Word |
English & Tamil Meaning |
---|---|
அரசன்விரோதி | aracaṉ-virōti n. 1. Species of Coccinia. See கோவை. (மலை.) 2. Portia tree. See பூவரசு. |
அரசாட்சி | aracāṭci n. <>அரசு2+ஆள்-, Reign, rule, government; இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி. (கம்பரா. மீட்சி. 223). |
அரசாணி 1 | aracāṇi n. <>அரசு1+ prob. āṇi. 1. Branch of the pipal tree; அரசங் கொம்பு. அரசாணியை வழிபட்டு (திவ்.பெரியாழ்.3, 8, 3). 2. Marriage platform, containing a pipal branch; |
அரசாணி 2 | aracāṇi n. <>அரசி. cf. இராணி. Queen; அரசி. அல்லியரசாணி. |
அரசாணிக்காய் | aracāṇi-k-kāy n. Pumpkin. See பூசணி. (M.M.) |
அரசாணிக்கால் | aracāṇi-k-kāl n. <>அரசாணி1+. Pipal branch placed with those of other trees between posts, round which the bridegroom and bride pass in the marriage ceremony; விவாகமண்டபத்தில் நடப்படும் அரசங் கொம்பு. |
அரசாணிப்பானை | aracāṇi-p-pāṉai n.<>id.+. [T. airēni.] Large painted earthen pots placed one above another on the marriage platform and often containing bits of gold in water or grain; விவாக மண்டபத்தில் வைக்கப்படும் அடுக்குப்பானை. |
அரசாணிமேடை | aracāṇi-mēṭai n. <>id.+. Marriage platform, on which is planted a pipal branch; அரசங்கால் நட்ட விவாகமேடை. |
அரசாள்(ளு) - தல் | aracāḷ- v. tr. <>அரசு2+ To reign, rule, govern. (திருவாத. பு. மந்திரி. 2.) |
அரசானம் 1 | aracāṉam n. cf. kujarāšana. Pipal. See அரசு. (மலை.) |
அரசானம் 2 | aracāṉam n. cf. rāsnā. Galangal. அரத்தை. (மலை.) |
அரசி | araci n. fem. of அரசன். Queen; இராணி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை. (தேவா. 868, 1). |
அரசிகன் | aracikaṉ n. <>a-rasika. Dull man, one who cannot feel or appreciate; சுவை யறியாதவன். |
அரசிப்படு - தல் | araci-p-paṭu- v. intr. <>அரசி+. To assume airs imagining oneself to be a queen; அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10). |
அரசியல் | araciyal n. <>அரசு2+இயல். 1. Sovereignty; இராசரீகம். 2. Requisites of regal administration. See அரசங்கம். |
அரசிரு - த்தல் | araciru- v. intr. <>id.+ இரு-. To sit in state, as a king; அரசாக வீற்றிருத்தல். கன்னிப்பெண் ணரசிருந்து (திருவிளை. தடா தகை. 43). |
அரசிருக்கை | aracirukkai n. <>id.+ இருக்கை. 1. King's council chamber or audience hall; இராசசபை. (பிங்.) 2. Throne, the seat of the king; |
அரசிலை | aracilai n. <>அரசு1+இலை. 1. Figleaf-shaped plate of metal or glass worn by little girls to cover their nudity; அரைமுடி. 2. Ornament for the head of a bull in the shape of a pipal leaf; 3. Figure of a leaf as branded on beasts; |
அரசிலைக்கரண்டி | aracilai-k-karaṇṭi n. <>id.+. Mason's trowel; கொத்துக் கரண்டி. Loc. |
அரசிலைப்பஞ்சாயுதம் | aracilaippacāyutam n. <>id.+. A figleaf-shaped gold ornament worn by children or women with the tāli , showing in relief the five weapons of Viṣṇu; ஐம்படைக் காப்புவகை. (J.) |
அரசிறை | araciṟai n. <>அரசு2+இறை. 1. King's tribute, public revenue; அரசாங்கவரி. (திவா.) 2. Kind of kings; |
அரசு 1 | aracu n. [K. arase, M. aracu.] Pipal, l.tr., Ficus religiosa; அரசமரம். |
அரசு 2 | aracu n. <>rājan. 1. kingliness; அரசனது தன்மை. (குறள். 384, உரை.) 2. King; 3. Kingdom, territory of a ruler; 4. Government; 5. That which is pre-eminent; 6. An ancient title of Vēḷāḷa chieftains; 7. Tiru-nāvukkaracu Nayanār, the author of a part of the Tēvāram; An exclamation equivalent to 'check', used in chess; |
அரசுக்காவல் | aracu-k-kāval n. <>id.+. General police duty, as distinguished from village police duty; நாட்டுக்காவல். (M.M.) |