Word |
English & Tamil Meaning |
---|---|
அரசகேசரி | araca-kēcari n. <>rāja-kēsarin. Name of a famous Jaffna poet, author of the Tamil Iraku-vamicam, contamporary of the king Para-rāca-cēkaraṉ; தமிழிரகுவமிச ஆசிரியர். |
அரசங்கம் | aracaṅkam n. <>rājyāṅga. Requisites of regal administration, as its limbs, being six in number, viz., அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (குறள், 381, உரை.) |
அரசங்கள் | aracaṅkaḷ n. <>அரசு+கள். Pipal toddy; அரசமரத்தினின்றெடுக்குங் கள். |
அரசண்மை | aracaṇmai n. <>rājan+ அண்மை. Nearness of an enemy king, one of six īti , q.v. ஈதி ஆறனுள் ஒன்று. (குறள்.732, உரை.) |
அரசநாபி | araca-nāpi n. <>id.+. Red variety of aconite; நாபிவகை. (மூ.அ.) |
அரசநீதி | araca-nīti n. <>id.+. 1. Kingly duties; இராசதருமம். 2. Political science, politics; |
அரசப்பிரதட்சிணம் | araca-p-pirataṭciṇam n. <>அரசு+. Circumambulation of the pipal tree from left to right; அரசமரத்தை வலம் வருகை. |
அரசம் 1 | aracam n. <>a-rasa. Want of taste; சுவையின்மை. அரசமாகப் பேசுகிறான். |
அரசம் 2 | aracam n. <>aršas. Piles; மூலநோய். அரசம்மொலி குன்மமும் (தைலவ. தைல. 84). |
அரசமரம் | araca-maram n. <>அரசு+. Pipal, l.tr., Ficus religiosa; மரவகை. |
அரசமுல்லை | araca-mullai n. <>rājan+. (Puṟap.) Theme extolling a king's power to destroy his foes and protect his subjects; அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8. 17.) |
அரசர்க்குறுதிச்சுற்றம் | aracarkkuṟuti-c-cuṟṟam n. <>id.+ உறுதி+. Reliable attendants of a king, five in number, viz., நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர். (பிங்.) |
அரசர்குழு | aracar-kuḻu n. <>id.+. Confidential councillors of a king, five in number, viz., மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், ஒற்றர். (திவா.) |
அரசர்சின்னம் | aracar-ciṉṉam n. <>id.+. Insignia of royalty, twenty-one in number, viz., முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.) |
அரசர்பக்கம் | aracar-pakkam n. <>id.+ பக்கம்1. Occupations of a king, five in number, viz., ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல். (தொல். பொ. 75.) |
அரசர்பரி | aracar-pari n. <>id.+. Royal horse, supposed to have ears like the petals of a plantain flower, with legs, breasts, back, neck and face white, and a height of 82 inches; அரசாங்கக் குதிரை. (பிங்.) |
அரசர்பா | aracar-pā n. <>id.+. Kind of verse. See ஆசிரியப்பா. (இலக். வி. 873.) |
அரசர்பின்னோர் | aracar-piṉṉōr n. <>id.+. Vaišyas, as next to Kṣatriyas in the system of castes; வைசியர். (சிலப். 16, 44.) |
அரசர்மன்னன் | aracā-maṉṉaṉ n. <>id.+. Duryōdhana, as a king of kings; துரியோதனன். (சூடா.) |
அரசரறுகுணம் | aracar-aṟu-kuṇam n. <>id.+. Six measures of foreign policy of a king, viz., சந்தி, விக்கிரகம், யானம், ஆசனம், துவைதம், ஆச்சிரயம் (இரகு.திக்கு.20); நட்பு, பகை, செலவு, இருக்கை, கூடினரைப் பிரித்தல், கூட்டல் (பு.வெ.9. 37, உரை.) |
அரசரறுதொழில் | aracar-aṟu-toḻil n. <>id.+. Six occupations of the Kṣatriya, viz., ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுதல். (குறள். 384, உரை.) |
அரசவாகை | araca-vākai n. <>id.+. (Puṟap.) Theme extolling a king's impartiality and valour; வேந்தனியல்பு கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 3.) |
அரசவாரியன் | araca-vāriyaṉ n. <>id.+. Skilled rider, horseman; குதிரை நடத்துவோரிற் சிறந்தவன். (கலித். 96, உரை.) |
அரசவை | aracavai n. <>id.+ அவை3 King's council chamber or audience hall; இராசசபை. அரசவை யிருந்த (பொருந. 55). |
அரசளி - த்தல் | aracaḷi- v. tr. <>id.+ அளி2-. To rule. See அரசாள்-. திருவாரூ ரரசளிப்பவர் (பெரியபு.திருநான. 506). |
அரசன் 1 | aracaṉ n. <>rājan. [K. arasa, M. aracan, Tu,arasu.] 1. king, sovereign, prince; இராசன். (பிங்.) 2. Jupiter; |
அரசன் 2 | aracaṉ n. 1. Blue vitriol; துருசு. (மூ.அ.) 2. A mineral poison; 3. A prepared arsenic; |
அரசன்விருத்தம் | aracaṉ-viruttam n. <>rājan+. Poem celebrating the natural resources, prosperity and prowess of a ruling king, containing 10 kalittuṟai and 30 viruttam besides 30 kalittāḻicai; பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.) |