Word |
English & Tamil Meaning |
---|---|
சிகண்டி 2 | cikaṇṭi, n. <>šikhaṇda. 1. See சிகண்டம், 2. Loc. . |
சிகண்டி 3 | cikaṇṭi, n. Castor plant; சிற்றாமணக்கு. (மலை.) |
சிகண்டிகை | cikaṇṭikai, n. <>šikhaṇdinī. A black species of bead vine, Abrus precatorius; கருங்குன்றி. (மூ. அ.) |
சிகண்டிசன் | cikaṇṭicaṉ, n. <>citra-šikhaṇd-ja. Jupiter, as son of Citra-cikaṇdi or āṅgiras; [சித்ரசிகண்டி யென்னும் ஆங்கிரசனது புத்திரன்] வியாழன். (சூடா.) |
சிகத்துப்புழுதி | cikattu-p-puḻuti, n. perh. செய்கால்+. See சிக்கத்துப்புழுதி. (R. T.) . |
சிகதம் | cikatam, n. See சிகதை. சிகதத்தினாலி லிங்கமு மாற்றி (வேதாரணி. மணவாள. 19). |
சிகதை | cikatai, n. <>sikatā. White sand; வெண்மணல். சிலையி னீரிற் சிகதையில் (சிவதரு. பாவவி. 60). |
சிகநாதம் | cikanātam, n. cf. šikhari-ja. Mica; அப்பிரகம். (மூ. அ.) |
சிகப்பு | cikappu, n. Corr. of சிவப்பு. Colloq. . |
சிகப்புக்கலவாய் | cikappu-k-kalavay, n. <>சிகப்பு+. A species of white-spotted sea-fish attaining more than 3 ft. in length, Serranus sonneratii; மூன்றடிக்குமேல் வளரக்கூடியதும் உடலில் வெள்ளைப்புள்ளிகளைப் பெற்றதுமான கடல்மீன்வகை. |
சிகமதம் | cikamatam, n. cf. sugandhā. Galangal. See அரத்தை. (மலை.) |
சிகரப்பாடி | cikara-p-pāṭi, n. perh. சிகரம்1+படு-. Arabian costum. See கோட்டம். (மலை.) |
சிகரம் 1 | cikaram, n. <>šikhara. 1. Summit, top of a mountain; மலையுச்சி. சிகரமுயர்ந்த நெடிய மலை. (புறநா. 135, உரை). 2. Mountain; 3. Height; 4. Head; 5. Tower, turret; 6. (Nāṭya.) Gesture with one hand. See விற்பிடி. (சிலப். 3, 18, உரை.) 7. (Engin.) Crown; |
சிகரம் 2 | cikaram, n. <>šīkara. 1. Drop of water, spray நீர்த்துளி. (பிங்.) 2. Wave; 3. Horripilation; |
சிகரம் 3 | cikaram, n. <>சிரகம். 1. Dish, shallow brass plate; வட்டில். (பிங்.) 2. [வட்டில் = கரகம் misread as காகம்.] Crow; |
சிகரம் 4 | cikaram, n. <>šēkhara. Clove; கிராம்பு. (தைலவ. தைல. 105.) |
சிகரம் 5 | cikaram, n. prob. šikhara = šrṅgabēr. Dry ginger; சுக்கு. (மூ. அ.) |
சிகரம்வை - த்தல் | cikaram-vai-, v. intr. <>சிகரம்1+. 1. To put up knob on a steeple or tower; கோபுரம் முதலியவற்றின் உச்சியிற் கலசம் அமைத்தல். 2. To furnish with knobs, as in ear-ornements worn by women; 3. To speak in an impressive clever manner; |
சிகரி 1 | cikari, n. <>šikharin. 1. Mountain, as being peaked; [சிகரத்தையுடையது] மலை. கோல வருவியஞ் சிகரியும். (பெருங். நரவாண. 1, 182). 2. Tower; 3. Black heron. 4. A species of loranthus. |
சிகரி 2 | cikari, n. prob. girikā. A kind of rat; எலிவகை. (பிங்.) |
சிகரிகை | cikarikai, n. <>saikharikā. Croton. See நேர்வாளம். (சங். அக.) |
சிகரிநிம்பம் | cikari-nimpam, n. <>சிகரி1+. Persian lilac. See மலைவேம்பு. (மலை.) |
சிகரியந்தம் | cikari-y-antam, n. prob. id.+ antaka. Species of loranthus; புல்லுருவி. (மலை.) |
சிகல் 1 | cikal, n. perh. சிறுகல். (W.) 1. Want; குறைவு. 2. Ruin; |
சிகல் 2 | cikal, n. <>செயல். Action, deed; தொழில். அச் சிகலாலே . . . நாதனானவன் (திருவிருத். 68, பக். 358). |
சிகல்(லு) - தல் | cikal, 3 v. intr. perh. சிகல்1. (W.) 1. To diminish, decrease; குறைதல். 2. To perish; |
சிகலோகம் | cika-lōkam, n. <>vamšika+lōha. Eagle-wood. See அகில். (மலை.) |
சிகழி | cikaḻi, n. See சிகழிகை, சிகழியார்த்தான் (பெரியபு. தடுத்தாட். 16). |
சிகழிகை | cikaḻikai, n. prob. šikhaṇdikā. 1. Hair tied in a knot; தலைமயிரின் முடிப்பு. சிகழிகை மேல்விரித்தியாத்த (கலித். 96). 2. Wreath of flowers worn round the head, as of an idol or a great person; 3. Wreath, garland; |