Word |
English & Tamil Meaning |
---|---|
அரக்குமஞ்சள் | arakku-macaḷ n. <>rākṣā+. Saffron root of a deep yellow colour; கருஞ்சிவப்பு மஞ்சள். |
அரக்குமாளிகை | arakku-māḷikai n. <>rākṣā+. Wax palace built by Duryōdhana for the destruction of the Pāṇdavas; பாண்ட வரை வஞ்சனையாற்கொல்லத் துரியோதனன் செய்வித்த வீடு. (பாரதம்.) |
அரக்குவளையல் | arakku-vaḷaiyal n. <>id.+. Wax bracelet covered by thin brass leaf tinsel; அரக்கினாலியன்ற கங்கணம். |
அரக்குவை - த்தல் | arakku-vai- v.tr. <>id.+. To seal with wax; அரக்கு முத்திரைவைத்தல். |
அரங்க | araṅka adv. <>அரங்கு-. Thoroughly, entirely; முழுதும் மரத்தை அரங்கத் தறி. (W.) |
அரங்கக்கூத்தி | araṅka-k-kūtti n. <>raṅga+. Female dancer in a theatre; நாடக சாலையிற் கூத்தாடும் பெண். அரங்கக் கூத்திசென்றையங் கொண்டதும் (மணி. 24, 22). |
அரங்கணி | araṅkaṇi n. prob. அரங்கு-+ நீர். Dried up source of a tank or well. See அறுவு. Loc. அறுவு. Loc. |
அரங்கநாதன் | araṅka-nātaṉ n. <>ranga+. Viṣṇu, as worshipped in Srīraṅgam; ஸ்ரீ¦ரங்கத்துத் திருமால். |
அரங்கபூசை | araṅka-pūcai n. <>id.+. 1. Worship of Vīra-Lakṣmī, the goddess of battle, preliminary to a battle; போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை. 2. Worship before an athletic contest; 3. Worship preliminary to a dramatic performance; |
அரங்கபூமி | araṅka-pūmi n. <>id.+. 1. Battle-field; Stage; போர்க்களம். நடிக்கும் கூடம். |
அரங்கம் | araṅkam n. <>raṅga. 1. Stage, dancing hall; நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்க முஞ் சாலையும் (சீவக. 2112). 2. Gambling house; 3. Fencing school for practice of arms; 4. Assembly of learned men; 5. Field of battle; 6.Island formed by a river or rivers, delta; 7. Srīraṅga; |
அரங்கமேடை | araṅka-mēṭai n. <>id.+. Stage; நாடகம் நடிக்கும் இடம். |
அரங்கன் | araṅkaṉ n. <>id. Viṣṇu, as worshipped at Srīaṅgam; அரங்கநாதன் (திவ். அமலனாதி. 10.) |
அரங்கி | araṅki n. <>id. Deceiftul woman; வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq. |
அரங்கு 1 - தல் | araṅku- 5 v,intr. 1. To pierce, penetrate, as an arrow; அம்பு முதலியன தைத்தல். அம்பு ... முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293). 2. To be destroyed; 3. To be pressed down; 4.To suffer; 5. To melt, as ghee; |
அரங்கு 2 | araṅku n. <>raṅga. 1. Stage, dancing hall; நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79). 2. Assembly hall; 3. Gambling house; 4. Place or board chequered with squares; 5. Womb; |
அரங்குவீடு | araṅku-vīṭu n. <>அரங்கு2+. Inner room, regarded as secure; உள்ளறை. Tn. |
அரங்கேசன் | araṅkēcaṉ n. <>Raṅgēša. Viṣṇu, as worshipped in Srīraṅgam; அரங்கநாதன். |
அரங்கேற்றம் | araṅkēṟṟam n. <>raṅga+ ஏறு- Presentation of a new work for acceptance before a learned assembly, first public performance of a dancing girl or of a drama; புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பிக்கை. |
அரங்கேற்று 1 | araṅkēṟṟu n. See அரங்கேற்றம். . |
அரங்கேற்று 2 - தல் | araṅkēṟṟu- v. tr. caus. of அரங்கேறு-. To present to a learned body for acceptance, as a work, giving the first public performance in dancing or in a drama; புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3) |
அரங்கேற்றுப்படி | araṅkēṟṟuppaṭi n. See அரங்கேற்றம். . |
அரங்கேறு - தல் | araṅkēṟu- v.intr. <>raṅga+ ஏறு-. To be presented for the first time to a learned body; புதுநூல் முதலியன சபைக்கு முன் அங்கீகாரத்துக்கு வருதல். |