Word |
English & Tamil Meaning |
---|---|
கேடு | kēṭu, n. <>கெடு-. [T. cēṭu, K. Tu. kēdu, M. kēṭu.] 1. Ruin, destruction, anhihilation; அழிவு. கேடிவ்ல் விழுச்செல்வம் (குறள், 400). 2. Loss, waste, damage; 3. Adversity, indigence, destitution; 4. Death; 5. Evil, injury; 6. (Gram.) Elision, omission; 7. Ugliness, deformity; |
கேடுகாலம் | kēṭu-kālam, n. <>கேடு+. Bad times; அழிவுறுங்காலம். |
கேடுகெட்டவன் | kēṭu-keṭṭavaṉ, n. <>id. +. Ruined, despicable person; நிலைமை யழிந்தவன். |
கேண்மை | kēṇmai, n. <>கெடள-. 1. Friendship, intimacy; நட்பு. வினைதீயார் கேண்மை (நாலடி, 172). 2. Kindness, favour, benevolence; 3. Relationship; 4. Practice, usage; |
கேணி | kēṇi, n. cf. khan [ K. M. kēṇi.] 1. Small tank; சிறுகுளம். (தொல். சொல். 400, உரை.) 2. Well; 3. [Tu. kaṇi.] Ditch, trench; |
கேத்திரக்கியன் | kēttira-k-kiyaṉ, n. <>kṣētra-ga. Lit., the conscious principle in the body, soul; [சரீரத்திலுள்ள அறிவுப்பொருள்] ஆன்மா. கேத்திரக்கியனைத் தொடர்ந்து (வாயுசங். பஞ் சப்பி.2). |
கேத்திரகணிதம் | kēttira-kaṇitam, n. <>kṣē-tra+gaṇita. Geometry; இரேகாகணிதம். |
கேத்திரபாலன் | kēttira-pālaṉ, n. <>id. +. 1. Guardian deity of sacred places; க்ஷேத்திரத்தைக் காக்குந் தேவதை. 2. Bhairava; |
கேத்திரம் | kēttiram, n. <>kṣētra. 1. Sacred place, shrine, any place of pilgrimage; புண்ணியஸ்தலம். ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின் (திருவானைக். மூர்த். 4). 2. Land, field; |
கேத்திரி | kēttiri, n. <>kṣētrin. Viṣṇu; திருமால். திப்பியநான்முகன் கேத்திரி புராந்தகன் (வேதா. சூ. 71). |
கேத்து | kēttu, n. <>U. khet <> kṣētra. Field; வயல். Loc. |
கேத்துவாரி | kēttu-vāri, n. <>U. khētwāri. Portion taken as temple revenue from the gross produce of dry lands, before a division of the yield is effected between the ryot and Goverment; புன்செய்விளைவில் குடியானவனும் சர்க்காரும் பாகஞ் செய்துகொள்ளுமுன் கோயில்களுக்குக் கொடுக்கும் பாகம். (G. Tn. D. i, 313.) |
கேதகாரியம் | kēta-kāriyam, n. <>khēda +. Lit., acts of sorrow. Funeral rites; [துன்பச்செயல்] சாச்சடங்கு. (W.) |
கேதகி | kētaki, n. <>kētakī. See கேதகை. . |
கேதகை | kētakai, n. <>kētakā. Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus; தாழை. கேதகைமுனிவார் வெங்கைவாணர். (வெங்கைக்கோ. 319). |
கேதம் | kētam, n. <>khēda. 1. Distress, affiction, sorrow; துக்கம். கேதங்கெடுத் தென்னை யாண்டருளும் (திருவாச. 43, 9). 2. Weariness, exhaustion; |
கேதம்விசாரி - த்தல் | kētam-vicāri-, v. tr. <>கேதம்+. To condole with mourners; துக்கம் விசாரித்தல்இ |
கேதல் | kētal, n. <>கேது-. Calling, inviting; அழைக்கை. (பிங்.) |
கேதனம் | kētaṉam, n. <>kētana. Flag, banner; கொடி. பொருங் கேதனப்படி மன்னரை (அஷ்டப். திருவரங். மா. 73). |
கேதாரகௌரிவிரதம் | kētāra-kauri-vira-tam, n. <>kēdāra +. Religious vow observed by women ont the day before the new moon in the mouth of Aippaci, in honour of Pārvatī who dwells in Kētāram; ஐப்பசிக் கிருஷ்ணசதுர்த்தசியில் கேதாரகேஷ்த்திரதிலுள்ள கௌரியின்பொருட்டுப் பெண்பாலார் அனுட்டிக்கும் நோன்பு. |
கேதாரகௌளம் | kētāra-kauḷam, n. prob. kedāra-gauda. A musical mode; ஓர் இராகம் (பரத. இராக. 55.) |
கேதாரம் 1 | kētāram, n. <>Kēdāra. 1. A shring in the Himalayas sacred to šiva; இமயமலையில் உள்ள ஒரு சிவதலம். (தேவா. 1152.) 2. Field; 3. A misical mode; |
கேதாரம் 2 | kētāram, n. prob. kēkārava. Peacock; மயில். (திவா.) |
கேதாரயோகம் | kētāra-yōkam, n. <>kēdāra +. (Astrol.) Presence of seven planets in four consecutive houses, indicating good for tune; எழுகிரங்ககள் இடையீடின்றி நான்கு இராசிகளில் நிற்கவரும் யோகம். (சங். அக.) |