English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Levin
n. (செய்.) மின்னல், மின்வெட்டொளி.
Levirate
n. யூதர் முதலியோரிடையேவழங்கியபடி மாண்டவன் மனைவியை அவன் உடன்பிறந்தான் அல்லது அணுக்க உறவுடையோன் மணந்துகொள்ளும் வழக்காற்று முறை.
Levitate
v. யோக ஆற்றல் மூலம் காற்றில் அந்தரமாக எழச்செய், வாயுத்தம்பளம் செய்து உயர்த்தெழு.
Levite
n. திருக்கோயில் குருமார் துணைவராகச் செயலாற்றிய யூத இன வகுப்பினர், யூத இனக் கிளைமரபு வகையினர்.
Levitical
n. யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த, திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த, யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய, விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய.
Levity
n. பளுவின்மை, கருத்தின்மை, கவலையின்மை, கட்டற்ற வாழ்வு, ஒழுக்கத்தளர்வு, பொறுப்பேற்ற போக்கு, தீயொழுக்கம், புல்லறிவு, விளையாட்டுத்தனம்.
Levy
n. வரிவிதிப்பு, வரிப்பிரிப்பு, வரித்திரட்டு, படைத்திரட்டு, படைக்கு ஆள் திரட்டு, பிரித்த வரித்தொகை,திரட்டிய படை வீரர் தொகுதி, (வினை) வரிவிதி, சுங்கம் விதி, வரி திரட்டு, பணம் தண்டு, சட்ட நடைமுறை நிறைவேற்ற மூலம் சரக்கு மீது பணம் பிரி, கொள்ளை தவரி கைப்பற்று, அச்சுறுத்துப் பணம் பறி, படைக்கு ஆள்சேர், படைக்கு ஆள்திரட்டு, பொருக்கான படைதிரட்டு, போர்ச்சாதனங்கள் திரட்டு.
Lewd
a. காமவெறிபிடித்த, ஓழுக்கங்கெட்ட, இழிந்த கீழ்த்தரமான, சுவையற்ற, தூய்மையற்ற, மரியாதையற்ற.
Lewis
n. கனமான கற்களைப் பற்றித்தூக்குவதற்கான இரும்புப் பொறியமைப்பு, நற்கொத்தர் சங்க உறுப்பினரின் புதல்வர்.
Lewisgun
n. பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி வகை.
Lewisite
n. கொப்புள வளி, இராசயனப் போர்முறையில் பயன்படுத்தப்படும் கொப்புளம் உண்டாகும் நச்சு வளி.
Lex talionis
n. (ல.) பழிக் கெதிர்ப்பழிச் சட்டமுறை.
Lexical
a. மொழியின் சொற்கள் பற்றிய, சொற்களஞ்சியம் சார்ந்த, அகரவரிசை ஏடு குறித்த.
Lexicographer
n. சொற்களஞ்சிய ஆசிரியர், நிகண்டு ஆசிரியர்.
Lexicography
n. சொற்களஞ்சியக்கலை.
Lexicon
n. சொற்களஞ்சியம், அகராதி.
Lexigraphy
n. சொற்குறியீட்டடெழுத்து முறை, ஒவ்வொரு வரிவடிவக் குறியிடும் ஒரு சொல்லைக் குறிப்பிடுமாறு எழுதும் முறை.
Ley
n. பருவப் புல்நிறம், சிறிதுகாலம் புல்விளையும் நிலம்.
Leyden battery
n. மின்கல அடுக்கு.