Word |
English & Tamil Meaning |
---|---|
அயனசலனம் | ayaṉa-calaṉam n. <>a-yana+. Motion of the equinoctial point; மேஷாரம்ப ஸ்தானம் இடம்பெயர்ந்து செல்லல். |
அயனப்பிறப்பு | ayaṉa-p-piṟappu n. <>id.+. Commencement of the sun's northward or southward course, time of the sun's entry in kaṭakam or makaram; உத்தராயண தக்ஷிணாயனங்களின் தொடக்கம். |
அயனம் | ayaṉam n. <>ayana. 1. Road, path, course; வழி.(பிங்.) 2. Time of the sun's northward or southward course; 3. Half-year from solstice to solstice; 4. Solstitial point, the first in either kaṭakam or makaram; |
அயனமண்டலம் | ayaṉa-maṇṭalam n. <>id.+. The ecliptic; சமரேகைக்கு வடக்கும் தெற்குமுள்ள சூரியன் செல்லும் வீதி. (W.) |
அயனாள் | ayaṉāḷ n. <>Aja+ நாள். 1. The fourth nakṣatra. See உரோகிணி. (பிங்.) 2. A day of Brahmā; 3. Age of Brahmā; |
அயா | ayā n. cf. அயர். Languor, faintness; தளர்ச்சி. (திவா.) |
அயாசகம் | a-yācakam n. <>a-yācaka. Unsolicited alms; கேளாதுகிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257). |
அயாசிதபிச்சை | a-yācita-piccai n. <>a-yācita+. Food obtained unsought by saintly men, who neither leave their place nor make any effort to obtain it; இருந்தவிடத்திலேயே வந்த வுணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை. (சைவச. பொது. 405.) |
அயாவு - தல் | ayāvu- 5 v. intr. <>அயா. To be distressed; வருந்துதல். மானயா நோக்கியர் (சீவக. 1822). |
அயாவுயிர் - த்தல் | ayā-v-uyir- v. intr. <>அயா+. 1. To take a long breath, to sigh; நெட்டுயிர்த்தல். அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும் (மணி. 21, 26). 2. To rest, recover from fainting or distress; 3. To bubble up, burst forth; To give rest to, refresh; |
அயிக்கம் | ayikkam n. <>aikya. Oneness, identity; ஐக்கியம். அங்கலிங்க மயிக்க மிதுவென (பிரபுலிங். ஆரோகண. 11). |
அயிக்கவாதசைவம் | ayikka-vāta-caivam n. <>id.+. A Saiva sect. See ஐக்கவாதசைவம். (சி. போ. பா. அவை. பக். 22.) |
அயிகம் | ayikam n. Thorn-apple. See ஊமத்தை. (மலை.) |
அயிங்கவலை | ayiṅ-kavalai n. Sardine, bluish green, Clupea fimbriata; சூடைமீன். |
அயிங்கிசை | ayiṅkicai n. <>a-himsā. Abstention from doing injury, esp. from killing; வருத்தாமை. அயிங்கிசை பொறையே மெய்ம்மை (சிவதரு. சிவதரும. 3). |
அயிச்சுரியம் | ayiccuriyam n. <>aišvarya. Wealth. See ஐசுவரியம். (வாயுசங். பாசுபதவி. 34.) |
அயிச்சுவரியம் | ayiccuvariyam n. <>id. See ஐசுவரியம். . |
அயிச்சொரியம் | ayiccoriyam n. <>id. State of being God. See ஐசுவரியம். (கூர்மபு. இந்திரத்துய். 34.) |
அயிஞ்சி | ayici n. Species of Curculigo.See நிலப்பனை. (மலை.) |
அயிஞ்சை | ayicai n. <>a-himsā. Abstention from doing injury, esp. from killing; வருத்தாமை. அயிஞ்சையே பரமதன்மம் (பிரபோத. 18, 4). |
அயிதம் | ayitam n. <>a-hita. Harm; தீங்கு. இந்த மானியத்துக்கு அயிதம் பண்ணினவன் (S. I. I. i, 138). |
அயிந்தா | ayintā adj. <>U. ā' inda. Next, ensuing; வருகிற. அயிந்தா பசலி. (C.G.) |
அயிந்திரதிசை | ayintira-ticai n. <>aindra+. The E. quarter, as under the guardianship of Indra; கிழக்கு. அயிந்திர திசையின் (சீகாளத். பு. தென்கை. 64). |
அயிந்திரம் | ayintiram n. <>id. Name of an ancient sanskrit grammar attributed to Indra. See ஐந்திரம். (உத்தரரா. அனும. 46.) |
அயிநார் | ayinār n. prob. ஐ+நார். Croup; ஈளை. Loc. |
அயிம்சை | ayimcai n. <>a-himsā. See அயிஞ்சை. (மச்சபு. யோகசாத்.19) |
அயிமாசு | ayimācu n. <>U. āzmā'ish. Examination, inspection. See அஜ்மாஷ். . |
அயிர் 1 - த்தல் | ayir- 11 v. intr. To suspect; ஐயமுறுதல். அருங்கடி வாயி லயிராது புகுமின் (மலைபடு. 491). |
அயிர் 2 | ayir n. <>அயிர்-. Doubt, suspicion; ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை. நகர. 65). |
அயிர் 3 | ayir n. 1. Subtlety, fineness; நுண்மை. (திவா.) 2. Fine sand; 3. Candied sugar; 4. An imported white fragrant substance for burning; 5. Urine; |