Word |
English & Tamil Meaning |
---|---|
அரணை | araṇai n. [K. Tu. araṇe, M. araṇa.] 1. Typical lizard, Lacertidae; செந்து வகை. 2. Smooth streaked lizard, Lacerta interpanctula; |
அரணைப்புத்தி | araṇai-p-putti n. <>அரணை+. Mind lacking memory; ஞாபகக்குறைவான புத்தி. Loc. |
அரணைவாற்சுருட்டை | araṇai-vāṟ-curuṭṭai n. <>id.+. Variety of Echis carinata, lizard-tail carpet snake, having a tail like green lizard; சுருட்டைப்பாம்பு வகை. (M.M.) |
அரத்தகம் | arattakam n. <>a-laktaka. Red lac used by women for dyeing the feet, and sometimes the lips; அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி. (சீவக. 2459). |
அரத்தம் 1 | arattam n. <>rakta. 1. Red colour; சிவப்பு. அரத்தவேணியர். (கந்தபு. முதனா. 82). 2. Blood; 3. Coral; 4. Shoe-flower. See செம்பரத்தை. 5. Red water-lily. See செங்கழுநீர். 6. Common cadamba. See கடம்பு. 7. Brazil cotton. See செம்பருத்தி. (L.) 8. A garment of ancient times; |
அரத்தம் 2 | arattam n. <>a-laktaka. Red sealing-wax, lac; அரக்கு. (திவா.) |
அரத்தன் | arattaṉ n. <>rakta. The planet Mars, as red; செவ்வாய். (பிங்.) |
அரத்தை | arattai n. cf. rāsnā. 1. Galangal, shrub, Alpinia; செடிவகை. அரத்தை முக்கடு (தைலவ. தைல. 1). 2. Big galangal. See பேரரத்தை. (L.) |
அரதனம் | arataṉam n. <>ratna. 1. A precious stone; இரத்தினம். அரதனக் கலச வியன்கரம். (தணிகைப்பு. கடவுள். 3). 2. A mineral posion; |
அரதனமாலை | arataṉa-mālai n. <>id.+. Figure of speech which consists in enumerating certain things in their regular order; ஓர் அலங்காரம். (அணியி.74.) |
அரதனாகரம் | arataṉākaram n. <>id.+ ā-kara. The bay east of Dhanuṣkōṭi. See இரத்தினாகரம். (அருணா. பு. திருக்கண். 14.) |
அரதி | arati n. <>a-rati. Absence of desire; வேண்டாமை. அரதி கைவிஞ்சு மோகம் (திருவாய். நூற். 62). |
அரதிமறதி | arati-maṟati n. <>அயர்தி+. Forgetfulness, unmindfulness; ஞாபகத்தவறு. அரதிமறதியாயிராதே. Loc. |
அரதேசிபரதேசி | aratēci-paratēci n. redupl. of paradēšin. [T.K. aradēši-paradēši.] Foreigner, mendicant; பரதேசி. |
அரந்தை 1 | arantai n. prob. அல-. 1. Affliction, trouble; துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை ... தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12). 2. Sorrow, distress; |
அரந்தை 2 | arantai n. A primary melody-type of the kurici class; குறிந்சிப்பண். (பிங்.) |
அரந்தையன் | arantaiyaṉ n. <>அரந்தை1 Destitute person; தரித்திரன். (சம். அக.) |
அரப்பிரியை | ara-p-piriyai n. <>harapriyā. Pārvatī, dear to Siva; உமை. (திருவானைக். கோச்செங். 81.) |
அரப்பு | arappu n. <>அரை5-. Corr. of அரைப்பு, 2 . |
அரப்பொடி | ara-p-poṭi n. <>அரம்+. Iron filings, ferri limatura; இரும்புத்தூள். (W.) |
அரபத்தநாவலர் | ara-patta-nāvalar n. <>hara+bhakta+. Name of the author of the Parata-cāstiram; பரதசாஸ்திர நூலாசிரியர். |
அரபி 1 | arapi n. Chebulic myrobalan.See கடுக்காய். (மலை.) |
அரபி 2 | arapi n. <>U.arab. 1. Arabia; அரபிதேசம். 2. Arabic; |
அரம் 1 | aram n. <>அராவு-. [K. Tu. ara, M. aram.] File, rasp, அராவுங்கருவி. அரம்போலுங் கூர்மைய ரேனும் (குறள். 997). |
அரம் 2 | aram n. prob. அர. Nether world of serpents; பாதலம். அரமேவி வெம்பின பணி (இரகு. யாகப். 81). |
அரம்பணம் | arampaṇam n. Betel-leaf plucker's thimble; வெற்றிலைநறுக்குங் கருவி. (C.G.) |
அரம்பன் | arampaṉ n. <>அரம்பு. Mischievous fellow; குறும்புசெய்வோன். அரம்பா வுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6). |
அரம்பு | arampu n. Mischief, wicked deed; குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727). |
அரம்பை 1 | arampai n. <>rambhā. 1. Plantain. See வாழை. அரம்பை நிரம்பிய தொல்வரை. (கம்பரா. வரைக். 59). 2. Name of a courtesan in the world of the gods; |
அரம்பை 2 | arampai n. Omum. See ஓமம். (மலை.) |
அரம்பையர் | arampaiyar n. <>rambhā. Celestial damsels; தெய்வமகளிர். அரமபியர்ச் சேர்குவ ரன்றே (நைடத. நிலா. 13). |
அரமகள் | ara-makaḷ n. prob. amara+. Celestial damsel; தேவமாதர். (சூடா.) |