Word |
English & Tamil Meaning |
---|---|
அரமங்கை | ara-maṅkai n. See அரமகள். (திருக்கோ. 371, உரை.) |
அரமனை | ara-maṉai n. <>அரண்+. Palace, royal residence; அரண்மனை. அரமனைக்கெய்துமு னியம்பினேன் (பாரத. கீசக. 10). |
அரமாதர் | ara-mātar n. cf. amara+. Celestial damsels; தெய்வப்பெண்கள். அம்மென் மூர லரமாதர் (இரகு. திக்கு. 105). |
அரமாரவம் | aramāravam n. cf. adhā-mārgava or apāmārga. Species of Achyranthus. See நாயுருவி. (மலை.) |
அரமியம் 1 | aramiyam n. <>harmya. 1. Palace; அரண்மனை. (பிங்.) 2. Terrace of a house, open space above the first or other floor; |
அரமியம் 2 | aramiyam n. Species of Herpestis. See பிரமி. (மலை.) |
அரமுறி | ara-muṟi n. அரம்1+. Silvery-leaved indigo. See இருப்புமுறி. (W.) |
அரயன் | arayaṉ n. <>rājan. King; அரசன். |
அரர் | arar n. <>Ara. Name of a Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) |
அரரி | arari n. <>arari. Door; கதவு. (சூடா.) |
அரலை | aralai n. 1. Wen, tubercle; கழலை. அயிலரி யரலை விழுப்புண் (ஞானா. 30). 2. Sea; 3. Bowstring hemp. See மரல். 4. Seed; 5. Fault; 6. Twist, knot in a string or thread; 7. Stone broken for roads; |
அரவக்கிரி | arava-k-kiri n. <>அரவம்1+. Tirupati hills, the serpent Sēṣa in the form of a hill; வேங்கடமலை. (பாரத. அருச்சுனன்றீர். 12.) |
அரவக்கொடியோன் | arava-k-koṭiyōṉ n. <>id.+. Duryōdhana having the serpent as banner; துரியோதனன். |
அரவங்கலக்கம் | aravaṅ-kalakkam n. prob. அரவு1-+. Brightening of the mind on the approach of death; சாகுங்காலத்து உண்டாகுஞ் சுறுசுறுப்பு. Loc. |
அரவஞ்செய் 1 - தல் | arava-cey- v.intr. <>id.+. To confuse the mind; மனங்கலக்குதல். கண்ணும் புருவமு மரவஞ்செய்ய (சீவக. 2806). |
அரவஞ்செய் 2 - தல் | arava-cey- v.intr. <>rava+. To roar, cry out, hum; சத்தமிடுதல். |
அரவணிந்தோன் | aravaṇintōṉ n. <>அரவு2+அணி-. Siva, wearing serpents; சிவன். (சூடா.) |
அரவணை 1 - த்தல் | aravaṇai- v.tr. <>id.+. அணை2-. 1. To embrace, fondle; தழுவுதல். (ஏகாம். உலா. 436.) 2. To support, cherish; |
அரவணை 2 | aravaṇai n. <>id.+. அணை4. 1. Viṣṇu's serpent bed, formed of the coils of Adišēṣa; சேஷசயனம். (சிலப். 30, 51.) 2. Preparation of rice, sugar and some other ingredients offered to Viṣṇu at night, before bed time; |
அரவணைச்செல்வன் | aravaṇai-c-celvaṉ n. See அரவணையான். . |
அரவணையான் | aravaṇaiyāṉ n. <>அரவு2+. Viṣṇu, reclining on the serpent; திருமால். (திவ். இயற். 2, 12.) |
அரவதண்டம் | arava-taṇṭam n. <>rāva+. Punishment by Yama; யமதண்டனை. அரவ தண்டத்தி லுய்யலு மாமே (திவ். பெரியாழ். 4,5,3). |
அரவப்பகை | arava-p-pakai n. <>அரவம்1+. Garuda, the enemy of snakes; கருடன். (திவ். பெரியாழ். 3, 5, 11.) |
அரவம் 1 | aravam n. prob. அரவு1-. cf. sarpa. 1. Snake; பாம்பு. வெஞ்சின வரவம் (மணி. 20, 104). 2. The ninth nakṣatra. See ஆயிலியம். 3. Ascending and descending nodes, regarded as planets in the form of monstrous dragons; |
அரவம் 2 | aravam n. <>rava. 1. Sound not vocal, bustle, howl, hum, confused noise; ஒலி. (திவா.) 2. Anklets with bells; 3. Shouting of a moving army; |
அரவர் | aravar n. <>அருவர். The Tamils; தமிழர். (அக. நி.) |
அரவன் | aravaṉ n. <>அரவு2. Siva, wearing serpents; சிவபிரான். (உரி. நி.) |
அரவாட்டிப்பச்சை | aravāṭṭi-p-paccai n. Telegraph-plant. See தொழுகண்ணி. . |
அரவாபரணன் | aravāparaṇaṉ n. <>அரவு2+ A-bharaṇa. Siva, as adorned with serpents; சிவன். (பாரத. பதினான். 51.) |
அரவாய்க்கடிப்பகை | ara-vāy-k-kaṭi-p-pakai n. <>அரம்+. Serrated leaf of the margosa, as hostile to demoniac influence; அரம்போன்ற விளிம்புடைய வேப்பிலை. அரவாய்க் கடிப்பகை யையவிக் கடிப்பகை. (மணி. 7, 73). |