Word |
English & Tamil Meaning |
|---|---|
| வள்ளியோன் | vaḷḷiyōṉ n. <>வண்-மை. Generous, liberal person; வண்மையுடையோன். வள்ளியோர்ப் படர்ந்து (புறநா. 47). |
| வள்ளுரம் | vaḷḷuram n. <>vallūra. 1. Muscle, flesh, meat; பசுந்தசை. முழூஉ வள்ளுர முணக்கு மள்ள (புறநா. 219). (பிங்.) 2. Beef; |
| வள்ளுவசாத்திரம் | vaḷḷuva-cāttiram n. <>வள்ளுவன்+. The art of foretelling, as practised by the Vaḷḷuvaṉ caste; சோதிடம். (W.) |
| வள்ளுவ - நாடு | vaḷḷuva-nāṭu n. A region in the Travancore State; திருவிதாங்கூர்ச்சீமையைச் சார்ந்த ஒருநாடு. (T. A. S. iii, 53, 54.) |
| வள்ளுவப்பண்டாரம் | vaḷḷuva-p-paṇṭāram n. <>வள்ளுவன்+பண்டாரம்2. A soothsayer of the Vaḷḷuva caste; வள்ளுவ சாதியிற் குறிசொல்வோன். |
| வள்ளுவப்பயன் | vaḷḷuva-p-payaṉ n. <>வள்ளுவர்+பயன். Kuṟal; திருக்குறள். (நன். 274, மயிலை.) |
| வள்ளுவப்பறையன் | vaḷḷuva-p-paṟaiyaṉ n. <>வள்ளுவன்+. See வள்ளுவப்பண்டாரம். . |
| வள்ளுவப்பை | vaḷḷuva-p-pai n. cf. வல்லுவப்பை. Long purse of silk or red cloth carried on the shoulders by a Nāṭṭukkōṭṭai Cheṭṭi bridegroom to receive betel and other gifts; நாட்டுக்கோட்டைச் செட்டிகளுள் மணமகன் தோண்மேல் இட்டுச்செல்லும் பட்டுப்பை. (E. T. V, 268.) |
| வள்ளுவன் | vaḷḷuvaṉ n. prob. வள்1. 1. A Paraiya caste, the members of which are royal drummers, and priets for Paraiyas; பறையருள் குருவாகவும் அரசன் ஆணையைத் தெரிவிப்போனாகவு முள்ள ஒரு சாதியான். (E. T. vii, 303.) 2. One who foretells events by omens; 3. An officer who proclaims the king's commands; 4. The authorn of the Kuṟal. |
| வள்ளூரம் | vaḷḷūram n. <>vallūra. 1. See வள்ளுரம், 1. கழுகுண்ண வள்ளூர மேசுமந்து (சீவக. 1552). . 2. Roast flesh; |
| வள்ளெனல் | vaḷḷeṉal n. Onom. expr. of barking sound; குரைக்கும் ஒலிக்குறிப்பு. (W.) |
| வள்ளை | vaḷḷai n. prob. valli. 1. Creeping bind weed, I pomaea aquatica; கொடிவகை. மகளிர் வள்ளை கொய்யும் (பதிற்றுப். 29, 2). 2. Song in praise of a hero, sung by women when husking or hulling grain; |
| வள்ளைக்கீரை | vaḷḷai-k-kīrai n. <>வள்ளை+. See வள்ளை, 1. (பதார்த்த. 596.) . |
| வள்ளைப்பாட்டு | vaḷḷai-p-pāṭṭu n. <>id.+. See வள்ளை, 2. (சிலப். 29.) . |
| வளகடா | vaḷa-kaṭā n. Corr. of வளர்கிடாய். (W.) . |
| வளகம் | vaḷakam n. <>pravāla-ka. Coral; பவளம். (சங். அக.) |
| வளகு | vaḷaku n. Common sebesten, m. tr., Cordia myxa; நீண்ட மரவகை. வளகின் குளமகமர்ந்துண்ட (கலித். 43). |
| வளங்கோலு - தல் | vaḷaṅ-kōlu- v. intr. <>வளம்+. To devise ways and means to achieve an object; காரிய முடிவிற்கு உபாயந்தேடுதல். (J.) |
| வளஞ்சியர் | vaḷaciyar n. A sect; ஒரு வகைச்சாதியினர். (I. M. P. Rd. 5.) |
| வளந்து | vaḷantu n. Big pot or vessel; பெரிய மிடா. (யாழ். அக.) |
| வள நாடு | vaḷa-nāṭu n. <>வளம்+. Fertile tract; செழிப்புள்ள தேசம். நேராதார் வளநாட்டை (பு. வெ. 3, 14, கொளு). |
| வளப்பம் 1 | vaḷappam n. <>id. 1. See வளம், 1. (பெரும்பாண். 253, உரை.) . 2. See வளம், 6, 7. (W.) |
| வளப்பம் 2 | vaḷappam n. <>வழங்கு-. Customs; peculiarities; வழக்கம். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? (W.) |
| வளப்பாடு | vaḷ-p-pāṭu n. <>வளம்+. 1. See வளம், 1. (திவா.) . 2. Increase; |
| வளம் | vaḷam n. <>வண்-மை. [T. vaḷamu, M. vaḷam.] 1. Fertility, productiveness; luxuriance; செழுமை. வளமுடி நடுபவர் (சீவக. 49). 2. Abundance, fulness; 3. Advantage; profit; 4. Wealth, riches; 5. Income; 6. Goodness; 7. Greatness, excellence; 8. Fitness; 9. Beauty; 10. Dignity, station; 11. Water; 12. Food; 13. Article of merchandise; 14. cf. வலம். Victory, success; 15. Path; 16. Part, side; |
