Word |
English & Tamil Meaning |
---|---|
குறுந்தேங்காய் | kuṟu-n-tēṅkāy, n. <>id. +. A fruit resembling a small coconut. See சமுத்திராப்பழம். (W.) |
குறுந்தொகை | kuṟu-n-tokai, n. <>id. +. An ancient anthology of Tamil stanzas 402 in number compiled by Pūrikkō. treating of aka-p-poruḷ, one of eṭṭu-t-tokai; அகப்பொருளைப் பற்றியதும், அகவற்பாக்கள் 402 கொண்டு பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பெற்றதும் எட்டுத்தொகையிற் சேர்ந்ததுமாகிய ஒருநூல். நற்றிநை நல்ல குறுந்தொகை (புறநா. முகவுரை, பக்.1). |
குறுந்தொகைநானூறு | kuṟu-n-tokainā-ṉūṟu, n. ஈid. +. See குறுந்தொகை. (இறை. பாயி. பக். 5.) . |
குறுந்தொட்டி | kuṟu-n-toṭṭi, n. <>id. +. 1. Rose-coloured sticky mallow. See சிற்றாமூட்டி. (L.) 2. Small climbing nettle. See |
குறுந்தொடி | kuṟu-n-toṭi, n. <>id. +. Maiden wearing small bracelets; சிறுதொடியினைப்பூண்ட பெண். தொடலைக் குறுந்தொடி (குறள். 1135). |
குறுந்தோட்டி | kuṟu-n-tōṭṭi, n. <>id. +. Short goad, dist. fr. neṭu-n-tōṭṭi; சிறிய அங்குசம். குறுந்தோட்டியையும் நெடுந்தோட்டியையும்ந் தம்மிற் பிணைத்து (சீவக. 1835, உரை). |
குறுநகை | kuṟu-nakai, n. <>id. +. Smile; புன்சிரிப்பு. குருபரன் . . . குருநகைகொண்டுகூறும் (பிரபுலிங். வசவண்ணர்கதி. 30). |
குறுநடை | kuṟu-naṭai, n. <>id+. Short, quick, graceful pace, as of a child; குறுகியநடை. குதலைச்செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு (மணி. 7, 57). |
குறுநணி | kuṟu-naṇi, n. <>id. +. நண்ணு-. Close proximity; மிக்க அணிமை. நம்முட் குறுநணி காண்குவதாக (புறநா. 209, 15). |
குறுநர் | kuṟunā, n. <>குறு1-. Pluckers, as of weeds; களைமுதலியன பறிப்போர். குறுந ரிட்டா குவளை (சிலப். 10, 86) |
குறுநறுங்கண்ணி | kuṟu-naṟu-ṅ-kaṇṇi, n. <>id. +. Crab's eye. See குன்றி. குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி (குறிஞ்சிப். 72). |
குறுநாத்தகடு | kuṟu-nā-t-takaṭu, n. <>id.+nāga+. Foliated tinsel; பொன்போல் ஒளியுள்ள மெல்லிய தகடு. |
குறுநாப்பட்டை | kuṟu-nā-p-paṭṭai, n. <>id. +. See குறுநாத்தகடு. . |
குறுநிகழ்ச்சி | kuṟu-nikaḻcci, n. <>id. +. Short duration of time taken by a sharp chisel to pass from the sixth lotus leaf to the seventh in a bunch of seven lotus leaves placed on a stone when the chisel is forcibly thrust into it by a stong man, opp. to neṭu-nikaḻcci; ஏழு செங்கழுநீரிதழை ஒருகுறட்டி லடுக்கிப் பலவானாயினா னொருவன் மிகவுங் கூரியதோருளி வைத்துக் கூடமிட்டுப்புடைத்தால் ஆறாம்புரையற்று வேண்டும் மிக நுண்ணிய அளவுள்ள காலம். கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191). |
குறுநிலமன்னன் | kuṟu-nila-maṉṉaṉ, n. <>id. +.M Petty, tributary chief; சிற்றரசன். (பிங்.) |
குறுநிலைவழக்கு | kuṟu-nilai-vaḻakku, n. <>id. +. Terms, peculiar to any class; conventional terms; குழுஉக்குறிவழக்கு. (நேமி. சொல். 10, உரை.) |
குறுநெளிப்பு | kuṟu-neḷippu, n. <>id. +. Affected twisting of the body, as in mimicry; கேலியாக உடலை நெளித்துக்காட்டுகை. (J.) |
குறுநெறி | kuṟu-neṟi, n. <>id. +. Wave of curls of hair; குறுகிய மயிர்நெறிப்பு. குறுநெறிக்கொண்ட கூந்தல் (பெரும்பாண். 162). |
குறுநொய் | kuṟu-noy, n. <>id. +. Broken rice, bruised grain grit; அரிசிமுதலியவற்றின் சிறு நொய். |
குறும்படி | kuṟu-m-paṭi, n. <>id.+. Threshold, sill; வாசற்படி. நிலையும் குறும்படியும். Loc. |
குறும்படை | kuṟumpaṭai, n. prob. குறும்பு+அடை. Fort; கோட்டை. குறும்படைமழவர் (அகநா. 35). |
குறும்பர் | kuṟumpar, n. <>id. 1. Petty chieftains; குறுநிலமன்னர். குறும்பருங் குழீஇய (பெருங். உஞ்சைக். 43, 55). 2. cf. kulambhara. An aboriginal tribe; 3. [M. kuṟumban.] Hunters, those who live by chase; 4. [T. kurupa, K. kuṟuba, M. kuṟumban, Tu. kurubi.] A caste of shepherds who weave corse blankets; 5. A subdivision of the Paḷḷa caste; |
குறும்பர்கோட்டம் | kuṟumpar-kōṭṭam, n. <>குறும்பர்+. Stronghold of the kurumbas; குறும்பரின் கோட்டை. (W.) |
குறும்பலா | kuṟu-m-palā, n. <>குறு-மை+. 1. A kind of short jack tree; ஒருவகைக் கூழைப்பலாமரம். 2. šiva shrine at Tirukkuṟṟālam; |
குறும்பறை | kuṟu-m-paṟai, n. id. + பறை. Hen, female of the feathered kind as probably short in stature; பறவைப்பேடு. குறும்பறை யசைஇ (புறநா. 67, 9). |
குறும்பன் | kuṟumpaṉ, n. <>குறும்பு. See குறும்பு. 3. . See குரும்புக்காரன். |