Word |
English & Tamil Meaning |
---|---|
அயௌதுகம் | ayautukam n. <>a-yautuka. Separate property of a woman, acquired by her through gifts or otherwise on occasions other than her marriage, a variety of Strīdhana; கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள். (W. G.) |
அர் | ar part. 1. Pers. pl. suff.; பலர்பால் விகுதி. அரசர் வந்தனர். 2. Honorific pl. suff.; 3. An expletive affixed to some words; |
அர்க்கம் 1 | arkkam n. Little cormorant. See நீர்க்காக்கை. (பிங்.) |
அர்க்கம் 2 | arkkam n. <>arka. Madar. See எருக்கு. (மலை.) |
அர்க்கன் | arkkaṉ n. <>Sun. See அருக்கன். . |
அர்க்காதிபன் | arkkātipaṉ n. See அர்க்காதிபதி. . |
அர்க்காதிபதி | arkkātipati n. <>argha+adhi-pati. (Astrol.) The planet presiding over riches; திரவியாதிபதி. |
அர்க்கார் | arkkār n. <>U. harkāra. Messenger. See அரிக்காரன். (W.) |
அர்க்காரி | arkkāri n. See அர்க்கார். (W.) |
அர்க்கியம் | arkkiyam n. <>arghya. Water offered reverentially to gods or guests; தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதிமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90). |
அர்க்குளா | arkkuḷā n. Seerfish, bluish above, silvery below, attaining 4 inches in length, Cybium commer sonii; கடல் மீன் வகை. |
அர்ச்சகன் | arccakaṉ n. <>arcaka. 1. Temple priest; பூசகன். 2. Person appointed to recite the holy names of God at worship in temples; |
அர்ச்சனாபாகம் | arccaṉā-pākam n. See அர்ச்சனாபோகம். . |
அர்ச்சனாபோகம் | arccaṉā-pōkam n. <>arcanā+. Lands on free tenure bestowed on temple priests; கோயில் அர்ச்சகர்க்கு விடப் பட்ட மானியம். I. M. P.,SA. 176.) |
அர்ச்சனாவிர்த்தி | arccaṉā-virtti n. See அர்ச்சனாபோகம். (I. M. P., 179.) |
அர்ச்சனை | arccaṉai n. <>arcanā. Worship. See அருச்சனை. செவ்வி தர்ச்சனை செய்தனர் (கந்தபு. திருவி. 123). |
அர்ச்சாவதாரம் | arccāvatāram n. <>arcā+ava-tāra. Manifestation of Viṣṇu as idols and other sacred symbols which are worshipped in temples and houses, one of five tiru-mālnilai, q.v.; திருமால் நிலையுள் ஒன்று. (அஷ்டாதச. தத்வத். 3, 60.) |
அர்ச்சாவிக்கிரகம் | arccā-vikkirakam n. <>id.+. Idol to be worshipped; பூசைத்திருமேனி. சடகோபனை அர்ச்சாவிக்கிரகமாகப் பிரதிஷ்டிப்பித்து (கோயிலொ. 7). Vaiṣṇ. |
அர்ச்சி - த்தல் | arcci- 11 v. tr. <>arc. To worship. See அருச்சி-. அர்ச்சிப்பா ரிந்நூ லலரினால் (சைவச. பொது. 566) |
அர்ச்சிதன் | arccitaṉ n. <>arcita. One who is worshipped, reverenced; பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7). |
அர்ச்சியசிஷ்டர் | arcciya-ciṣṭar n. <>arcya+šiṣṭa. Canonised saints; பரிசுத்தவான்கள். R. C. |
அர்ச்சிராதிமார்க்கம் | arccir-āti-mārkkam n. <>arcis+ādi+. Way to the supreme heaven which is open only to the Brahma-vit, (knower of Brahman), and on which one has to pass by Arccis and other deities, dist. fr. தூமாதிமர்க்கம்; அர்ச்சிஸ் முதலாகிய தேவதைகளைக் கடந்து மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம். (பிர போத. 45, 10.) |
அர்ச்சிஸ் | arccis n. <>arcis. Name of the deity met with first on the way to the supreme heaven, who leads on to the next, and who presides over light; மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்துந் தெய்வம். (அஷ்டாதச.அர்ச்சி.) |
அர்ச்சுனம் | arccuṉam n. <>arjuna. Arjan. See மருது. . |
அர்ச்சுனன் | arccuṉaṉ n. <>Arjuna. Arjuna. See அருச்சுனன். . |
அர்ச்சை | arccai n. <>arcā. Idol, as worshipped விக்கிரகம். . |
அர்ணாள் | arṇāḷ n. Vulg. for அரைநாண். அர்ணாட்கொடி, அர்ணாட்கயிறு. |
அர்த்தக்கிரகணம் | artta-k-kirakaṇam n. <>ardha+. Half eclipse; பாதிக்கிரகணம். |
அர்த்தகோளம் | artta-kōḷam n. <>id.+. Hemisphere; பாதியுருண்டை. |
அர்த்தசந்திரபாணம் | artta-cantira-pāṇam n. <>id.+. Arrow with crescent- shaped head; பிறை வடிவான அம்பு. |
அர்த்தசந்திரப்பிரயோகம் | artta-cantira-p-pirayōkam n. <>id.+. Pushing one by the neck with the open hand put in the shape of a crescent; கழுத்திற் கைகொடுத்துத் தள்ளுகை. |
அர்த்தசந்திரம் | artta-cantiram n. <>id.+. 1. Army arrayed in the form of a crescent; வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (பாரத.மூனாம்போர்.2). 2. Crescent arch on an idol; |