Word |
English & Tamil Meaning |
---|---|
குறுக்கை 2 | kuṟu-k-kai, n. <>குறு-மை+கை5. 1. Tiger; புலி. (பெருங். இலாவாண. 18, 18, அரும்.) 2. Dagger, poniard; |
குறுக்கையர் | kuṟukkaiyā, n. <>குறுக்கை1. Members of the family in the Vēḷāḷa caste to which Tiru-nāvukkaracar belonged; வேளாளமரபில் திருநாவுக்கரசுநாயனார் அவதரித்த குடியைச்சார்ந்தவர். வேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குருக்கையர்தங் குடிவிளங்கும் (பெரியபு. திருநா. 15). |
குறுகக்காய்ச்சு - தல் | kuṟuka-k-kāyccu-, v. tr. <>குறுகு-+. To boll down a liquid; சுண்டக்காய்ச்சுதல். (J.) |
குறுகப்பிடி - த்தல் | kuṟuka-p-piṭi-, v. tr. <>குறுகு-+. (W.) 1. To make short; to curtail, as expenses; to retrench; to shorten, as a story; சுருக்குதல். 2. To hold near or close to; |
குறுகல் | kuṟukal, n. <>id. That which is short, dwarfish, stunted; குருகிய பொருள். (W.) |
குறுகலர் | kuṟukalā, n. <>id. + அல் neg. +. Enemies, foes; பகைவர். குறுகல ரூர் (திருக்கோ. 13). |
குறுகாதவர் | kuṟukātavā, n. <>id. + ஆ neg. +. See குறுகலர். குறுகாதவரூர். . . சரத்தாற்செற்றவன் (தேவா. 169, 1). . |
குறுகார் | kuṟukār, n. <>id. +. See குருகலர். குறுகார் தடந்தோளிரண்டுந் துணிந்து (பாரத. முதற்போ. 29). . |
குறுகு - தல் | kuṟuku-, 5.v. [T. kuruca, M. kuṟuku.] intr. 1. To grow short, stumpy, dwarfish; குள்ளமாதல். குறுகுகுறுகென விருத்தி (கந்தபு. திருக்குற்றாலப். 15). 2. To shrink, contract; to be reduced; to decrease, diminish, decline; 3. (Gram.) To be shortened, as a long vowel; 4. To approach, draw near; |
குறுகுத்தாளி | kuṟuku-t-tāḷi, n. <>குறுகு-+. Hairy-leaved creamy white bindweed. See சிறுதாளி. (மலை.) |
குறுகுறு - த்தல் | kuṟu-kuṟu-, 11. v. intr. 1. To mutter in displeasure, murmur; வெறுப்புத் தோன்ற முருமுருத்தல். (W.) 2. To be pricked by conscience; 3. To be perturbed by fear of detection; 4. To feel an itching or irritating sensation, as in the ear, in a sore; |
குறுகுறுநட - த்தல் | kuṟu-kuṟu-naṭa-, v. intr. <>குறுகுறு-+. To wobble with short steps, as a child; குறுகக்குறுக நடந்துசெல்லுதல். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி (புறநா. 188). |
குறுகுறுப்பு | kuṟukuṟuppu, n. <>id. 1. Muttering in displeasure; விருப்பின்மை தோன்ற முருமுருக்கை. (W.) 2. [T. gurru.] Snoring, stertorous breathing; 3. Showing signs of perturbation with fear; 4. Briskness; |
குறுகுறுப்பை | kuṟukuṟuppai, n. <>id. Snoring, stertorous beathing; குறட்டை. (W.) |
குறுகுறென்றுவிழி - த்தல் | kuṟu-kuṟeṉṟu-viḻi-, v. intr. <>id. +. To have a look of fear, a thievish look; திருட்டுவிழிவிழித்தல். புதுத்திருடன் குறுகுறென்று விழிக்கிறான். |
குறுகுறெனல் | kuṟukuṟeṉal, n. Onom. expr. signifying (a) showing signs of haste; விரைவுக்குறிப்பு. அவன் குறுகுறென்று நடக்கிறான்: (b) tingling, as in the ears, a sore; (c) muttering in displeasure; (d) being perturbed with fear; (e) being brisk and active; |
குறுங்கண் | kuṟu-ṅ-kaṇ, n. <>குறு-மை+. A kind of lattic-window, with small apertures; சாளரம். குறுங்க ணடைக்குங் கூதிர்க்காலையும் (சிலப். 14, 101). |
குறுங்கண்ணி | kuṟu-ṅ-kaṇṇi, n. <>id. +. Wreath for the tuft; முடியிலணியும் மாலை. குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய (இறை. களவி. 1, உரை). |
குறுங்கணக்கு | kuṟu-ṅ-kaṇakku, n. <>id. +. Simple letters of the Tamil alphabet, viz., 12 vowels and 18 consonants, opp. to ṇeṭu-ṅ-kaṇakku; உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முதலெழுத்து. |
குறுங்கலி | kuṟu-ṅ-kali, n. <>id. +. 1. An ancient melody-type of the pālai class; பாலை யாழ்த்திறத்தொன்று. (திவா.) 2. (Puṟap.) Theme of addressing a hero with a view to turn him away from his illicit loves; |