Wife; இல்லாள். இன்ப மருந்தினான் மனைவி யொத்தும் (சீவக. 1895). 2. Heroine of a pastoral or agricultural tract; 3. Female owner or resident of a house; |