Word |
English & Tamil Meaning |
---|---|
குழற்றிறப்பு | kuḻaṟṟiṟappu, n. <>id. +. Key with a hole; துளையுள்ள சாவி. (J.) |
குழற்று - தல் | kuḻaṟṟu-, 5. v. intr. To make incoherent or indistinct sounds, as when affected with strong emotion; குழறியொலித்தல். குரவையிற் குழற்றுவாரும் (கம்பரா. ஊர்தேடு. 188). |
குழறு - தல் | kuḻaṟu-, 5. v. intr. 1. To babble, as an infant; to talk indistinctly; to gabble; பேச்சுத்தெளிவின்றித் தடுமாருதல். வாயுகுழறா (திருவாச. 21, 10). 2. To cry, as a bird; to crow, as a cock; 3. To mingle, to be mixed up; 4. To cause ruin, destruction; |
குழறுபடை | kuḻaṟu-paṭai, n. <>குழறு-+படு-. 1. Incoherent talk; சொற்றடுமாற்றம். 2. Confusion, as in business; |
குழாஅல் | kuḻāal, n. <>குழுவு-. Gathering, flocking together; கூடுகை, நாரை . . . மரந்தொறுங் குழாஅலின் (பதிற்றுப். 29). |
குழாங்கொண்டாடு - தல் | kuḻāṅkoṇṭāṭu-, v. intr. <>குழாம்+. To move closely or on intimate terms; நெருங்கி உறவாதுதல். Loc. |
குழாம் | kuḻām, n. <>id. cf. hud. 1. Herd, flock, swarm, shoal; கூட்டம். மயிற் குழாத்தொடும் போகுமன்னம் (கந்தபு. திருநகரப். 31). 2. Society, company, association; |
குழாம்பல் | kuḻāmpal, n. <>குழம்பு-. Any liquid of a thick consistency, as curry, mud; குழம்பியிறுகிய பொருள். (J.) |
குழாய் | kuḻāy, n. <>குழை. 1. Tube, pipe; துளையுடைப்பொருள். (பிங்.) 2. Tubular cavity, hollow; |
குழாய்க்கிணறு | kuḻāy-k-kiṇaṟu, n. <>குழாய்+. Artesian well, tube-well; குழாயிறக்கி உண்டாக்கிய கிணறு. |
குழாய்மூங்கில் | kuḻāy-mūṅkil, n. <>id. +. Common bamboo, l.tr., Bambusa arundinacea; உள்ளே தொளையுள்ள மூங்கில். |
குழாயோடு | kuḻāy-ōṭu, n. <>id. +. A kind of tubular tile; உட்குழலாயுள்ள ஒருவகை ஒடு. (W.) |
குழி - தல் | kuḻi-, 4. v. intr. [K. kuḻi.] To be hollowed out, as a hole, a pit, a cavity; to sink hollow; உட்குழிவாதல். குழிந்தாழ்ந்த கண்ணவாய் (நாலடி, 49). |
குழி | kuḻi, n. <>குழி1-. 1. cf. Mhr. khudī. [T. goyyi, K. M. kuḻī.] Pit, hole, holow, cavity, dimple, depression, excavation; பள்ளம். (திவா.) 2. Tank, pond; 3. Well; 4. Stomach; 5. Cavity at the bottom of a well. See 6. Garden bed, irrigated portion of a garden; 7. Square of a number; 8. Square foot; 9. Cubic foot; 10. Twelve feet square in land; meansure; 11. A land measure varying in different places from 144 sq. ft. to 576 sq. ft.; 12. A unit of square measurement for building sites=the square of a tacca-k-kōl of 33 inches; |
குழி - த்தல் | kuḻi-, 11 v. intr. Caus. of குழி1-. [K. kuḻi.] 1. To form pits, hollowss, cavities; to sink, excavate; குழியாக்குதல். குழித்துழி நிற்பது நீர் (நான்மணி. 30). 2. To inscribe, engrave; |
குழிக்கண்ணி | kuḻi-k-kaṇṇi, n. <>குழி+. Woman with sunken eyes; குழிவான கண்ணுள்ளவள். பெருகு குழிக்கண்ணி செங்கந்ணி (பரத. ஓழிபி. 39). |
குழிக்கணக்கு | kuḻi-k-kaṇakku, n. <>id.+. Square measure of land; ஒருவகை நிலவளவை. |
குழிக்கல் | kuḻi-k-kal, n. <>id. +. See குழியம்மி. (W.) . |
குழிக்கிட்டி | kuḻi-k-kiṭṭi, n. <>id. +. The game of tip-cat; கிட்டிவிளையாட்டு. (W.) |
குழிக்குத்து | kuḻi-k-kuttu, n. <>id. +. Pit made for transplantation; செடிமுதலியவற்றைப் பிடுங்கி நடுங் குழி. (J.) |
குழிங்கை | kuḻi-ṅ-kai, n. <>id. +. Palm of the hand; உள்ளங்கை. Loc. |
குழிச்சட்டி | kuḻi-c-caṭṭi, n. <>id. +. Earthen pan with hollow cavities for frying cakes; பணியாரஞ்சுடுங் குழியுள்ள மண்சட்டி. |
குழிசி | kuḻici, n. <>குழி1-. 1. Pot, cooking vessel; பானை சோறடு குழிசி (பெரும்பாண். 366). 2. Large pot; 3. Hub of a wheel; |
குழிசீலை | kuḻi-cīlai, n. <>id. +. Loin cloth; கோவணம். Loc. |