Word |
English & Tamil Meaning |
---|---|
குழிமிட்டான் | kuḻimiṭṭāṉ, n. 1. Bristly button weeds. See நத்தைச்சூரி. (மலை.) 2. A common cliber with many thick fleshy roots. See 3. Rough basil, m. sh., Ocimum sanctum hirsutum; |
குழிமீட்டான் | kuḻimīṭṭāṉ, n. See குழிமிட்டான். (பதார்த்த. 295.) . |
குழிமீன் | kuḻi-mīṉ, n. Conger eel, olive, attaining more than 10 ft. in length, Muranesox talabon; பாம்புவடிவான மீன்வகை. |
குழிமுயல் | kuḻi-muyal, n. <>குழி+. Rabbit, Lepus cuniculus; முயல்வகை. (W.) |
குழியச்சு | kuḻi-y-accu, n. <>id.+. Mould for making gold beads; பொன்மணி யுருவாக்கும் அச்சு. (W.) |
குழியடிச்சான் | kuḻi-y-aṭiccāṉ, n. <>id.+. A coarse paddy sown in āvaṇi-Puraṭṭāci, maturing in four months; ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று நான்குமாதத்தில் விளையும் நெல்வகை. Loc. |
குழியம் | kuḻiyam, n. <>குழுவு-. cf. gulī. 1. Globular, round shape; திரள்வடிவு. (திவா.) 2. Perfume ball; 3. A kind of curved bludgeon; |
குழியம்மி | kuḻi-y-ammi, n. <>கழி+. Oval stone for macerating medicines; மருந்தரைக்கும் கலுவம். |
குழியல் | kuḻiyal, n. <>குழி1-+ A kind of hollow metalic vessel; உலோகத்தார் செய்யப்பட்ட ஒருவகை குழிவான பாத்திரம். Loc. |
குழியவிடு - தல் | kuḻiya-v-iṭu-, v. tr. <>id.+. To form the halves of hollow gold beads to be afterwards soldered togeether in jewelry; பொன்னைக் குழியுண்டாம்படி அச்சிலிடுதல். (J.) |
குழியானை | kuḻi-yāṉai, n. <>குழி+. See குழிநரி, 2. . |
குழியில்விழு - தல் | kuḻiyil-viḻu-, v. intr. <>id.+. Lit., to fall into a pit to fall into evil ways, vice; தீநெறிப்படுதல். |
குழிவித்துவை - த்தல் | kuḻi-vittu-vai-, v. intr. <>id.+. To sow grain in small quantities, as the land is furrowed, and cover it with dust; உழவுசாலில் கொஞ்சங்கொஞ்சமாக விதையையிட்டுப் புழுதிமண்ணைக்கொண்டு மூடிவைத்தல். Loc. |
குழிவு | kuḻivu, n. <>குழி1-. 1. Hollowness, depression; குழிந்திருக்கை. A flaw in ruby; |
குழிவெட்டி | kuḻi-veṭṭi, n. <>குழி+. Gravedigger; பிரேதக்குழி தோண்டிபவன். |
குழிவெட்டு | kuḻi-veṭṭu, n. <>id.+. Digging in a field for the purpose of levelling it; வயல்நிலத்தைச் சமப்படுத்த மேட்டை வெட்டும்வெட்டு. (G. Tj. D. 97.) |
குழு 1 | kuḻu, n. <>குழுவு-. cf. kula. [M. kuḻu.] 1. Class, society, band, assembly; மக்கட்கூட்டம். (திவா.) 2. Assembly of gathering of women; 3. Flock, herd, swarm, shoal; 4. Bundle, heap; |
குழு 2 | kuḻu, n. cf. ghuṣ. (W.) 1 Ingenuity; தந்திரம். 2. Shrewd utterance; 3. Wit, witty expression; |
குழுக்காலி | kuḻu-k-kāli, n. <>கொழு-+. Well shaped, intractable bull in a herd; கட்டுக்கடங்காமற் கொழுத்திருக்கும் மந்தைமாடு. Loc. |
குழுகூலி | kuḻu-kūli, n. prob. கொள்-+. Share of money paid to the village watchman for acting as intermediary and restoring the stolen property ot the owner; களவுபோனதை மீட்டுக்கொடுப்பதற்காகப் பொருட்குரியவர் கொடுக்கும் பொருளில் இடைநின்று அக்காரியத்துக்கு உதவிய கிராமக்கவர்காரனுக்குரிய பங்கு. (G. Tp. D. i, 257.) |
குழுதாடி | kuḻu-tāṭi, n. See குழுதாழி. Vul. . |
குழுதாழி | kuḻu-tāḻi, n. <>குழி+. [M. kuḻi-t.tāḻi.] Cattle trough, made of clay and burnt; மாட்டுத்தொட்டி. Loc |
குழும்பு 1 | kuḻumpu, n. prob. குழி1-. Pit; ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர (மதுரைக். 273). |
குழும்பு 2 | kuḻumpu, n.<>குழுமு-. Herd, flock, swarm, crowd; திரள். களிற்றுக் குழும்பின் (மதுரைக். 24) |
குழுமல் | kuḻumal, n. <>id. 1. Assembling, crowding; கூடுகை. விண்ணவர் யாவருங் குழுமலுற்று (கந்தபு. தேவ்வகிரி. 21). 2. Assembly, crowd; |
குழுமு - தல் | kuḻumu-, 5 v. intr. cf. kul. 1. To collect in large numbers, as men, animals; கூடுதல். மாதரெண்ணிலார் குழுமி (காஞ்சிப்பு. பன்னிரு. 134). 2. To gather together, mix; 3. cf. To roar in company, as tigers; |