Word |
English & Tamil Meaning |
---|---|
சாம்பசிவன் | cāmpa-civaṉ, n.<>Sāmba +. šiva in company with Pārvatī; அம்பிகையுடன் கூடிய சிவன். |
சாம்பம் | cāmpam, n. A small plant; ஆனைநெருஞ்சி. (மலை.) |
சாம்பமூர்த்தி | cāmpa-mūrtti, n.<>Sāmba +. See சாம்பசிவன். . |
சாம்பர் | cāmpar, n. See சாம்பல்.1. சாம்பரகலத் தணிந்தாய் போற்றி (தேவா.967, 4.) . |
சாம்பராக்கு | cām-parākku, n.<>சாமி + பராக்கு.. A poem in praise of a deity, each stanza of which ends with the refrain 'cāmparākku'; பாட்டினிறுதிதோறும் 'சாம்பராக்கு' என்று முடியுமாறு பாடப் படும் ஒருவகைப்பாட்டு.(W.) |
சாம்பல் 1 | cāmpal, n.<>சாம்பு-. cf. šāmila.(M. cāmbal.) 1. Ashes; எரிபட்ட நீறு. சுடுகாடான சாம்ப லரங்கத்திலே நிருத்தமாடி (பு.வெ.9, 43, உரை). 2. Withered Hower; 3. Old age; 4. Insect causing damage to tobacco, cotton, etc.; |
சாம்பல் 2 | cāmpal, n.<>jambu. Jamun plum; See நாவல். (மலை.) . |
சாம்பல்மொந்தன் | cāmpal-montaṉ, n.<>சாம்பல்1 +. A variety of plantain bearing ash-coloured fruits; வாழைவகை. |
சாம்பல்வாழை | cāmpal-vāḻai, n.<>id. +. See சாம்பல்மொந்தன். (G.sm.D.I.i,215.) . |
சாம்பலச்சி | cāmpalacci, n. Saltpetre, potassium nitrate; வெடியுப்பு.(J.) |
சாம்பலடிப்பெருநாள் | cāmpal-aṭi-p-perunāḷ, n.<>சாம்பல் 1 +. Ash Wednesday, shrove Tuesday; கிறிஸ்தவத் திருநாள்களுள் ஒன்று . R. C. |
சாம்பலாண்டி | cāmpal-āṇṭi, n.<>id. +. 1. Religious mendicant whose whole body is smeared with ashes ; உடல்முழுதும் நீறுபூசியபரதேசி. 2. Clown; |
சாம்பலுப்பு | cāmpal-uppu, n.<>id. +. Potash, salt of tartar, potassa ; மரவுப்பு. (இங்.வை.166.) |
சாம்பலொட்டி | cāmpal-oṭṭi, n.<>id. +. Madar, as being of ash-like dull-grey colour ; (சாம்பனிறம் படிந்திருப்பது) எருக்கு. (சங்.அக.) |
சாம்பவதீக்கை | cāmpava-tīkkai, n.<>šāmbhava +. See சாம்பவிதீட்சை . . |
சாம்பவம் | cāmpavam, n.<>šāmbhava. 1. That which pertains to šiva ; சிவசம்பந்தமானது. 2. A šaiva sect; See சாம்பேகம். (திவா.) |
சாம்பவன் 1 | cāmpavaṉ, n.<>id. Worshipper of šiva, šaiva devotee; சிவனை வழிபடுவோன். |
சாம்பவன் 2 | cāmpavaṉ, n.<>Jāmbavān. nom. sing. of Jāmbavat. The king of the bear who figures in Ramayana; இராமாயணத்திற் கூறப்படும் கரடிவேந்தன். சாம்பவன் திரிந்தெனத் திரிந்து சாற்றினான் (கம்பரா.எழுச்சிப்.8) . |
சாம்பவி 1 | cāmpavi, n.<>šāmbhavi. 1.Pārvati ; பார்வதி. (பிங்.) 2. See சாம்பவிதீட்சை சாம்பவி ஞானக்கண்ணினாற் சுத்திசெயல் (சைவச ஆசா. 26). |
சாம்பவி 2 | cāmpavi, n.<>jāmbava. 1. Clove-leaved black plum, l.tr. Engenia caryophyllifolia; நாவல்வகை. 2. East Indian roseapple. See பெருநாவல். (மலை.) |
சாம்பவிதீட்சை | cāmpavi-tīṭcai, n.<>šāmbhavi +. (šaiva.) A mode of religious initiation in which a guru purifies the soul of his disciple by a gracious look ; ஆசிரியன் திருநோக்கினால் மாணாக்கனது பாசத்தைச் சேதிக்குந் தீட்சை. (சைவச.ஆசா.26, உரை) . |
சாம்பவியார்விந்து | cāmpaviyār-vintu, n.<>id. +. See சாம்பவிவிந்து. (W.) . |
சாம்பவிவிந்து | cāmpavi-vintu, n.<>id. +. A prepared arsenic; கௌரிபாஷாணம். (யாழ். அக.) |
சாம்பற்கரைத்தல் | cāmpaṟ-karaittal, n.<>சாம்பல்1 +. Ceremony of pouring water on the ashes and collecting the bones after cremation ; பிரேதம் தகனமான பிறகு சாம்பலைக் கரைத்து எலும்பைப் பொறுக்குஞ் சஞ்சயனச் சடங்கு . Loc. |
சாம்பற்கீரை | cāmpaṟ-kīrai, n.<>id. +. Creeping purslane; See சிறுபசலை. . |
சாம்பற்குண்டி | cāmpaṟ-kuṇṭi, n.<>id. +. Slovenly, dirty, person; அருவருக்கத்தக்கவன். (W.) |
சாம்பற்குளி - த்தல் | cāmpaṟ-kuḷi-, v. intr. <>id. +. To bathe in ashes, to be covered with ashes, as a brooding hen ; சாம்பலிற் புரளுதல்.(J.) |
சாம்பற்பூ - த்தல் | cāmpaṟ-pū-, v. intr. <>id. +. 1. To be covered with ashes, as live embers; நெருப்பில் நீறுபூத்தல். 2. To have ashlike appearance, as fruits, leaves, etc.; 3. To grow ashy, as one's body; |