Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழுவாங்கி | vaḻuvāṅki n. A shrub; பூடு வகை. (சங். அக.) |
| வழுவாடி | vaḻuvāṭi n. <>வழுவு+ஆடு-. One who is careless or negligent in one's affairs; காரியத்தை நழுவ விடுபவன். (சங். அக.) |
| வழுவாதநாழி | vaḻuvāta-nāḻi n. <>வழுவு-+ஆ neg.+. Correct measure; சரியான அளவு படி. நாலுஉழக்கு வழுவாதநாழியால் . . . அட்டுவே னானேன் (S. I. I. i, 115). |
| வழுவாமை | vaḻuvāmai n. <>id.+.id. 1. Rectitude; integrity; நேர்மை. (W.) 2. Absence of error; inerrancy; |
| வழுவாய் | vaḻu-vāy n. <>வழு+. 1. Escape; தப்புகை. வழுவாயுண்டென மயங்குவோள் (மணி. 11, 130). 2. Sin; |
| வழுவி | vaḻuvi n. Country fig. See அத்தி1. (சங். அக.) |
| வழுவு - தல் | vaḻuvu- 5 v. intr. 1. To err; to swerve from the right; to go astrya; தவறுதல். தன்னியல் வழாஅது (புறநா. 25). 2. To miss, as a step; to sway down, as a load; to be turned out of a course; 3. To slip; 4. To be inaccurate; to be deficient; |
| வழுவு | vaḻuvu n. <>வழுவு-. See வழு. . |
| வழுவுடைக்காமம் | vaḻu-v-uṭai-k-kāmam n. <>வழு+உடை-மை+. (Akap.) Improper love. See பெருந்திணை. (திவா.) |
| வழுவை | vaḻuvai n. Elephant; யானை. (சூடா.) |
| வழூஉ | vaḻūu n. See வழு. வழூஉச் சொற்கோவலர் (கலித். 106). . |
| வழூஉச்சொற்புணர்த்தல் | vaḻūu-c-coṟpuṇarttal n. <>வழூஉ+. Employment of improper or inappropriate words and terms, one of ten nūṟ,-kuṟṟam, q.v.; நூற்குற்றம் பத்தனுள் பிழையுள்ள சொற்றொடர்களை அமைக்குங் குற்றம். (நன். 12.) |
| வழூஉநிலை | vaḻūu-nilai n. <>id.+. (Gram.) Erroneous use of words. See வழுநிலை. (W.) |
| வழை | vaḻai n. perh. வழுவு-. 1. Long-leaved two-sepalled gamboge. See சுரபுன்னை. வழைவளர்சாரல் (கலித். 50). 2. See வழைச்சு. பாக ரிறைவழை மதுநுகர்பு (பரிபா, 11, 66). |
| வழைச்சு | vaḻaiccu n. Freshness, as of palm juice; raw or unripe condition; புதுமை. சாடியின் வழைச்சற விளைந்த . . . நறும்பிழி (பெரும்பாண். 280). |
| வள் 1 | vaḷ n. <>வண்-மை. 1. Fertility; abundance; வளம். வள்ளிதழ் மாலை (சீவக. 2732). 2. Greatness, largeness; 3. Narrowness; |
| வள் 2 | vaḷ n. cf. val. 1. Sharpness, pointedness; கூர்மை. வள்வாயமதி (தேவா. 209, 1). (பிங்.) 2. Sword; 3. Thong, lash; 4. Sheath; 5. Bridle; 6. Ear; 7. Bed; |
| வள் 3 | vaḷ n. <>bala. 1. Strength; வலிமை. (பிங்.) வள்வார் முரசு (பு. வெ. 3, 2, கொளு). 2. Cramp-iron, iron-band; |
| வள்பு | vaḷpu n. <>வள்2. See வள், 3. மாசற விசித்த வார்புறு வள்பின் (புறநா. 50.) . |
| வளவு | vaḷvu n. <>id. See வள்2, 3. வாய்ந்து பண்ணுக (பு. வெ. 12, இருபால். 3). . |
| வள்ளக்கடவு | vaḷḷa-k-kaṭavu n. <>வள்ளம்+கடவு2. Jetty; தோணியில் ஏறியிறங்குந் துரை. Nā. |
| வள்ளக்களி | vaḷḷa-k-kaḷi n. <>id.+களி2. Boat-race; தோணிவிடும் பந்தயம். Nā. |
| வள்ளக்கால் | vaḷḷa-k-kāl n. prob. வளை-+ கால்1. 1. Bowleg; வளைந்தகால். Loc. 2. The bamboo lath connecting the levelling wood and the yoke of a field-leveller; |
| வள்ளடி | vaḷ-ḷ-aṭi n. <>வள்2+அடி3. Lobe of ear; காதினடி. (தைலவ.) |
| வள்ளம் | vaḷḷam n. [K. baḷḷa, M. vaḷḷam.] 1. A dish for use in eating or drinking; உண்ணுங் கலமாக உதவும் வட்டில்வகை. (பிங்.) வள்ளத்தவனேந்த . . . மதுமகிழ்ந்தார் (சீவக. 2700). 2. Hour-glass; clepsydra; 3. See மரக்கால். (பிங்.) 4. A measure of grain=4 marakkāl; 5. A measure of capacity=2 or 4 paṭi; 6. Boat made of the trunk of a tree; canoe; |
