Word |
English & Tamil Meaning |
|---|---|
| சரல் | Caral, n. [M. caral.] See சரளை. Loc. . |
| சரலங்கா | Caralaṅkā, n. East Indian plum, s. tr., Flacourtia cataphracta; மரவகை. Kāṭar. |
| சரலாந்தல் | Cara-lāntal, n. <>சரம் + Lights held in chandelier; கிளைவிளக்குவகை. |
| சரவட்டை | Caravaṭtai, n. <>சாவட்டை. That which is worthless or inferior; கீழ்த்தரமானது. (J.) |
| சரவடி | Cara-v-aṭi, n. perh. சரம்+அடி. Tribe, family; வமிசம். இவன் எங்கள் சரவடியிலே சேர்ந்தவன். (W.) |
| சரவணப்பொய்கை | Caravaṇa-p-poykai, n. <>šara-vaṇa+. A sacred pond in the Himalāyas amidst a thicket of kaus, where Skanda was born; இமயமலைச்சாரலிலுள்ளதும் முருகக்கடவுள் அவதரித்த இடமுமான ஒரு நீர்நிலை. (பு. வெ. 9, 21, உரை.) |
| சரவணபவன் | caravaṇa-pavaṉ,. n. <>id. +. Skanda, as born in caravaṇa-p-poykai; [சரவணப்பொய்கையிற் பிறந்தவன்] முருகக்கடவுள். சரவணத்தின் பாங்கரின் வருதலாலே சரவணபவனென்றானான். (கந்தபு. திருவிளை. 16). |
| சரவணம் | Caravaṇam, n. <>šara-vaṇa. 1. Thicket of kaus; நாணற்காடு. (பிங்.) 2. Kaus. See நாணல். (பிங்.) 3. European bamboo reed. See கொறுக்கை, 1. 4. See சரவணப்பொய்கை. ஊறுநீர்ச் சரவணத்து (மணி. 18, 92). |
| சரவணோற்பவன் | Caravaṇōṟpavaṉ, n. <>id. + ud-bhava. See சரவணபவன். . |
| சரவருஷம் | Cara-varuṣam, n. <>šara+varṣa. See சரமாரி. . |
| சரவல் | caraval, n. See சரவை, 3. சரவலில்லாமல் எழுதிக்கொண்டுவா. Nā. . |
| சரவழகி | Caravaḷaki, n. See சரவாசி. (சங். அக.) . |
| சரவன் | Caravaṉ, n. <>šara, Bowman, as having arrows; அம்பெய்வோன். புரமூன்றெரிசெய்த சரவா. (தேவா. 112, 1). |
| சரவாச்சம் | Caravāccam, n. perh. sarva-rasa. Common salt; கறியுப்பு. (W.) |
| சரவாசி | Caravāci, n. A mineral poison. See குதிரைப்பற்பாஷாணம். (யாழ். அக.) . |
| சரவாணி | Caravāṇi, n. <>šaravāṇi, See சரவன். (யாழ். அக.) . |
| சரவியம் | Caraviyam, n. <>šaravya. Target or aim of an arrow; அம்பினால் எய்யும் இலக்கு. (யாழ். அக.) |
| சரவிளக்கு | Cara-viḷakku, n. <>சரம் + String of lights usually hung in temples; ஒன்றன் மேலொன்றாக அடுக்கித் தொங்கவிடும் கோயில்விளக்கு. |
| சரவீணை | Cara-vīṇai, n. <>சரம் +. 1. A kind of stringed lute. வீணைவகை (சங். அக.) 2. Black beetle, as humming like a lute; |
| சரவை | Caravai, n. 1. cf sarala. Model-writing in an ola copy; மேல்வரிச்சட்டம். Loc. 2. cf. sabala. Confused, illegible writing; 3. Error, blunder in writing; 4. Transcript not compared with the original; 5. Trouble; |
| சரவையிடு - தல் | caravai -y-iṭu-, v. intr. <>சரவை +. To correct spelling mistakes; எழுத்துப்பிழை திருத்துதல். (W.) |
| சரவையெழுத்து | Caravai-y-eḷuttu, n. <>id. +. (W.) 1. Rough copy, first draft; திருத்தப்படாத முதற்பிரதி. 2. Copying; |
| சரள் | Caraḷ, n. See சரளை. . |
| சரளதேவதாரம் | Caraḷa-tēvatāram, n. <>Sarala +. Long-leaved pine. சீமைத்தேவதாரு. (தைலவ. தைல. 74, உரை.) |
| சரளம் 1 | Caraḷam, n. <>sarala. 1. Facility, ease; சுலபம். 2. Freedom from obstruction; 3. Order, regularity; 4. See சரளதேவதாரம். மாதவி சரள மெங்கும் (பெரியபு. நாட்டு. 29). |
| சரளம் 2 | Caraḷam, n. <>saralā. Indian jalap. See சிவதை. (மலை.) . |
| சரளவட்டி | Caraḷa-vaṭṭi, n. <>sarala +. 1. Simple interest; முதற்குமட்டும் உரிய வட்டி. 2. Low rate of interest; |
| சரளி 1 | Caraḷi, n. <>svara + āvali, [T. M. saraḷi, K. saraḷe.] (Mus.) The seven notes of the gamut in various combinations; ஸ்வரவரிசை. அமுதரச மொழுகு சரளிகள் பழகு சங்கீத வித்தை (திருவேங். சத. 63). |
| சரளி 2 | Caraḷi, n. Corr.of சளி. Phlegm; கோழை. (J.) |
| சரளிக்கட்டு | Caraḷi-k-kaṭṭu, n. <>சரளி +. Collection of phlegm in the chest; சளிக்கட்டு. (J.) |
| சரளிப்பதம் | Caraḷi-p-patam, n. <>சரளி +. (Mus.) Song with the notes of the gamut accompanying; ஸ்வரவரிசை இடையிட்டு வரும்படி பாடும் பாட்டு. |
