Word |
English & Tamil Meaning |
---|---|
மீனச்சனி | mīṉa-c-caṉi n. <>மீனம்2+. Saturn in pisces, considered unpropitious; மீனராசியிலுள்ள சனி. (W.) |
மீனஞ்சு | mīṉacu n. <>மீன்2+நஞ்சு. See மீன்கொல்லி. (மலை) . |
மீனத்துவசன் | mīṉa-t-tuvacaṉ n. <>mīna-dhvaja . See மீன்கொடியோன். வரிபயின் மீனத்துவசன் முன்னே (திருவிளை.பயகர.29) |
மீனநிலயம் | mīṉa-nilayam m. <>mīna-nilaya . Sea, as the abode of fish; [மீன்களின் இருப்பிடம்] கடல். மூதூர் மீனநிலயத்தி னுகவீசி (கம்பரா.பொழிவிறுத்.2) |
மீனம் 1 | mīṉam n. <>மீன்னு-. Star ; நட்சத்திரம். மீனத்திடைநிலை (மணி.11, 42) # 1 |
மீனம் 2 | mīṉam n. <>mīna . 1. Fish ; மீன். (திவா); 2. Pisces of the zodiac; 3. The 12th solar month. |
மீனம்பர் | mīṉ-ampar n. <>மீன்2+U. amber. Ambergris, grey amber, Ambragrisea ; மீன்வயிற்றிலகப்படும் ஒருவகை வாசனைப்பண்டம் |
மீனம்பல் | mīṉ-ampal n. See மீனம்பர். (யாழ்.அக) . |
மீனமேஷம்பார் - த்தல் | mīṉa-mēṣam-pār- v. intr. <>மீனம்2+மேஷம்+. 1. Lit., to be whether the rising sign is mīṉam or mēsam at hesitate overmuch; to be indecisive ; [மீனராசியா மேஷராசியா என்று பார்த்தல்] தீராச சந்தேகமுறுதல்; Colloq 2. To keep lent when a request is preferred; to refuse help when called upon; |
மீனரசு | mīṉ-aracu n. <>மீன்1+. Moon, as lord of the stars; [நட்சத்திரங்களின் அரசு] சந்திரன். மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து (சிலப்.4, 26) |
மீனராசி | mīṉa-rāci n. <>mīna+. See மீனம்2, 2. . |
மீனவன் | mīṉavaṉ n. <>மீன்2 . Pāṇdya king, as flying the fish-banner ; [மீன்கொடி யுடையவன்] பாண்டியன். தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்ப (காரிகை, பாயி.2) |
மீனவிராசி | mīṉa-v-irāci n. See மீனராசி . (W.) . |
மீனவுச்சன் | mīṉa-v-uccaṉ n. <>மீனம்2+. Cukkiraṉ, as having his exaltation in Pisces; [மீனராசியை உச்சத்தானமாகக் கொண்டவன்] சுக்கிரன். (நாமதீப.101) |
மீனன் | mīṉaṉ n. <>id. Jupiter, as the lord of Pisces; [மீனராசியை வீடாக வுடையவன்] வியாழன். (நாமதீப.100) |
மீனா | mīṉā n. A kind of hard wood, Spondia aurentalis; வயிரமுள்ள மரவகை. (Nels.) |
மீனாங்கன் | mīṉāṅkaṉ n. <>mīnāṅka . Kāma; மன்மதன். (சங்.அக) |
மீனாட்சி | mīnāṭci n. <>Mīnākṣī. 1. Umā, the tutelary Goddess of Madura; மதுரைத் தெய்வமாகிய உமாதேவி; 2. cf. matsyākṣī. A plant growing in damp places. |
மீனாண்டி | mīṉāṇṭi n. Sugar; சருக்கரை. (சங்.அக) |
மீனாம்பூச்சி | mīṉām-pūcci n. See மின்னாம்பூச்சி. (சங்.அக) . |
மீனாய் | miṉāy n. <>மீன்2+நாய். Otter, Lutra vulgaris; நீர்நாய். (யாழ்.அக) |
மீனாலயம் | mīṉālayam n. <>mīnālaya. See மீனநிலயம். (யாழ்.அக) . |
மீனிலா | mīṉilā n. <>மீன்1+நிலா. Starlight; நட்சத்திர வெளிச்சம். Loc. |
மீனுணங்கல் | mīṉ-uṇaṅkal n. <>மீன்2+. Salted, dried fish; கருவாடு. பன்மீ னுணங்கற் படுபுள் ளோப்புதும் (அகநா.80, 6) |
மீனூர்தி | mīṉ-ūrti n. <>id.+. Varuṇa, as having a fish as His vehicle ; [மீனை வாகனமாக உடையவன்] வருணன். (நாமதீப.82) |
மீனெண்ணெய் | mīṉ-eṇṇey n. <>id.+. 1. Malabar oil, Oleum pisces; மீனிலிருந் தெடுக்கும் நெய்; (M.M. 462.) 2. Cod liver oil, Oleum morrhuae; |
மீனெய் | mīṉey n. <>id.+நெய். Fish-oil; மீனிலிருந்து வடிக்குநெய். மீனெய்யொடு நறவு மறுகவும் (பொருந.215) . |
மீனெரிஞ்சான் | mīṉ-ericāṉ n. <>id.+prob. எறி-. See மீன்கொல்லி. (மலை) . |
மீனெறிபறவை | mīṉeṟi-paṟavai n. <>id.+எறி-+. See மீன்கொத்தி. (திவா) . |
மீனேறு | mīṉ-eṟu n. <>id.+. Shark; சுறாமீன். (திவா) ரனெ றுயர்த்தகொடி (சீவக.6) |