Word |
English & Tamil Meaning |
---|---|
கைக்கட்டு 2 | kai-k-kaṭṭu, n. <>id.+. [M. kaikeṭṭu.] 1. Frnament for the arm or waist of a woman; கைகளைக் கட்டிக்கொள்கை. 2. [Tu. kaikaṭṭu.] Ornament for the arm or waist of a woman; |
கைக்கட்டுபவளம் | kai-k-kaṭṭu-pavaḷam, n. <>id. +. Coral bracelet; பவளத்தாலான ஒருவகைக் கையணி. Parav. |
கைக்கடன் | kai-k-kaṭaṉ, n. <>id. +. 1. [Tu. kaikada.] Temporary oral loan; கைமாற்றுக்கடன். 2. Obligation, duty; |
கைக்கடனாற்றல் | kai-k-kaṭaṉ-āṟṟal, n. <>id. +. Rendering assistance, helping, obliging, mentioned as a characteristic of the Vēḷāḷas; உதவிபுரிதலாகிய வேளாண்மாந்தரியல்பு. (சூடா.) |
கைக்கடியாரம் | kai-k-kaṭiyāram, n. <>id. +. Watch; கையிலெடுத்தாளும் சிறிகடியாரம். |
கைக்கணக்கு | kai-k-kaṇakku, n. <>id. + [ M. kaīkkaṇakku.] [M. kaīkkaṇakku.] Memorandum of accounts; கணக்குக்குறிப்புப் புத்தகம். |
கைக்கணிசம் | kai-k-kaṇicam, n. <>id. +. Estimation of weight or quantity by the hand; கையால் மதிக்கும் மதிப்பு. |
கைக்கத்தி | kai-k-katti, n. <>id. +. Pocketknife, small knife; சிறுகத்தி. |
கைக்கத்திரிகை | kai-k-kattirikai, n. <>id. +. Shears, clipping instrment; மயிர்வெட்டுங்கருவி. கைக்கத்திரிகையிட்டு நறுக்கின தலையாட்டாத்தையுடைய பரிகள் (பு. வெ. 3, 10, உரை). |
கைக்கரடு | kai-k-karaṭu, n. <>id. +. Wrist; மணிக்கட்டு. (W.) |
கைக்கரண்டி | kai-k-karaṇṭi, n. <>id. +. Small spoon, tea-spoon; சிறுகரண்டி. |
கைக்கவசம் | kai-k-kavacam, n. <>id. +. Goves; கையுறை. |
கைக்காணி | kai-k-kāṇi, n. <>id. +. Present, gift; காணிக்கை. இடபவிலச்சினையைக் கைக்காணியாக இட்டு (கலித். 82, 12, உரை). |
கைக்காப்பு | kai-k-kāppu, n. <>id. +. Wristlet bracelet; கையிலணியுங் காப்பு. |
கைக்காரன் | kai-k-kāraṉ, n. <>id. + [M. kaikkāran.] 1. Man of ability or skil; சமர்த்தன். Colloq. 2. Wealthy person; |
கைக்காரியம் | kai-k-kāriyam, n. <>id. +. Work on hand, immediate engagement; கைவேலை. Colloq. |
கைக்காறை | kai-k-kāṟai, n. <>id. +. Bracelet, arm-ring; ஒருவகைக் கையணி. திருக்கைக்காறை யொன்று (S.I.I. ii, 144). |
கைக்கிட்டி | kai-k-kiṭṭi, n. <>id. +. Instrument of torture for the hand; கைகளிலிட்டு இறுக்குங்கோல். (W.) |
கைக்கிளவன் | kai-k-kiḷavaṉ, n. <>id. +. See கைக்கோளன். Loc. . |
கைக்கிளை | kai-k-kiḷai, n. <>id. +. 1. (Akap.) Unreciprocated sexual love, as one-sided; ஒருதலைக் காமம். கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் (தொ. பொ. 1). 2. Poem in five viruttam verses treating of unreciprocated love; 3. The third note of the gamut, one of seven icai, q.v.; 4. A kind of verse. See |
கைக்கிளைத்திணை | kai-k-kiḷai-t-tiṇai, n. <>கைக்¨¤களை+. (Akap.) Theme treating of kaikkiḷai; கைக்கிளையைப்பற்றிக் கூறும் திணை. (தொ. பொ. 1, உரை.) |
கைக்கீறல் | kai-k-kīṟal, n. <>கை5+. See கைக்கீறு. . |
கைக்கீறு | kai-k-kīṟu, n. <>id. +. Signaturemark made by an illiterate person; தற்குறிக்கீற்று. |
கைக்குட்டை | kai-k-kuṭṭai, n. <>id. +. 1. Handkerchief; சிறுதுண்டு. 2. Handcuff; |
கைக்குடை | kai-k-kuṭai, n. <>id. +. Parasol, small umbrella; சிறுகுடை. ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும் (அறநெறி. 43). |
கைக்குத்து | kai-k-kuttu, n. <>id. +. [M. kaikkuttu.] Blow with the fist, cuff in boxing; கைமூட்டியால் தாக்குகை. கைக்குத்ததுபடலும் (கம்பரா. முதற்போ.176). |
கைக்குதவு - தல் | kaikkutavu-, v. intr. <>id. +உதவு-. To be opportuenly useful, to be of timely help; சமயத்துக்கு உதவுதல். |
கைக்குநீர்கொள்(ளு) - தல் | kaikku-nīr-koḷ-, v. intr. <>id. +. Lit., to take water for washing hands, To pass urine used enphemistically; சிறுநீர் விடுதல். (யாழ். அக.) |