Word |
English & Tamil Meaning |
|---|---|
| ராகு | rāku n. <>rāhu. Moon's ascending node. See இராகு1. வேக ராகுவென (கம்பரா. இராவணன்தானை. 19). |
| ராகுத்தராயன் | rākutta-rāyaṉ n. <>ராவுத்தன்+ராயன். [K. rāhutarāya.] Trooper, cavalier. See இராவுத்தன், 1. இராகுத்தராயன் என்று (திருவாலவா. 28, 83, பிம்.) |
| ராங்கி | rāṅki n. <>E. rank. Affectation; vanity; haughtiness; செருக்கு. Colloq. |
| ராசக்காணம் | rāca-k-kāṇam n. <>rājan+காணம்1. Revenue, king's share of the produce; அரசனுக்குரிய வரி முதலியன. (S. I. I. ii, 352.) |
| ராசசூயம் | rāca-cūyam n. <>rāja-sūya. A sacrifice; See இராசசூயம், 1. . |
| ராசதானி | rācatāṉi n. <>rāja-dhānī. 1. Capital city; தலைநகர். சிவராசதானியாய் (குமர. பிர. 67). 2. Province, presidency; |
| ராசமண்டலம் | rāca-maṇṭalam n. <>rāja-+maṇdala. Assembly of kings; அரசர்கூட்டம். அன்றிருந்த ராசமண்டலம் (பாரத. வாரண. 63). |
| ராசன் | rācaṉ n. <>rājan. See ராஜா, 1. . |
| ராசா | rācā n. <>rājā. 1. See ராஜா, 1. (தக்கயாகப். 4, உரை.) . 2. See ராஜா, 2. |
| ராசி 1 | rāci n. <>rāji. Row. See இராசி1. . |
| ராசி 2 | rāci n. <>rāši. 1. Collection. See இராசி2, 1. . 2. Heap. See இராசி2, 3. Kind, sort. See இராசி2, 3. 4. Aggregate. See இராசி2, 4. 5. Sign of the zodiac. See இராசி2, 5. 6. Luck. See இராசி2, 6. Colloq. 7. Disposition. See இராசி2, 7. Colloq. 8. Agreement, harmony. See இராசி2, 8. Colloq. 9. (Arith.) Product of terms, used in the calculation of interest, etc.; 10. Coin; |
| ராசி 3 | rāci n. <>U. rāzī. See இராசி3. (W.) . |
| ராசிபோகம் | rāci-pōkam n. <>ராசி2+. (Astron.) The passage of a planet through a sign of the zodiac; கிரகமொன்று ஓர் இராசியைக் கடந்து செல்லுகை. |
| ராசிமானம் | rāci-māṉam n. <>id.+மானம்1. 1. (Astron.) Calculation of the position of a planet in the zodiac; கிரகநிலையைக் கணிக்குழறை. 2. (Astron.) Time taken for a particular sign of the zodiac to pass the horizon; |
| ராசியம் | rāciyam n. 1. See ரகசியம், 1. தேவ ராசிய மொன்றுண்டாம் (அரிச். பு. விவாக. 43). 2. See ரகசியம், 2 |
| ராட்சதன் | rāṭcataṉ n. <>rākṣasa. Giant; demon; goblin; See இராக்கதன். (W.) . |
| ராட்டிரம் | rāṭṭiram n. See ராஷ்டிரம். பாராட்டிரத்து ராசாக்களுடைய (தக்கயாகப். 4, உரை). |
| ராட்டினம் | rāṭṭiṉam n. <>U. rāhaṭā. [K.rāṭavāṇa.] Spinning wheel; pulley for drawing water; reel; ginning machine; whirligig. See இராட்டினம், 4. . |
| ராட்டு | rāṭṭu n. See ராட்டினம். Colloq. . |
| ராட்டை | rāṭṭai n. <>Hind. rāhaṭā. See ராட்டினம். Loc. . |
| ராணி | rāṇi n. <>Pkt. rāṇī <>rājī. 1. Queen; இராணி. 2. Princess; |
| ராணு | rāṇu n. cf. ராணுவம். Infantry; காலாட்படை. வாரிட்ட ராணு வரிசையாய் நிற்க (விறலிவிடு. 1049). |
| ராணுவப்பேர் | rāṇuva-p-pēr n. <>ராணுவம்+. Persons in command of armies; சேனைத்தலைவர். அச்சமில்லா ராணுவப்பேர் (கூளப்ப. 53). |
| ராணுவம் | rāṇuvam n. [T. rāṇuva.] Army. See இராணுவம். . |
| ராத்தல் | rāttal n. A measure of weight. See இராத்தல். . |
| ராத்தல்தராசு | rāttal-tarācu n. <>ராத்தல்+. The spring balance, used chiefly in weighing hides, wool, palmyra-fibre, yarn, etc.; தோல் முதலியன நிறுக்கும் நிறைகோல்வகை. Loc. |
| ராத்திரி | rāttiri n. <>rātri. Night; இராத்திரி. ராத்திரி மேனியம்மான் (அஷ்டப். திருவேங்கடத். 24). |
| ராதாமனோகரம் | rātā-maṉōkaram n. prob. radhā-manōhara. A flowering creeper; பூங்கொடிவகை. Loc. |
| ராதாரி | rātāri n. See ரஹதாரி. (C. G.) . |
| ராதாரிச்சீட்டு | rātāri-c-cīṭṭu n. <>ராதாரி+. 1. Note of permission; அனுமதிச்சீட்டு. 2. See ரஹதாரி. |
| ராப்தா | rāptā n. <>Arab. rabitā. 1. Bond, that which binds one thing with another; இணைப்பு. 2. Friendliness; 3. Habit custom; 4. Mamool, precedent; 5. Thoroughfare; |
