Word |
English & Tamil Meaning |
---|---|
முக்காழி | mu-k-kāḻi n. <>id.+காழ்4. Fruit containing three stones or seeds, as of the palmyra palm; மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன. முக்காழி யிருப்பை. |
முக்கானோக்கு | mukkāṉōkku n. (Astrol.) See முக்கால்நோக்கு. (W.) . |
முக்கிமுனகு - தல் | mukki-muṉaku- v. intr. முக்கு-+. See முக்கிமுளங்கு-. . |
முக்கிமுனங்கு - தல் | mukki-muṉaṅku- v. intr. <>id.+. 1. To grumble; மனமின்மை காட்டி முணுமுணுத்தல். 2. To suffer much; |
முக்கியப்பொருள் | mukkiya-p-poruḷ n. <>முக்கியம்+. Primary, literal signification, dist. fr. kauṇa-p-poruḷ; இலக்கணையாகவன்றிச் சொல்லின்படி நேராகக் கொள்ளும் பொருள் (சி. சி. பாயி. 2, ஞானப்.) |
முக்கியம் | mukkiyam n. <>mukhya. 1. That which is primary, principal or important; சிறப்புடையது. முடித்துக் கொண்ட முக்கியமும் (திவ். திருவாய். 5, 10, 9). 2. Greatness, eminence, superiority; |
முக்கியஸ்தன் | mukkiya-staṉ n. <>mukhyastha. Chief person, leading man; தலைமையாளன். |
முக்கு 1 - தல் | mukku- 5 v. intr. <>முற்கு. [T. mukku, K. mukkiri, M. mukkuga.] 1. To strain, as a woman in travail; முயற்சி முதலியவற்றில் இறுகப்பிடித்த முச்சைச் சிற்றொலிபட வெளிவீடுகை. 2. To make great efforts; |
முக்கு 2 - தல் | mukku- 5 v. tr. cf. மொக்கு-. To eat in large mouthfuls; நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல். பாசவன் முக்கி (புறநா. 63). |
முக்கு 3 - தல் | mukku- 5 v. tr. <>முழுக்கு-. To press anything under water; to immerse; மூழ்குவித்தல். தீர்த்தம் . . . அதிலெனை முக்கியெடுத்து (தணிகைப்பு. நந்தி. 60). |
முக்கு 4 | mukku n. <>முக்கு1-. 1. See முக்கல், 1,2. Colloq. . 2. Suffocation; 3. A disease; |
முக்கு 5 | mukku n. <>முடுக்கு. [M. mukku.] 1. Corner; மூலை. 2. Lane, nook; |
முக்குக்கடுக்கன் | mukku-k-kaṭukkaṉ n. A kind of ear-ring; கடுக்கன்வகை. Loc. |
முக்குடுமி | mu-k-kuṭumi n. <>மூன்று+. 1. Triple lock of hair; குடுமிவகை. (W.) 2. Tri-dent; |
முக்குடுமியெறிவேல் | mukkuṭumi-y-eṟi-vēl n. <>முக்குடுமி+. See முக்குடுமி, 2. (தக்கயாகப். 461.) . |
முக்குடை | mu-k-kuṭai n. <>மூன்று+. An umbrella peculiar to Arhat, of three tiers, viz., cantirālittam, nittiya-viṉōtam, cakalapācaṉam; அருகக்கடவுட்கு உரியதும், சந்திராதித்தம் நித்திய வினோதம் சகலபாசனம் என மூவடுக்குள்ளதுமான குடை. குளிர்முக்குடையி னிழலோய்நீ (சீவக. 1244). |
முக்குடைக்கல் | mukkuṭai-k-kal n. <>முக்குடை+. Boundary stone for lands granted to Jaina institutions, as marked by mukkuṭai; சைன தருமங்கட்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பெற்ற கல். (Insc.) |
முக்குடைச்செல்வன் | mukkuṭai-c-cel-vaṉ n. <>id.+. Arhat, as having mukkuṭai; [முக்குடையுடையவன்] அருகக்கடவுள். (சூடா.) |
முக்குடையான் | mukkuṭaiyāṉ n. <>id. See முக்குடைச்செல்வன். முக்குடையான் றாளினை (சீவக. 3142.) . |
முக்குடையோன் | mu-k-kuṭaiyōṉ n. <>id. See முக்குடைச்செல்வன். (திவா.) . |
முக்குணம் | mu-k-kuṇam n. <>மூன்று+. The three fundamental qualities. See திரிகுணம். (திவா.) முக்குணவசத்தான் முறைமறந்தறைவரே (இலக். கொத். 6). |
முக்குணுக்கிடு - தல் | mu-k-kuṇukkiṭu- v. tr. <>id.+குணக்கு+இடு-. To cause three bendings, as in a pose of the body; மூன்றுவளைவு உண்டாம்படி செய்தல். (திவ். பெரியதி. 8, 2, 5, வ்யா.) |
முக்குராணிபோடு - தல் | mukkurāṇi-pō-ṭu- v. intr. prob. மூக்கு+உதிஞ-+. To immerse the nose deeply in water when drinking, as bulls; நீர் குடிக்கும்போது மாடு முதலியவை மூக்கை நீருட் செலுத்தி யுறிஞ்சுதல். மாடு முக்குராணிபோட்டுக் குடிக்கிறது. |
முக்குலம் | mu-k-kulam n. <>மூன்று+. The three ancient lines of kings. See இராசகுலம். 2 முக்குலத்தினு மதிக்குல முதன்மை பெற்றதுவென்று (பாரத. குருகுல. 28). |
முக்குலைச்சு | mukkulaiccu n. See முக்கால்1, 1. (J.) . |
முக்குழி | mu-k-kuḻi n. <>மூன்று+. Sacrificial pits for maintaining the three Vēdic fires; மூன்று வேதாக்கினிகளை வளக்க்குங் குழிகள். சமிதை முக்குழிக்கூட்டுத்துட்பட வோக்கி (பெருங். இலாவாண. 3, 15). |