Word |
English & Tamil Meaning |
---|---|
அமோகை | amōkai n. <>amōghā. Chebulic myrobalan. See கடுக்காய். (தைலவ. தைல. 34.) |
அய்யங்கார் | ayyaṅkār n. Title of Vaiṣṇava Brāhmans. See ஐயங்கார். . |
அய்யர் | ayyar n. See ஐயர். . |
அய்யன் | ayyaṉ n. See ஐயன். . |
அய்யா | ayyā n. <>id. [T.K. ayya, M. ayyan, Tu. ayye.] 1. Father; தகப்பன். Colloq. 2. Respectable man. |
அய்யே | ayyē n. <>id. Voc. of அய்யன், used by low caste people. திருவாதிரைநாள் வரப் போகு தய்யே (நந்தனார் சரித்.) |
அயக்களங்கு | aya-k-kaḷaṅku n. <>ayas+kalaṅka. Oxide of iron, used as medicine; இருப்புத் துரு. (W.) |
அயக்காந்தம் | aya-k-kāntam n. <>id.+. Loadstone, as iron-lover; ஊசிக்காந்தம். அயக்காந்தமும் பொலிவ (திருவானைக். நாடு. 20). |
அயக்கிரீவம் | ayakkirīvam n. <>Haya-griva. Name of an Upanisad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
அயக்கிரீவன் | aya-k-kirīvaṉ n. <>id. Name of a form of Viṣṇu as horse-necked; திருமாலின் அவதாரமூர்த்திகளுள் ஒருவர். |
அயக்கு - தல் | ayakku- 5 v.tr. <>அசக்கு-. To shake, cause to tremble; அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பரா. சேதுப. 10). |
அயகம் | ayakam n. 1. Species of Gymnema. See சிறுகுறிஞ்சா. (மலை.) 2. Sweetflag. See வசம்பு. |
அயகரம் | aya-karam n. <>aja-gara. Boa constrictor, as goat-swallower; மலைப்பாம்பு. |
அயசு | ayacu n. <>ayas. Iron; இரும்பு. (சி. சி. 4, 8, சிவாக்.) |
அயணம் | ayaṇam n. <>ayana. Moving, going; செலவு. வெய்யோன் வடதிசை யயண முன்னி (சீவக. 851). |
அயத்தொட்டி | aya-t-toṭṭi n. <>ayas+. A prepared arsenic, said to be pieces of iron cauldron used in the preparation of cinnabar; வைப்புப் பாஷாண வகை. |
அயதார்த்தம் | a-yatārttam n. <>a-yathārtha. Untruth; பொய். அயதார்த்த ஸ்மரணம் (தர்க்கபா. 68). |
அயதி | ayati n. Oval-leaved China root. See திருநாமப்பாலை. (மூ.அ.) |
அயப்பனை | ayappaṉai n. See அயபானி. (M.M.) |
அயபானி | ayapāṉi n. <>Braz. ayapana. A medicinal herb, s.sh., Eupatorium ayapana; ஒரு மருந்துச் செடி. (மூ.அ.) |
அயம் 1 | ayam n. <>ஐயம். cf. (sam-)šaya. Doubt; சந்தேகம். மன்னவன்...அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15). |
அயம் 2 | ayam n, cf. payas. 1. Water; நீர். (பிங்.) 2. Spring on a mountain; |
அயம் 3 | ayam n. cf. šaya. 1. Valley, depression, ditch; பள்ளம். அயமிழி யருவி (கலித். 46). 2. Tank, pond; 3. Mud, mire; |
அயம் 4 | ayam n. <>aja. Sheep; ஆடு. அயக்குலத்துட் கரந்தனை (உபதேசகா. அயமு. 73). |
அயம் 5 | ayam n. <>aya. Festival; உற்சவம். (அக. நி.) |
அயம் 6 | ayam n. <>ayas. 1. Iron; இரும்பு. (பிங்.) 2. Iron filings; |
அயம் 7 | ayam n. See சிறுபூலா. (மூ.அ.) |
அயம் 8 | ayam n. <>haya. Horse; குதிரை. (பிங்.) |
அயம் 9 | ayam n. <>haya-māra. Oleander. See அலரி. (மூ.அ.) |
அயம்பற்றி | ayam-paṟṟi n. <>ayas+. Magnet, as an iron-attracter; காந்தம். |
அயமகம் | aya-makam n. <>haya+. Horse-sacrifice; அசுவமேதம். அயமக மாயிரத்துக்கேனும் (நல். பாரத. தீர்த்தம். 18). |
அயமரம் | aya-maram n. <>haya-māra. Oleander, as death to horse; அலரி. (பிங்.) |
அயமி | ayami n. White mustard. See வெண்கடுகு. (மலை.) |
அயமுகம் | aya-mukam n. <>haya+. A posture, one of nine tiritaravillā-v-irukkai, q.v.; திரிதரவில்லாவிருக்கைவகை. (சிலப். 8, 26, உரை.) |
அயமேதம் | aya-mētam n. <>id.+. Horse-sacrifice; அசுவமேதம். (உத்தரரா. அசுவமே. 7.) |
அயர் 1 - தல் | ayar- 4 v.intr. [K.ayilu, M.ayarkka.] 1. To become weary, to faint; தளர்தல். (திருவாச. 32, 9.) 2. To lose consciousness, as in fainting, sleep, or drunkenness; 1. To do, perform; 2. To forget; 3. To drive, as a chariot; 4. To worship; 5. To desire; |