Word |
English & Tamil Meaning |
---|---|
குழமணம் | kuḻa-maṇam, n. <>id. +. Marriage of dolls; பாவைக்குச் செய்யும் கலியாணம். (பிங்.) |
குழமணன் | kuḻa-maṇaṉ, n. <>குழமணம். Wooden doll; மரப்பாவை. எங்கள் குழமணன் கொண்டு (திவ். திருவாய். 6, 2, 6). |
குழமணிதூரம் | kuḻamaṇitūram, n. A dance by the vanquished, accompanied with singing, to excite the pity of the victors; வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிகொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக்கூத்து (திவ். பெரியதி. 10, 3.) |
குழல்(லு) 1 - தல் | kuḻal-, 3. v. intr. 1. To curl; சுருளுதல். கடைகுழன்ற கருங்குழல்கள் (சீவக. 164). 2. To be folded back into a roll or tied in a lock, as the hair of women in kuḻal; |
குழல் 2 | kuḻal, n. <>குழல்-. [M. kuḻal.] 1. Curling hair; மயிர்க்குழற்சி. குழலுடைச் சிகழிகை (சீவக. 1092). 2. Woman's hair dressed by coiling and tying up behind in a roll, one of aim-pāl, q.v.; 3. Human hair; |
குழல் 3 | kuḻal, n. [K. koḻal, M. kuḻaḷ.] 1. Any tube-shaped thing; துளையுடைப்பொருள். (திவா.) 2. Flute, pipe; 3. Music of the pipe; 4. Tubularity, hollowness; 5. A kind of neck ornament; 6. Milk-fish, brilliant glossy blue, attaining 3 or 4 ft, in length, Chanos salmoneus; 7. A sea-fish, bluish, attaining several feet in length, Seriola bipinnulata; |
குழல்சுடு - தல் | kuḻal-cuṭu-, v. intr. <>குழல்3+. To fire a gun; துப்பாக்கிசுடுதல். (J.) |
குழல்விருத்தி | kuḻal-virutti, n. <>id. +. Rent-free lands assigned to pipers of a village; குழலூதுவோர்க்குக் கொடுக்கும் மானியம். Loc. |
குழல்விழு - தல் | kuḻal-viḻu-, v. intr. <>id. +. To form a hollow, as within a horn; துளையுண்டாதல். Loc. |
குழலாதொண்டை | kuḻal-ātoṇṭai, n. <>id.+. Common caper, m.sh., Capparis aphylla; ஆதொண்டைவகை. |
குழலூசி | kuḻal-ūci, n. <>id. +. Injecting needle at the end of a syringe; பீச்சாங்குழலின் முனையூசி. (கால். வி. 66.) |
குழலூதி | kuḻal-ūti, n. <>id. +. Reed-blower, flute-player; குழல்வாசிப்பவன். |
குழலோன் | kuḻalōṉ, n. <>id. Flute-player; வேய்ங்குழல் வாசிப்பவன். வழுவின் றிசைக்குங் குழளோன் றானும் (சிலப். 3, 69). |
குழவி 1 | kuḻavi, n. <>குழ. 1. Infant, babe; கைக்குழந்தை. ஈன்ற குழவி முகங்கண் டிரங்கி (மணி. 11, 114). 2. Young of certain animals, viz.; 3. Young of the vegetable kingdom; |
குழவி 2 | kuḻavi, n. prob. குழை2-. [M. kuḻavi.] The roller of ammi and kallural, grinding pestle; அம்மி கல்லுரல்களின் அரைக்குங் கல். புரையறு குழவியின் . . . அரைக்குநர் (பரிபா, 10, 83). |
குழவிக்கல் | kuḻavi-k-kal, n. <>குழவி2+. See குழவி2. . |
குழவிகொள்பவர் | kuḻavi-koḷpavā, n. <>குழவி1+. Those who bring up a child; குழந்தையை வளர்ப்பவர். குழவிகொள்பவரி னோம்புமதி (புரநா. 5). |
குழவிஞாயிறு | kuḻavi-āyiṟu, n. <>id. +. Rising sun; உதயசூரியன். (தொல். பொ. 579, உரை.) |
குழவித்திங்கள் | kuḻavi-t-tiṅkaḷ, n. <>id. +. Crescent moon; பாலசந்திரன். (தொல். பொ. 759, உரை.) |
குழவிப்பாம்பு | kuḻavi-p-pāmpu, n. Congereel. See குழிமீன். |
குழவிழைப்புளி | kuḻa-v-iḻaippuḷi, n. prob. குழைவு+. A kind of smoothing plane; இழைப் புளிவகை. (W.) |
குழவு | kuḻavu, n. <>குழ. Young, tender age, juvenility; இளமை. (தொல். சொல். 312.) |
குழற்கொத்து | kuḻaṟ-kottu, n. <>குழல்2+. 1. Tuft of a woman's hair; கூந்தற்கற்றை (பிங்.) 2. False hair for dressing the head; |
குழற்சி | kuḻaṟci, n. <>குழல்-. 1. Curling, as of a woman's hair; சுருண்டிருக்கை. (சீவக. 1092, உரை.) 2. Roll or lock of hair tied behind; |
குழற்சிகை | kuḻaṟ-cikai, n. <>குழல்2+šikhā. Hair of the head; தலைமயிர். குழற்சிகைக் கோதை சூட்டி. (சீவக. 252). |
குழற்பிட்டு | kuḻaṟ-piṭṭu, n. <>குழல்3+. A kind of soft pastry steamed in the hollow of a bamboo-piece; மூங்கிற்குழலில் வைத்து அவிக்கும் பிட்டு. (J.) |