Word |
English & Tamil Meaning |
---|---|
அர்த்தாலங்காரம் | arttālaṅkāram n. <>id.+alaṅkāra. Figure of speech relating to the sense, opp. to சப்தாலங்காரம்; பொருளணி. |
அர்த்தி - த்தல் | artti- 11. v.tr <>arth. To beg; யாசித்தல். |
அர்த்தோதயம் | arttōtayam n. <>ardha+udaya. Sacred conjuction of the sun and the moon, at sunrise on a Sunday with Sravaṇa nakṣatra and viyatīpāta yōga, in the month of Tai , dist. fr. மகோதயம்; தையமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். மாசிமகத்தி லர்த்தோதய்த்தில் (அருணா. பு. திருமலைவலம்.24). |
அர்ப்பணம் | arppaṇam n. <>arpana. Dedication; உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம் (ஞானவா.அருச்சு.16). |
அர்ப்பி - த்தல் | arppi- 11 v.tr. <>arp. To dedicate; உரியதாக்குதல். |
அர்ப்பிதம் | arppitam n. <>arpita. That which is offered; உரியதாக்கப்பட்டது. அத்தகை மேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத.18. 25). |
அர்ப்புதம் | arpputam n. <>arbuda. Ten thousand millions; ஆயிரங் கோடி. (W.) |
அர்ஜி | arji n. <>U. 'arzī. Official representation, generally in writing from a sub-ordinate to a superior, a petition; விண்ணப்பம். |
அர்ஜிதார் | arji-tār n. <>U. 'arzī-dār. Petitioner, memorialist; விண்ணப்பஞ்செய்வோன். |
அர்ஜிதாவா | arji-tāvā n. <>U. 'arzī+. Petition of complaint, plaint, first pleading in a suit; பிராதுவிண்ணப்பம். Loc. |
அர்ஜிதாஸ்து | arji-tāstu n. <>id.+dāsht. Written petition or memorial; எழுத்து மூலமான விண்ணப்பம். Loc. |
அர | ara n. <>அரா. Snake; பாம்பு. பையரவிழுங்கப்பட்ட ... மதியம் (சீவக. 1540) |
அரக்கம் 1 | arakkam n. Indian sarsaparilla. See நன்னாரி. (மலை.) |
அரக்கம் 2 | arakkam n. <>rākṣā. Shellac; அவலரக்கு. (பதிற்றுப். 30. 27) |
அரக்கம் 3 | arakkam n. cf. rakta. Blood; இரத்தம். |
அரக்கரிசி | arakkarici n. <>rakṣa+ அரிசி. Seed lac; அரகுவகை. |
அரக்கன் | arakkaṉ n. <>rakṣas. Demon; இராக்கதன். (பிங்.) |
அரக்காம்பல் | arakkāmpal n. <>rakta+ ஆம்பல். Red water-lily; செவ்வாம்பல். (பிங்.) |
அரக்கி | arakki n. <>rakṣasī. Demoness; இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82) |
அரக்கிநட - த்தல் | arakki-naṭa- v.intr. <>அரக்கு-+. 1. To wriggle as a snake; நெளிந்து நடத்தல். (W.) 2. To walk with difficulty, as a man whose thighs rub against each other while walking; |
அரக்கிலச்சினை | arakkilacciṉai n. <>rākṣā+ இலச்சினை. Seal, of wax; அரக்காலிடு முத்திரை. அரக்கிலச்சினையின் வைத்த...ஓலை (சூளா. தூது.82). |
அரக்கு 1 - தல் | arakku- 5 v,tr. 1. To rub with the palm of hand, or the sole of foot; தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந்.456). 2. To waste, ruin; 3. To press down; 4. To cause trouble to, afflict; 5. To clip off, prune; 6. To cut, sever; 7. To cause to diminish; 8. To eat up; 9. To push, drag or otherwise move, as a heavy body; |
அரக்கு 2 | arakku n. <>rakta. 1. Vermilion; சாதிலிங்கம். அரக்குத் தோய்ந்தவைபோல ... அடிகறுக்குந. (கலித்.13). 2. Redness; |
அரக்கு 3 | arakku n. <>rākṣā.- [K. Tu. aragu, M. arakku.] Lac, sealing-wax, shellac or resin melted with turpentine; செய்மெழகு. தீயூட்டரக்கேயென்னவுருகி. (கந்தபு.மார்க்கண். 95). |
அரக்கு 4 | arakku n. <>U. 'araq. Arrack, spirits distilled from the fermented sap of sundry palms; கள்ளின்விகற்பம். (சூடா.) |
அரக்குக்காந்தம் | arakku-k-kāntam n. <>rakta+. 1. Magnetic iron-stone, used medicinally; ஒருவகைக் காந்தக்கல். (W.) |
அரக்குச்சாயம் | arakku-c-cāyam n. <>rākṣā+. 1. Lac dye, colouring matter extracted from stick-lac; சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம். 2. Varnish with lac as its chief ingredient; |
அரக்குத்தைலம் | arakku-t-tailam n. <>id.+ Medicinal oil prepared with lac; கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 59.) |
அரக்குநீர் | arakku-nīr n. <>rakta+. 1. Vermilion water, used for sprinkling on festive occasions; சாதிலிங்கங் கலந்த நீர். அரக்கு நீர்ச் சிவிறி யேந்தி (சீவக. 2657). 2. Solution of saffron and lime waved on festive occasions, as before a bridal couple; 3. Blood; |