Word |
English & Tamil Meaning |
---|---|
முக்கோண் | mu-k-kōṇ n. See முக்கோணம்,1. வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும் (பெருங். உஞ்சைக். 42, 29). . |
முக்கோணம் | mu-k-kōṇam n. <>மூன்று+கோணம்1. 1. Triangle; மூன்று கோணங்களையுடைய வடியம். 2. A hell; |
முக்கோல் | mu-k-kōl n. <>id.+கோல்1. 1. The trident staff carried by ascetics. See திரிதண்டம். நூலே கரக முக்கோன் மணையே (தொல். பொ. 625). 2. The 22nd nakṣatra. |
முக்கோற்பகவர் | mukkōṟ-pakavar n. <>முக்கோல்+. A class of ascetics who carry tiritaṇṭam; திரிதண்டந் தாங்கிய சந்நியாசிகள். இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு (கலித். 9, துறைக்குறிப்பு). |
முக்தகஞ்சுகம் | mukta-kacuka n. <>mukta-kacukam Snake which has cast off its slough; தோலுரித்த பாம்பு. (அரு. அக.) |
முக்தசர் | muktacar, <>U. mukhtasar. (C. G.) adj. 1. Abbreviated, abridged, brief, short, succinct; சுருக்கமான. முக்தசராய்ச் சொன்னாள். --n. 2. Gist, abstract; |
முக்தன் | muktaṉ . See முத்தன். . |
முக்தா | muktā n. <>U. maqta. Rent fixed for a village as a whole; ஒரு கிராமத்திற்கு நிச்சயிக்கப்பட்ட மொத்தத்தீர்வை. (C. G.) |
முக்தாகரம் | muktākaram n. <>muktākara. Mussel-shell; முத்துச்சிப்பி. (அரு. அக.) |
முக்தாபலம் | muktā-palam n. <>muktāphala. (அரு. அக.) 1. Pearl; முத்து. 2. Camphor; |
முக்தி | mukti n. <>mukti. See முத்தி. . |
முக்தியார் | muktiyār n. <>U. mukhtār. Attorney, pleader; பிறர்க்காக வழக்கை வாதிப்போன். (C. G.) |
முக்தியார்நாமா | muktiyār-nāmā n. <>id.+. Power of attorney; அதிகாரபத்திரம். (C. G.) |
முக 1 - த்தல் | muka- 12 v. tr. [K. moge.] 1. To draw, as water; to bale; மொள்ளுதல். கனையிருள் வானங் கடன்முகந்து (கலித். 145). 2. To measure, as grain or liquid; 3. To obtain in full measure; 4. To lift, take up; 5. cf. உக-. To desire, like; |
முக 2 - த்தல் | muka- 12 v. tr. <>மோ-. To smell; முக்கால் நுகருதல். Colloq. |
முகக்கட்டை | muka-kaṭṭai n. <>முகம்+. Chin; மோவாய்க்கட்டை. (W.) |
முகக்கடுப்பு | muka-k-kaṭuppu n. <>id.+. Severity of countenance; முகத்தில் தோன்றும் கடுமைக்குறி. (W.) |
முகக்கண்ணாடி | muka-k-kaṇṇāṭi n. <>id.+. Mirror; looking glass; முகம் பார்க்குங் கண்ணாடி. முட்டிணைவட்டு முகக்கண்ணாடியும் (பெருங். உஞ்சைக். 38, 170). |
முகக்கயில் | muka-k-kayil n. <>id.+கயில்2. Upper half of a coconut shell with the kernel; உடைந்த தேங்காயின் கண்ணூள்ளதாகிய மேன்முறி. (J.) |
முகக்கருவி | muka-k-karuvi n. <>id.+. Bit of a bridle; கடிவாளம். குதிரைகள் . . முகக்கருவி பொராப்பட்ட செவ்வாயை உடைமையான் (புறநா. 4, 8, உரை). |
முகக்களை | muka-k-kaḷai n. <>id.+களை5. Charm or brightness of countenance; attractiveness of face; முகத்தின் அழகு. Colloq. |
முகக்கிளர்ச்சி | muka-k-kiḷarcci n. <>id.+. See முகமலர்ச்சி. (W.) . |
முகக்குறி | muka-k-kuṟi n. <>id.+. Facial expression, indication of the face; முகத்திற் றோன்றுங் குறிப்பு. |
முகக்கொம்பு | muka-k-kompu n. <>id.+. Horn bent forward; கால்நடையின் முன்வளைந்த கொம்பு. (W.) |
முகக்கொள்(ளு) - தல் | muka-k-koḷ- v. tr. <>முக1-+. To take in; to comprehend; அளந்து கொள்ளுதல். கண்ணுக்கு முகக்கொள்ள வொண்ணாத போக்யதை யுடையவன் (ஈடு, 5, 8, 7). |
முகக்கொள்ளி | muka-k-koḷḷi n. <>முகம்+. Will-o'-the-wisp, ignis fatuus; கொள்ளிவாய்ப்பேய். முடைக்கொள்ளு முதிர வூன்செம் முகக்கொள்ளி கொண்டு நேடி (இரகு. குசனயோ.22). |
முகக்கோட்டம் | muka-k-kōṭṭam n. <>id.+. Expression of face, indicating grief, dislike, reluctance, etc.; வெறுப்பு துக்கம் முதலியவற்றின் குறியாக முகங்கோணுகை. |