Word |
English & Tamil Meaning |
|---|---|
| சரணத்தார் | Caraṇattār, n. <>id. Members of a Vēdic school; ஒருசார் வேதசாகையை ஓதுவோர். பவிழிய சரணத்தார் ... தைத்திரிய சரணத்தார் ... தலவகார சரணத்தார் (T. A. S. I, 8). |
| சரணம் 1 | Caraṇam, n. <>caraṇa. 1. Foot; பாதம். (பிங்.) 2. Section or branch of the vēda; 3. (Mus.) Third section in a kīrttaṉam; |
| சரணம் 2 | Caraṇam, n. <>šaraṇa, 1. Shelter, refuge, asylum; அடைக்கலம். (பிங்.) 2. A town in agricultural tract; 3. House; 4. Pipal; |
| சரணம் 3 | Caraṇam, n. 1. Peacock's tail; மயிற்றோகை. (பிங்.) பச்சைச் சரணமயில் வீரா (திருப்பு. 1117, புதுப்.). 2. Peacock; |
| சரணம் 4 | Caraṇam, n. <>jaraṇa, Asafoetida; பெருங்காயம். (தைலவ. தைல. 9.) |
| சரணம் 5 | Caraṇam, n. prob, šrṇi. Elephant-goad; யானைத்தோட்டி. (பிங்.) |
| சரணர் | Caraṇar, n. prob. caraṇa. Vīrašaiva devotees; வீரசைவப் பெரியோர். நஞ்சோம நாதன்றுதியுளுறு சரணர் (பிரபுலிங். துதி. 10). |
| சரணவாதம் | Caraṇa-vātam, n. <>id. + vāta. Cramp in the legs; காலிலுண்டாகும் வாதப்பிடிப்பு. (J.) |
| சரணாகதன் | Caraṇākataṉ, n. <>šaraṇa+ā-gata. Refugee; அடைக்கலம் புகுந்தோன். |
| சரணாகதி | Caraṇākati, n. <>id. + ā-gati. Taking shelter, seeking refuge; அடைக்கலம் புகுகை. சரணாகதியாய்ச் சரண்சென்றடைந்த பின் (மணி. 30, 5). |
| சரணாயுதம் | Caraṇāyutam, n. <>caraṇa + ā- yudha. Cock. See காலாயுதம். (உரி.நி.) . |
| சரணார்த்தி | Caraṇārtti, n. <>šarana + arthin. One who seeks shelter or refuge; அடைக்கலந்தேடுபவன். உளந்தளர்ந்து சரணார்த்தியென்று சார்ந்தார்க்கும் (பஞ்சதந். சந்திவிக். 123). |
| சரணாரவிந்தம் | Caraṇāravintam, n. <>caraṇa + aravinda. Lotus-like foot; பாத தாமரை. இராமானுசன் சரணாரவிந்தம். (திவ். இராமானுச. 1). |
| சரணி | caraṇi, n. <>Saraṇi. Path; வழி. சரணிதேடு காவலர் (அழகர்கல. 25). |
| சரணியன் | Caraṇiyaṉ, n. <>šaraṇya. Saviour; இரட்சகன். சணியனாகத் தனை நினைந்து (அஷ்டப். அழகர். 47). |
| சரத்காலம் | Carat-kālam, n. <>šarad +. See சரத்ருது. . |
| சரத்தியார் | Carattiyār, n. prob. Father's younger brother's wife; mother's younger sister; சிறிய தாய். Brah. |
| சரத்ருது | Carat-rutu, n. <>šarad +. Autumnal season, the months of Aippaci and Kārttikai, one of six rutu, q.v.; ருது ஆறனுள் ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிர்க்காலம். |
| சரதம் | Caratam, n. prob. sat + rta. Truth; உண்மை. வேத முடிவிது சரத மென்றான் (கம்பரா. இரணியன்வதை. 122). |
| சரதல்பம் | Cara-talpam, n.<>šara-talpa A bed of arrows; அம்புகளாலியன்ற படுக்கை. சரதல் பத்திற் சயனித்துக் கொண்டிருக்கிற பீஷ்மர் (மஹாபாரத.). |
| சரதலம் | cara-talam, n. prob. cara + dala. An element required for computing the equinoctial points and the daily motion of planets; கிரககதி முதலியவற்றை உணர்தற்குவேண்டும் கணக்கில் ஒன்று. (W.) |
| சரதலவிநாடி | Caratala-vināṭi, n. <>சரதலம் +. Vināti Occurring in cara-talam; சரதலத்தில் வரும் விநாடி. (W.) |
| சரந்தொடு - த்தல் | caran-toṭu-, v. intr. <>சரம் +. 1. To shoot arrows; அம்பெய்தல். 2.To shower abuses; |
| சரநட்சத்திரம் | Cara-naṭcattiram, n. <>Cara +. The 7th, 15th, 22nd, 23rd and 24th nakṣatras, considered auspicious; புனர் பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம் என்னும் சுபநட்சத்திரங்கள். (விதான. பஞ்சாங்க. 20, உரை.) |
| சரநூல் | Cara-nūl, n. <>id. +. See சரசாத்திரம். . |
| சரப்பணி | Cara-p-paṇi, n. <>sara +. [T. K. sarapaṇi.] Gold neck-chain inlaid with diamonds; வயிரமழுத்தின கழுத்தணிவகை. (பிங்.) |
| சரப்பலகை | Cara-p-palakai, n. <>சரம்+. A kind of wooden shutter for shops; கடைகளின் அடைப்புப் பலகை. Tinn. |
| சரப்பளி | Carapaḷi, n. [K. sarapaḷi, M. sarappaḷi, Tu, sarapoḷi.] 1. See சரப்பணி. (சிலப். 6, 99, உரை.) . 2. Gold necklet; |
| சரப்பளிச்சம்பா | Carappaḷi-c-campā, n. <>சரப்பளி +. A Campā paddy sown in āṉi - āvaṇi and maturing in six months; ஆனி ஆவணி மாதங்களில் விதைத்து ஆறுமாதங்களில் அறுவடையாகும் சம்பாநெல்வகை. Tj. |
| சரபடி | Carapaṭi, n. [T. sarabadi.] See சரவடி. அந்தச் சரபடியிலே பெண் கொள்ளவேண்டும். . |
