Word |
English & Tamil Meaning |
---|---|
முக்காட்டங்கி | mukkāṭṭaṅki n. <>முக்காடு+அங்கி. Hood or veil, worn by women; மகளிருடைய தலைமறைவுச்சீலை. (W.) |
முக்காட்டுக்கூறை | mukkāṭṭu-k-kūṟai n. <>id.+. 1. Garment given by the parents to the bride to cover her head; மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைச்சீலை. (W.) 2. Garment given by the parents of a woman on the occasion of her widowhood; |
முக்காட்டுச்சீலை | mukkāṭṭu-c-cīlai n. <>id.+. See முக்காட்டங்கி. (W.) . |
முக்காடு | mukkāṭu n. prob. முகம்+ஆடை. of. முட்டாக்கு. [M. mukkādu.] Veil, or cloth worn to cover one's head; தலைமறைவுச்சீலை. கவலை யுட்கொடு போர்த்த முக்காடு (பிரபோத. 3, 55). |
முக்காணி 1 | mu-k-kāṇi n. <>மூன்று+காணி1. The fraction 3/80, as three kāṇi; 'க்ஷ' என்ற குறியுள்ளதும் எண்பதில் மூன்றுபங்குடையதுமான பின்னவெண். Loc. |
முக்காணி 2 | mu-k-kāṇi n. <>id.+கோணம்2. Triangular frame on the neck of cattle to prevent them from going astray or drinking their own milk or urine; தன்னிச்சையாய் ஓடாமலிப்பதற்கும் தன் பால் மூத்திரம் முதலியவற்றைக் குடியாமலிருப்பதற்கும் மாட்டின் கழுத்திலிடும் முக்கோண வடிவாயமைந்த தளை. Loc. |
முக்காணி 3 | mukkāṇi n. See முக்காணியர். (G. Tn. D. I, 507.) . |
முக்காணியர் | mukkāṇiyar n. <>முக்காணி3. A class of Brahmins, who wear the hair-tuft in front of the head, as belonging to the village Mukkāṇi in Tinnevelly district; முன்குடுமி தரிப்பவரும் திருநெல்வேலி ஜில்லாவில் முக்காணிகிராமத்தைச் சார்ந்தவருமாகிய பார்ப்பன வகையார். |
முக்காதலர் | mu-k-kātalar n. <>மூன்று+. The triple friends, viz., kaṇavaṉ, tōḷaṉ, makaṉ; கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள். (W.) |
முக்காய்வேளை | mukkāy-vēḷai n. Five-leaved wild indigo, m. sh., Tephrosia senticosa; மருந்துச்செடிவகை. (L.) |
முக்காரம் 1 | mukkāram n. cf. mukhara. Bellowing or roar of a bull; எருதின் முழக்கம். |
முக்காரம் 2 | mukkāram n. prob. mudgara. 1. Wooden bar; மரக்கட்டை. Loc. 2. Bolt; |
முக்காரம் 3 | mukkāram n. <>முஷ்கரம். Stubbornness; பிடிவாதம். இவள் முக்காரம் போட்டுக்கொண்டிருக்கிறாள். (W.) |
முக்காரமிடு - தல் | mukkāram-iṭu- v. tr. <>முக்காரம்2+. To plug, stop up, as a hole; துவாரமுதலியன அடைத்தல். மூலத்துவார்த்தை முக்கார மிட்டு (திருமந். 583). |
முக்கால் 1 | mu-k-kāl n. <>மூன்று+கால்1. 1. The fraction 3/4, as three-quarters; 'தெ' என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண். 2. A kind of metre; |
முக்கால் 2 | mu-k-kāl n. <>id.+கால்4. 1. Three times; மும்முறை. ஆரியனை முக்காலும் வலங்கொடு (கம்பரா. அதிகாய. 87) 2. A third time; 3. See முக்காலம், 1. |
முக்கால்நோக்கு | mukkāl-nōkku n. <>முக்கால்1+. (Astrol.) Aspect of a planet having three-quarters of a sight one of four kiraka-nōkku, q.v.; நால்வகைக் கிரகநோக்குக்களுள் ஒரு கிரகம் முக்கால் பார்வையோடு நோக்குகை. |
முக்கால்வட்டம் | mu-k-kāl-vaṭṭam n. <>முக்கால்2+. Temple, shrine; கோயில். (T. A. S. iii, 193.) |
முக்காலம் | mu-k-kālam n. <>மூன்று+. 1. The three parts of the day. See திரிகாலசந்தி. 2. The three divisions of time, viz., iṟappu, nikaḻvu, etirvu; 3. (Mus.) Tempo. |
முக்காலமறிந்தவன் | mukkālam-aṟinta-vaṉ n. <>முக்காலம்+. Sage, as knowing the past, the present and the future; திரிகால ஞானி. |
முக்காலி | mu-k-kāli n. <>மூன்று+கால்1. 1. Three-footed stool, tripod; மூன்றுகாற்பீடம். 2. Fire; |
முக்காவனாடு | mu-k-kāvaṉāṭu n. perh. id.+காவல்+நாடு. A small district in ancient Tamiḻakam; தமிழகத்துப் பழைய சிறு நாடுகளுள் ஒன்று. முக்காவனோட்டு ஆமூர்மல்லனை (புறநத. 80, தலைப்பு). |
முக்காவேளை | mukkā-vēḷai n. See முக்காய்வேளை. (பதார்த்த. 472.) . |
முக்காழ் | mu-k-kāḻ n. <>மூன்று+காழ்3. Pearl necklace of three strands; மூன்றுகோவையாலான முத்துவடம். மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ் (மணி. 3, 135). |