Word |
English & Tamil Meaning |
---|---|
அரவி - த்தல் | aravi- 11 v.intr. <>rava. To make a noise; அரவஞ்செய்தல். அமரரோ டசுரர்கூடி யரவித்துக் கடைய (தேவா. 507, 7). |
அரவிந்தப்பாவை | aravinta-p-pāvai n. <>aravinda+. Lakṣmī, seated on or residing in the lotus; திருமகள். (திவ். பெரியாழ். 5, 2, 10.) |
அரவிந்தம் | aravintam n. <>aravinda. Lotus. See தாமரை. (திவ். திருநெடுந். 21.) |
அரவிந்தலோசனன் | aravinta-lōcaṉaṉ n. <>id.+. Viṣṇu, having eyes like lotus; திருமால். (திவ். திருவாய். 6, 7, 10.) |
அரவிந்தன் | aravintaṉ n. <>id. Brahmā, sprung from the lotus; பிரமன். (கல்வளை. 81.) |
அரவிந்தை | aravintai n. <>aravindā. Lakṣmī; இலக்குமி. |
அரவினாள் | araviṉāḷ n. <>அரவு2+நாள். The ninth nakṣatra. See ஆயிலியம். (திவா.) |
அரவு 1 - தல் | aravu- 5 v.tr. <>அராவு-. To torment; வருத்துதல். வேளரவு கொங்கையிள மங்கையர்கள் (தேவா. 686, 2). |
அரவு 2 | aravu n. <>அரவு1-. 1. Snake; பாம்பு. (பாரத. பதின்மூ. 108.) 2. Twisted rope of straw entwined about stakes for stopping a breach in a bund; 3. The ninth nakṣatra. See ஆயிலியம். |
அரவு 3 - தல் | aravu- 5 v.intr. <>rava. To sound, hum; அரவஞ்செய்தல். வண்டரவு கொன்றை (தேவா. 89, 3). |
அரவு 4 | aravu n. <>id. Sound; ஒலி. பாய் குழக் கன்றி னார்ப்பரவும் (திருக்காளத். பு. 2, 7). |
அரவு 5 | aravu part. A vbl. noun suff.; தொழிற்பெயர் விகுதி. தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1). |
அரவுயர்த்தவன் | aravuyarttavaṉ n. <>அரவு2+உயர்3-. Duriyōdhana, having the serpent as banner; துரியோதனன். (சூடா.) |
அரவுயிர்ப்பு | aravuyirppu n. <>id.+. உயிர்ப்பு. Breath of a serpent when hissing; பாம்பின் மூச்சு. |
அரவுருட்டு - தல் | aravuruṭṭu- v.intr. <>id.+. உருட்டு-. To thrust twisted straw into a breach; வைக்கோற்புரியை உடைப்பிற் செலுத்துதல். (திருவிளை. மண்சுமந். 5.) |
அரவொலி | ara-v-oli n. <>Hara+. The acclamation 'ara', addressed to Siva; அர என்னுஞ் சத்தம். அரவொலி யாகமங்க ளறிவார்...வேதவொலி (தேவா. 1167, 8). |
அரள்(ளு) - தல் | araḷ- 2 v.intr. [K. āraḷ.] cf. அருள்3-. To be terrified; பீதியடைதல். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். |
அரளி | araḷi n. <>அலரி. 1. Oleander. See அலரி. Colloq. 2. Fetid tree. See பீநாறி. |
அரளைசரளை | araḷai-caraḷai n. redupl. of சரளை. Broken stone and gravel; செல்லும் பாதைக்கு உபயோகப்படும் பருக்கைக் கற்கள். அரளை சரளை பரப்பியாய்விட்டதா? Colloq. |
அரற்றல் | araṟṟal n. <>அரற்று-. Twang of the string of a lute; யாழ்நரம்போசை. (பிங்.) |
அரற்று 1 - தல் | araṟṟu- 5 v.intr. 1. To lament, cry, weep aloud, bewail; புலம்புதல். மடந்தை...கனவி னரற்றின்று (பு. வெ. 11, பெண்பாற். 9). 2. To pour out one's troubles in lamentation; 3. To shout with excitement; 4. To sound, tinkle; |
அரற்று 2 | araṟṟu n. <>அரற்று-. 1. Lamentation, expressing one's woes in many words; புலம்பல். தேவந்தி யரற்று (சிலப். 29). 2. A secondary melody-type of the kurici class; |
அரன் | araṉ n. <>Hara. 1. Siva, the destroyer; சிவன். (பிங்.) 2. Name of a Rudra, one of ēkātaca-ruttirar, q.v.; |
அரன்மகன் | araṉ-makaṉ n. <>id.+. Skanda; முருகக்கடவுள். (திவா.) |
அரன்றோழன் | araṉṟōḻaṉ n. <>id.+. தோழன். Kubēra, the companion of Siva; குபேரன். (திவா.) |
அரனாள் | araṉāḷ n. <>id.+ நாள். The sixth nakṣatra, presided over by Hara, 'Siva'. See திருவாதிரை. (பிங்.) |
அரனிடத்தவள் | araṉ-iṭattavaḷ n. <>id.+. Pārvatī, sitting on the left of Siva; உமை. (பிங்.) |
அரா | arā n. <>அரவு1-. 1. Snake, serpent; பாம்பு. நல்லரா வுறையும் புற்றம் (புறநா. 309). 2. The ninth nakṣatra. See ஆயிலியம். 3. Ringworm-root. See நாகமல்லி. |
அராக்கோள் | arā-k-kōḷ n. <>அரா+. Nodes of the moon, Rāhu, and Kētu; இராகு கேதுக்கள். (திவா.) |
அராகதத்துவம் | arāka-tattuvam n. <>rāga+. (Saiva.) That which excites desire in the soul, one of seven cuttācutta tattuvam, q.v.; சுத்தாசுத்த தத்துவங்களுள் ஒன்று. (சி. போ. பா. 2, 2, பக். 155, புது.) |