Word |
English & Tamil Meaning |
---|---|
சிகைதாடு | cikaitāṭu, n. <>T. sikatādu. 1. A head ornament, especially of a child; தலையணி வகை. Loc. 2. String for fastening the hair; |
சிகைதாடுகுச்சு | cikaitāṭu-kuccu, n. <>சிகைதாடு+குச்சு3. See சிகைதாடு, 1. (W.) . |
சிகைமாலை | cikai-mālai, n. <>šikhā+māla. Wreath for the hair or head; வாசிகை. (பிங்.) |
சிங்கங்காட்டுதல் | ciṅkaṅ-kāṭṭutal, n. <>சிங்கம்1+. A child's game of acting the lion; சிங்கத்தைப்போற் காட்டும் ஒருவகைக் குழந்தைவிளையாட்டு. Nurs. |
சிங்கங்கீறு 1 - தல் | ciṅkaṅ-kīṟu-, v. intr. <>சிங்கம்3+. To count the number of ciṅkam in the game of tip-cat; கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல். (J.) |
சிங்கங்கீறு 2 - தல் | ciṅkaṅ-kīṟu, v. intr. <>சிங்கம்1+. To paint a lion with red ochre on the herpes, as a cure; அக்கிநோய்க்குப் பரிகாரமாகச் செம்மண்ணால் சிங்கவடிவா மெழுதுதல். |
சிங்கச்சுவணம் | ciṅka-c-cuvaṇam, n. prob. simhala+svarṇa. A kind of superior gold; ஒருவகை உயர்தரப் பொன். தீதுதீர் சிறப்பிற் சிங்கச்சுவணமென் றோசை போகிய வொண்பொன் (பெருங். வத்தவ. 11, 23). |
சிங்கட்டான் | ciṅkaṭṭāṉ, n. perh. சிங்கம்1+அடு-. Thorny blue-druped featherfoil. See முள்வேங்கை. (L.) |
சிங்கடியப்பன் | ciṅkaṭi-y-appaṉ, n. <>சிங்கடி+. Cuntaramūrtti-nāyaṉār, as the foster-father of Ciṅkaṭi; [சிங்கடி யென்ற பெண்ணுக்குத் தந்தையானவர்] சுந்தரமூர்த்தி நாயனார். சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடியப்பன் (தேவா. 735, 11). |
சிங்கணந்தம் | ciṅkaṇantam, n. See சிங்கநந்தம். (பரத. தாள. 3.) . |
சிங்கத்திசை | ciṅka-t-ticai, n. <>சிங்கம்1+. (Astrol.) South; தெற்கு. (W.) |
சிங்கநகக்கை | ciṅka-naka-k-kai, n. <>id+ நகம்+. (Nāṭya.) Gesture with one hand, in which the fingers are so held as to resemble a lion's claws; ஒருகையின் விரல்களைச் சிங்கநகங்கள் போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை. (பரத. பாவ. 38.) |
சிங்கநகம் | ciṅka-nakam, n. <>id.+. See சிங்கநகக்கை. (W.) . |
சிங்கநந்தம் | ciṅka-nantam, n. <>simhanandana. (Mus.) An intricate variety of time-measure consisting of 32 māttirai, one of five upa-tāḷam, q. v.; முப்பத்திரண்டு மாத்திரைகொண்ட உபதாளவகை. (தாளசமுத்திரம்.) |
சிங்கநாதம் 1 | ciṅka-nātam, n. <>சிங்கம்1+. 1. Lion's roar; சிங்ககர்ச்சனை. 2. War-whoop, battle-shout; 3. Trouble, vexation; |
சிங்கநாதம் 2 | ciṅka-nātam, n. <>šrṅga+nāda. Horn, a wind-instrument; ஊதுகொம்பு. உடன்சிங்கநாதங் கிடந்தசைய (திருவிளை. உலவாக். 7). |
சிங்கநோக்கு | ciṅka-nōkku, n. <>சிங்கம்1+. 1. Looking over the shoulder with neck turned, as a lion; சிங்கத்தைப்போலக் கழுத்தைத் திருப்பிப் பார்க்கை. சிங்கநோக்கிற் பணையெருத் துறழநோக்கி (சீவக.1569). 2. A mode of setting a sūtra in a treatise. |
சிங்கப்பல் | ciṅka-p-pal, n. <>id.+. Projecting extra tooth; முன்புறம் நீண்டுள்ள துணைப்பல். |
சிங்கப்பிரான் | ciṅka-p-pirāṉ, n. <>id.+. Viṣṇu in His Man-lion incarnation; நரசிங்க மூர்த்தி. சிங்கப்பிரான் பெருமை யாராயுஞ் சீர்மைத்தே (திவ். திருவாய். 2, 8, 9). |
சிங்கப்பெருமாள் | ciṅka-p-perumāḷ, n. <>id.+. 1. See சிங்கப்பிரான். . 2. Holy basil. |
சிங்கபஸ்மம் | ciṅka-pasmam, n. <>šrṅga+. A medicinal powder. See சிருங்கபஸ்மம். Loc. |
சிங்கபாதம் | ciṅka-pātam, n. <>simha+. Legs of vessels or vessel-stands in the shape of lion's feet; சிங்கத்தினடிபோன்று அமைக்கப்படும் கால். தாரைத்தாள் வட்டில் ஒன்று கருக்கிரண்டுஞ் சிங்கபாத மிரண்டும் உட்பட (S. I. I. II, 5). |
சிங்கம் 1 | ciṅkam, n. <>simha. 1. Lion; மிக்கவன்மையுள்ள ஒரு விலங்கு. மாற்றுச் சிங்கத்து மறக்குரல் (பெருங். உஞ்சைக். 47, 111). 2. Leo, the fifth sign of the zodiac; 3. A title, chiefly among Vēḷāḷas, as in பாலசிங்கம்; |
சிங்கம் 2 | ciṅkam, n. <>simhī. Malabar-nut. See ஆடாதோடை. (மலை.) |
சிங்கம் 3 | ciṅkam, n. <>srṅga. 1. Horn; கொம்பு. 2. Tender plantain; 3. Distance of seven or sometimes ten sticks in the game of tip-cat, measured from where the cat falls to the goal; |
சிங்கம் 4 | ciṅkam, n. A mineral poison; சரகாண்டபாஷாணம். (மூ. அ.) |
சிங்கம்பட்டு | ciṅkam-paṭṭu, n. A kind of betting game in which small coins are tossed up, heads winning and tails losing; நாணயத்தைத் தூக்கியெறிந்து அது விழும் பக்கங்களைக் கொண்டு வெற்றிதோல்விகளை நிச்சயிக்கும் பந்தய விளையாட்டு. Loc. |