Word |
English & Tamil Meaning |
---|---|
சி 1 | ci. . The compound of ச் and இ. . |
சி 2 | ci, n. Abbreviation of சிரஞ்சீவி . |
சி 3 | ci, part. A feminine suffix, as in ஆய்ச்சி; ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 5.) |
சிஃகுவீகம் | ciḵkuvikam n. <> jihvika. See சிகுவாசன்னி. (யாழ். அக.) . |
சிக்க | cikka, adv. <>சிக்கு-. 1. [K. cikka.] In brief, in a nut-shell; சுருக்கமாக. சிக்க வுரைத்தேம் (கம்பரா. நிந்த. 79). 2.[T. tcakka.] Soundly; |
சிக்கடி 1 | cikkaṭi, n. [T. cikkudu.] Field-bean. See அவரை. (பிங்.) |
சிக்கடி 2 | cikkaṭi, n. See சிக்கல். (W.) . |
சிக்கடி 3 - த்தல் | cikkaṭi-, v. intr. <>சிக்கு3+. 1. To give out bad smell, as of oily stink; சிக்கு நாற்றமடித்தல். (W.) 2. To complicate, confuse; |
சிக்கடிமுக்கடி | cikkaṭi-mukkaṭi, n. Redupl. of சிக்கடி2. (J.) See சிக்கல். . |
சிக்கணம் | cikkaṇam, n. <>cikkaṇa. That which is glossy or slippery; மழமழவென்றுள்ளது. (நன்.273, மயிலை.) |
சிக்கத்துப்புழுதி | cikkattu-p-puḻuti, n. Wet land ploughed but not sown; உழுதும் விதைக்கப்படாதுள்ள நன்செய். (C. G.) |
சிக்கம் 1 | cikkam, n. [T. cikkaṇṭe, K. sikkaṭi.] Comb; சீப்பு. சிகைத்தொழிற் சிக்கமும் (பெருங். உந்சைக். 57, 36). |
சிக்கம் 2 | cikkam, n. <>சிக்கு2-. Emaciation, waste; மெலிவு. (திவா.) |
சிக்கம் 3 | cikkam, n. <>சிக்கு1-. Prison; சிறைச்சாலை. (W.) |
சிக்கம் 4 | cikkam, n. cf. sīsaka. (சூடா.) 1. Lead; ஈயம். 2. Silver; 3. Copper; |
சிக்கம் 5 | cikkam, n. <>šikya. [K. sikka.] 1. A net-work of rope or a string-loop for suspending pots; உறி. தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து (பதினொ. ஆளு. திருவந். 66). 2. Net; 3. Net-work, bag of net-work |
சிக்கம் 6 | cikkam, n. <>šikhā. Tuft of hair on the crown of the head; குடுமி. (பிங்.) |
சிக்கம்பலகை | cikkam-palakai, n. See சிக்குப்பலகை. Loc. . |
சிக்கர் 1 | cikkar, n. cf. சிக்கிரி. See சிக்கரத் தெளியல். (திவா.) . |
சிக்கர் 2 | cikkar, n. perh. šikhā. Persons suffering from headache; தலைநோவுடையார். சிக்கர் சிதடர் (சிருபஞ். 76). |
சிக்கரத்தெளியல் | cikkara-t-teḷiyal, n. <>சிக்கர்1+. Toddy extracted from sirissa bark; உசிலம்பட்டையிலிருந்து இறக்குங்கள். உக்கிரவூறலுஞ் சிக்கரத் தெளியலும் (பெருங். இலாவாண. 2, 180). |
சிக்கல் 1 | cikkal, n. <>சிக்கு1-. 1. Tangle, complication; தாறுமாறு. 2. Embarrassment, difficulty |
சிக்கல் 2 | cikkal, n. <>சிக்கு2-. Leanness, emaciation; இளைக்கை. (சூடா.) |
சிக்கல்பிக்கல் | cikkal-pikkal, n. Redupl. of சிக்கல்1. See சிக்கல். Loc. . |
சிக்கலாட்டம் | cikkal-āṭṭam, n. See சிக்கல். Loc. . |
சிக்கறு - த்தல் | cikkaṟu, v. tr. <>சிக்கு3+அறு2. 1. To unite a knot, disentangle; நூல் முதலியவற்றிற் சிக்குவிடுத்தல். 2. To settle an intricate business; to cut the Gordian knot; 3. To give up worldly attachment; to become an ascetic; |
சிக்கறுக்கி | cikkaṟukki, n. <>id.+. [M. cikkaṟukki.] A kind of comb; சிணுக்குவாரி. (W.) |
சிக்கறுப்பான் | cikkaṟu-p-pāṉ, n. <>id.+அறு2-. See சிக்கறுக்கி. . |
சிக்கனபாகம் | cikkaṉa-pākam, n. <>சிக்கு3-+pāka. See சிக்குப்பாகம். (பைஷஜ. 6.) . |
சிக்கனம் | cikkaṉam, n. <>சிக்கு1-. Thrift; செட்டு. Colloq. |
சிக்கனவு | cikkaṉavu, n. <>id. 1. [T. cikkana.] Hardness, strength; திண்மை. (ஈடு, 5, 8, 3.) 2. Hardness of heart; 3. Firmness of mind; 4. See சிக்கனம். |
சிக்காசன்னத்து | cikkā-caṉṉattu, n. <>U. sikka+U. sanad. Stamped grant; முத்திரையிட்ட தானசாசனம். (R. T.) |
சிக்கிமுக்கி | cikkimukki, n. cf. Turk. cakmuk. Flint used in producing fire; நெருப்புண் டாக்குங் கல். |
சிக்கு 1 - தல் | cikku-, 5 v. intr. <>K. sikku. 1. To become entangled, complicated; சிக்குப் படுதல். 2. To be tightened, as a knot; 3. [T.M. cikku.] To be caught, ensnared; 4. To be obtained; |