Word |
English & Tamil Meaning |
|---|---|
| வளர்பிறை | vaḷar-piṟai n. <>வளர்1-+. 1. Crescent moon, waxing moon; பூர்வபட்சத்துச் சந்திரன். மங்குல் விசும்பின் வளர்பிறை போலவும் (பொருங். நரவாண.1, 167). 2. The bright half of the lunar month, opp. to tēy-piṟai; |
| வளர்மயிர் | vaḷar-mayir n. <>id.+. Tuft, knot of hair; மயிர்க்குழற்சி. (W.) |
| வளர்வு | vaḷarvu n. <>id. See வளர்ச்சி, 1. (W.) . |
| வளரறம் | vaḷar-aṟam n. <>id.+. Increasing virtue; மிகுகின்ற ஆறம். (W.) |
| வளரி | vaḷari n. perh. id. 1. See வளரித்தடி. மறவன் கொடுப்பது வளரிப் பிரசாதம். . 2. A kind of wee; |
| வளரித்தடி | vaḷari-t-taṭi n. <>வளரி+. Boomerang, short weapon of hard wood or iron, crescent-shaped, one end being heavier than the other and the outer edge sharpened; ஒருபுறம் கனமாகவும் மற்றொருபுறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினார் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி. |
| வளவள 1 - த்தல் | vaḷavaḷa- 11 v. intr. prob. வளர்2-. (W.) 1. To be talkative; to be wordy; சுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களைப் பெருக்குதல். 2. To babble; |
| வளவள 2 - த்தல் | vaḷa-vaḷa- 11 v. intr. See வளுவளு-. (W.) . |
| வளவளப்பு | vaḷavaḷappu n. <>வளவள1-. 1. Talkativeness; wordiness; சுருக்கமின்றி அனாவசியமாகச் சொற்களை விரிப்பது. 2. Vain talk, babbling; |
| வளவன் | vaḷavaṉ n. <>வளம். cf. vallabha. 1. Cōḻa king; சோழன். இயறேர் வளவ (புறநா. 7). 2. Agriculturist; |
| வளவி | vaḷavi n. prob. வளை1-. Sloping roof, eaves; வீட்டிறப்பு. (பிங்.) |
| வளவு 1 - தல் | vaḷavu- 5 v. tr. perh. வளர்2-. To bring up, rear; வளர்த்தல். வெட்டுணி யுன் மகனை மெல்ல வளவாக்கால் (ஆதியூரவதானி. 38). |
| வளவு 2 | vaḷavu n. prob. வளா1. [T. velavu.] 1. House; வீடு. வளவிற்கமைந்த வாயிற்றாகி (பெருங். இராவாண. 6, 77). 2. Household premises; |
| வளன் | vaḷaṉ n. See வளம். பெருவளனெய்தி (பெரும்பாண். 26). . |
| வளா 1 | vaḷā n. prob. வளாவு1-. Circuit; area; spread, as of a tank; பரப்பு. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள், 523). |
| வளா 2 | vaḷā int. [K. bhaḷā.] Word of exclamation meaning 'bravo'. See பளாபளா. (W.) |
| வளாகம் | vaḷākam n. prob. வளா1+அகம்1. 1. Place; இடம். (பிங்.) புலன்களைந்தும் வென்றவர் வளாகந்தன்னுட் சென்றிலேன் (தேவா. 1193, 1). 2. Enclosing, surrounding; 3. Earth; 4. Continent; 5. Country; 6. Millet-field; 7. See வளா1. 8. Garden; |
| வளாஞ்சி | vaḷāci n. See வளார். Loc. . |
| வளார் | vaḷār n. cf. வளர்3. [T. malāramu.] Twig, tender branch; இளங்கொம்பு. புளியம் வளாரால் மோதுவிப்பாய் (தேவா. 1039, 1). |
| வளால் | vaḷāl n. prob. வளா1-. A kind of soil; தரைக்கூறுவகை. (செந். xiii, 172.) (Insc.) |
| வளாவு 1 - தல் | vaḷāvu- 5 v. tr. <>வளை2-. 1. To surround; சூழ்தல். (பிங்.) இளவெயில் வளாவ (பரிபா. 15, 27). மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42). To cover; |
| வளாவு 2 - தல் | vaḷāvu- 5 v. cf. அளாவு- tr. 1. To mix, as hot water with cold; to dilute; கலத்தல். தேன்வளாவியும் (கம்பரா. ஆற்றுப். 8). கடல் வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் (இறை. 3, பக். 47). - intr. 2. To be sociable, intimate; |
| வளி 1 | vaḷi n. perh. val. [T. M. vali.] 1. Wind, air; காற்று. வளிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி (குறள், 245). 2. Whirlwind; 3. Windy humour in the body; 4. cf. balin. Hernia; |
| வளி 2 | vaḻi n. <>āvali. (Jaina.) A small division of time; சிறிய காலவளவுவகை. கணம்வளியுயிர்ப்புத் தோவும் (மேருமந். 94). |
| வளிச்செல்வன் | vaḷi-c-celvaṉ n. <>வளி1+. Vāyu, the Wind-god; வாயுதேவன். (புறநா. 66, உரை.) |
| வளிசம் | vaḷicam n. <>vališa. Fishing rod; தூண்டில். (பிங்.) |
