Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கொல்லைக்குப்போ - தல் | kollaikku-p-pō-, v. intr. <>id. +. Lit., to go to backyard. to go to stool; [கொல்லைப்புறஞ் செல்லுதல்] மலங்கழித்தல்.  | 
| கொல்லைப்பயறு | kollai-p-payaṟu, n. <>id. +. Corn growing on elevated ground; மேட்டுநிலப்பயிர். Loc.  | 
| கொல்லைப்பயிர் | kollai-p-payir n. <> id. +. Corn growing on elevated ground; மேட்டுநிலப்பயிர். Loc.  | 
| கொல்லைப்பல்லி | kollai-p-palli, n. <>id. +. A parasitic plant, Buchnera asiatica; பூடுவகை. (W.)  | 
| கொல்லைமை | kollaimai, n. <>id. Act of transgressing or violating conventional bounds; வரம்பழிந்து ஒழுகுகை. ஆய்ச்சியர் தம்மொடுங் கொல்லைமை செய்து (திவ். திருவாய். 4, 2, 2).  | 
| கொல்லைவிளைவி - த்தல் | kollai-viḷaivi-, v. intr. <>id. +. To cultivate a garden; தோட்டம் பயிரிடுதல். (J.)  | 
| கொல்லைவெளி | kollai-veḷi, n. <>id. +. Open uncultivated plots; வயல்வெளி. Loc.  | 
| கொலு | kolu, n. cf. கோலம் [T. koluvu, M. kolu.] 1. Royal presence, durbar, sitting-in-state; ஒலக்க இருப்பு. இருந்திடுங் கொலுவில் (மச்சபு. நைமிசா. 5). 2. Decorations in a Hindu house at the time of the Navarātri festival;  | 
| கொலுக்கூடம் | kolu-k-kūṭam, n. <>கொலு+. Audience chamber. See கொலுமண்டபம்.  | 
| கொலுகொலு - த்தல் | kolu-kolu-, 11. v. intr. Onom. 1. To become loose, disjointed, rickety, deranged in parts; கலகலத்தல். (W.) 2. To moulder, crumble into dust, as a dead body; 3. To be defeated or discomfited in argument; 4. To chatter incessantly;  | 
| கொலுகொலுப்பு | kolu-koluppu, n. <>கொலுகொலு-. 1. Affectation, ostentation; ஆடம்பரம். (J.) 2. Incessant chattering; 3. Becoming loose or rickety;  | 
| கொலுசு | kolucu, n. <>T. golusu. 1. Gold or silver chain for the arm or ankle; கைகால்களில் அணியும் பொன் அல்லது வெள்ளியாலான அணி. கொலுசுடன் சிலம்பசைய (திருப்பு.786). 2. Chain measuring 22 yards, survey-chain;  | 
| கொலுசெழுத்து | koluceḻuttu, n. <>கொலுசு +. Running hand; சுட்டெழுத்து. Loc.  | 
| கொலுமண்டபம் | kolu-maṇṭapam, n. <>கொலு+. Presence chamber, as of a deity or king; ஆஸ்தான மண்டபம். உயர் கொலுமண்டபத்திடையோ (சிவரக. சிவரக விசையை. 13).  | 
| கொலை | kolai, n. <>கொல்-. [M. Tu. kole, M. kolli.] 1. Killing, slaying, murder, assassination; உயிர்வதை. கொலையே களவே (மணி. 24, 125). 2. Vexation, teasing, tormenting;  | 
| கொலைக்கடம்பூட்டு - தல் | kolai-k-kaṭam-pūṭṭu-, v. tr. <>கொலை+கடம்+பூட்டு-. To carry out capital sentence; கொலைத்தண்டனை நிறைவேற்றுதல். குற்றங் காட்டிக் கொலைக்கடம்பூட்டுதும் (பெருங். மகத. 25, 103).  | 
| கொலைக்களம் | kolai-k-kaḷam, n. <>id. +. Place of execution; கொல்லப்படும் இடம். கொலைக்களக்காதை (சிலப். 16).  | 
| கொலைக்குற்றம் | kolai-k-kuṟṟam, n. <>id. +. Offence or crime of murder; உயிர்வதை செய்தலாகிய குற்றம். Colloq.  | 
| கொலைக்கேசு | kolai-k-kēcu, n. <>id. +. A murder-case; கொலையைப்பற்றிய வழக்கு.  | 
| கொலைகாரன் | kolai-kāraṉ, n. <>id.+. 1. Murderer, assassin; கொலைசெய்பவன். 2. One who will not flinch from any heinous crime;  | 
| கொலைச்சிறை | kolai-c-ciṟai, n. <>id. +. Prison-cell of criminals sentenced to death; சிரைச்சாலையில் கொலைத்தண்டனைக்குரிய குற்றவாளிகளை வைக்கும் அறை. கொலைச்சிறை யிருவரை (பெருங். இலாவாண.17, 71).  | 
| கொலைசுற்று - தல் | kolai-cuṟṟu-, v. tr. <>id. +. To be encompassed, as a person or family, by the sin of murder; கொலைப்பாவம் வழிவழியாகத் தொடர்தல். Colloq.  | 
| கொலைசூழ் - தல் | kolai-cūḻ-, v. tr. <>id. +. 1. To plot against a person's life; கொல்லும் உபாயத்தை நாடுதல். See கொலைசுற்று-.  | 
| கொலைஞன் | kolaiaṉ, n. <>id. 1. See கொலைகாரன். கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331). . 2. Hunter; 3. Caṇṭāḷaṉ, whose profession was to kill animals;  | 
| கொலைநன் | kolainaṉ, n. <>id. See வாழுயிர்க் கூற்றமான கொலைநரை (சீவக. 2770). .  | 
