Word |
English & Tamil Meaning |
|---|---|
| சரக்கறை | carakkaṟai, n. <>id. +. 1. Storehouse; பண்டங்கள் வைக்குமிடம். எல்லாஞ்சாலக்கிடக்குஞ் சரக்கறையோ (தேவா. 1198, 5). 2.Treasury; 3. Jewel-house; |
| சரக்காள் | carakkāḷ, n. <>id. + ஆள். A well-informed person; பொது விஷயங்கள் பலவுந்தெரிந்தவன். Colloq. |
| சரக்காளி | Carakkāḷi, n. <>id. + ஆள்-. 1. Excess; அதிகம். ரசத்தில் புளிப்புச் சரக்காளியாயிருக்கிறது.Loc. 2. See சரக்காள். Loc. |
| சரக்கு | Carakku, n. 1. [T. K. Tu, saraku, M. carakku] Goods, articles of merchandise; வியாபாரப்பண்டம். இலைச்சினை யொற்றிய தலைச்சுமைச் சரக்கினர் (பெருங். மகத. 17, 152). 2. Gold; 3. Solid worth, ability; 4. [T. K. Tu. saraku, M. carakky.] curry-stuffs, spices, etc.; 5. Medicinal substance, especially arsenic, alkalies and acids; 6. cf. அரக்கு. Arrack, liquor, toddy; 7. Vene-real disease; |
| சரக்குக்கட்டு - தல் | Carakku-k-kaṭṭu-, v. intr.<>சரக்கு+. 1. See சரக்குப்பிடி-. . 2. To pack and forward merchandise; 3. To solidify liquids, as mercury, for medicinal purposes; |
| சரக்குக்கடை | Carakku-k-kaṭai, n. <>id. +. Toddy shop; கள்ளுக்கடை. Loc. |
| சரக்குச்சுண்ணம் | carakku-c-cuṇṇam, n. <>id. +. Peroxide compound of mercury, sulphur, etc.; See சவ்வீரம். (W.) . |
| சரக்குப்பண்ணு - தல் | Carakku-p-paṇṇu-. v. tr. <>id. +. 1. To dry in the sun; வெயிலில் உலர்த்துதல். (J.) 2. To regard or esteem; |
| சரக்குப்பறி - த்தல் | Carakku-p-paṟi-,. v, intr. <>id. +. To unload cargo; பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல். சரக்குப்பறித்தற்குக் கடலில் நின்ற மரக்கலங்கள் (மதுரைக். 85, உரை). |
| சரக்குப்பிடி - த்தல் | carakku-p-piṭi-,. v. intr. <>id. +. To buy up goods wholesale for trade; வியாபாரத்துக்குப் பண்டங்களை மொத்தமாக வாங்குதல். |
| சரக்குப்புரக்கெனல் | carakku-p-purak-keṉal, n. Onom. expr. signifying (a) creaking sound, as of shoes; ஓர் ஒலிக்குறிப்பு: (b) brisk bustling walk; |
| சரக்குமாறு - தல் | Carakku-māṟu-, v. intr. <>சரக்கு +. To barter goods; பண்டமாறுதல். |
| சரக்கொட்டகை | Cara-k-koṭṭakai, n. <>சரம் +. A pandal decorated with festoons; பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொட்டகை. Loc. |
| சரக்கொன்றை | Cara-k-koṉṟai, n. <>Sara +. Indian laburnum, m.tr., Cassia fistula; சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைவகை. (பதார்த்த. 204.) |
| சரக்கொன்றைப்புளி | Cara-k-koṉṟai-p-puḷi, n. <>சரக்கொன்றை+. Pulp of Indian laburnum, used as a medicine; சரக்கொன்றைப் பழத்தின் உள்ளீடு. |
| சரகண்டம் | Carakaṇṭam, n. <>carakhaṇda. (Astron.) Ascensional difference between the equator and the place in question; பூமத்தியரேகைக்கும் குறிப்பிட்ட இடத்திற்குமுள்ள கிரகங்களின் உச்சவேறுபாடு. |
| சரகத்து | Carad-kattu, n. <>U. sarhad. Boundary; எல்லை. (C.G.) |
| சரகதி | Cara-kati, n. <>šara+. A horse's pace, resembling arrow's flight, one of five acuva-kati , q.v.; அம்புபோற் செல்வதாகிய அசுவகதி வகை. (திவா.) |
| சரகம் 1 | Carakam, n. 1. See சரகத்து. Loc. . 2. See சராகம். |
| சரகம் 2 | Carakam, n. <>saraghā. (பிங்.) 1. Bee; தேனீ. 2. Beetle; |
| சரகாடி | carakāṭi, n. See சர்வகாடி. (W.) . |
| சரகாண்டபாஷாணம் | Carakāṇṭa-pāsā-ṇam, n. prob. šarakāṇda +. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. (மூ. அ.) |
| சரகாண்டம் | Carakāṇṭam, n. perh <>šara+ kāṇda. Quiver; அம்புக்கூடு. (W.) |
| சரகு | caraku, n. See சரகு. Vul. . |
| சரகூடம் | Cara-kūṭam, n. <>šara + kūṭa. A pandal-like formation of arrows serving as protection from hostile weapons; பகைவர் படைக்கலந் தாக்காதவாறு அம்பினாற்கட்டும் பந்தல். (சீவக.1680, உரை.) |
| சரங்கம் | Caraṅkam, n. A kind of arsenic; பாஷாணவகை. (W.) |
