Word |
English & Tamil Meaning |
---|---|
அரசுகட்டில் | aracu-kaṭṭil n. <>id.+. Throne; சிங்காதனம். அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை.17). |
அரசுசெய் - தல் | aracu-cey- v.tr. <>id.+. To govern, reign, rule; ஆளுதல். |
அரசுசொல்லு - தல் | aracu-collu- v. intr. <>id.+ To say 'check', in chess; சதுரங்கவிளையாட்டில் ராஜாவுக்குப் பகைக்காயை யெடுத்துவைத்து அரசென்று கூறுதல். |
அரசுவா | aracuvā n. <>id.+ உவா. State elephant, with its four legs, sexual organ, trunk and tail touching the ground, with white toenails, seven cubits in height, nine cubits long and thirteen cubits in circumference, with the fore part of the body higher than the back part; பட்டத்தியானை. (பிங்.) அரசோடு அரசுவா வீழ்ந்த (களவழி. 35). |
அரசோனம் | aracōṉam n. <>rasōna. Garlic. See வெள்ளைப்பூண்டு. (தைலவ. தைல. 9.) |
அரட்சி | araṭci n. <>அரள்-. [K. aralu.] Confusion of mind, bewilderment; மனக்குழப்பம். dial. var. of அருட்சி. |
அரட்டல்புரட்டல் | araṭṭal-puraṭṭal n. <>id.+. Tossing restlessly, as in mortal agony; நோய் முற்றலால் நிகழும் வேதனை. Colloq. |
அரட்டன் | araṭṭaṉ n. <>அரட்டு 1. Ruler of a small territory, chief; குறுநில மன்னன். (திவா.) One who causes fear, worry or annoyance; |
அரட்டி | araṭṭi n. <>id. Fear, terror; அச்சம். (W.) |
அரட்டு 1 - தல் | araṭṭu- 5 v. tr. caus. of அரள்-. [M. araṭṭu.] To frighten, terrify; பயமுறுத்துதல். |
அரட்டு 2 | araṭṭu n. <>அரட்டு-. 1. Insolence, haughtiness; கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5). 2. Petty chieftains; 3. Mischief; 4. Fear, tremor; |
அரட்டுப்புரட்டு | araṭṭu-p-puraṭṭu n. <>id.+. Humbug; பொய்ப்புரட்டு. (சம். அக.) |
அரட்டையடி - த்தல் | araṭṭai-y-aṭi- v. intr. <>id.+. To swagger, bluster: வீணிடம்பம் பேசுதல். Colloq. |
அரடா | araṭā n. <>T. aradā. Projecting border of a jewel; அணியுறுப்புவகை. Loc. |
அரண் | araṇ n. prob. šaraṇa. 1. Defence, four kinds, viz., நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண் (குறள், 742, உரை.) 2. Fortress, castle; 3. Forest, as a defence; 4. Spear; |
அரண்மனை | araṇ-maṉai n. <>அரண்+. 1. Royal palace; இராசகிருகம். 2. Royal zenana; 3. Stately mansion; |
அரணம் 1 | araṇam n. prob. šaraṇa. 1. Protection; காவல். என்னுயிர்க் கரண நாடி. (யசோதர. 2, 61). 2. Hedge, enclosure; 3. Fort; 4. Forest, as a strong defence; 5. Coat of mail; 6. Dart, javelin; 7. Remedy; 8. Sandal; 9. Bed, couch; |
அரணம் 2 | araṇam n. <>jaraṇā. Black cumin. See கருஞ்சீரகம். (தைலவ. தைல. 112.) |
அரணம்வீசு - தல் | araṇam-vīcu- v.intr. <>அரணம்1+. To put on a coat of mail; கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக. 777) |
அரணி 1 | araṇi n. <>araṇi. Pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition; தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7). |
அரணி 2 - த்தல் | araṇi- 11 v. tr. 1. To fortify, defend; அரண்செய்தல். (M.) 2. To adorn; To grow hard, as a boil; |
அரணிய | araṇiya appel. rel. part. <>id. Defended; காவலையுடைய. அரணிய விலங்கை (பாரத. இரா.67). |
அரணியசாறணை | araṇiya-cāṟaṇai n. prob. araṇya+ சாறு+அணை1-. Wild ginger. See காட்டிஞ்சி. (மலை.) |
அரணியம் | araṇiyam n. <>araṇya. Wilderness, jungle, forest; காடு. |
அரணியவான | araṇiya-v-āṉa rel part. <>அரண். Terse, compact; சொற்செறிவுடைய. அரணியவான கவிகளைக்கொண்டு (ஈடு, 3, 9, 3). |
அரணியன் | araṇiyaṉ n. <>šaraṇya. One who is a refuge; அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை. (கம்பரா. விபீடண. 2). |
அரணியா | araṇiyā n. Purple-stalked dragon. See காட்டுக்கருணை. (மலை.) |